கவிதைகள் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் ... லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஜூலை, 2015

ஆசை சொல்லா...

உன் எண்ணத்தை
சொல்லாமல் சொல்லும்
ம்ம்ம் என்னும்
உன் ஒரு சொல்லை
ஆசை சொல்லா
இல்லை
ஆச்சிரிய சொல்லா?
ம்ம்ம்ம் எப்படி எடுத்துக்கொள்வது

4 பிப்., 2014

விவசாயி...

விதைத்து பார்த்து 
விடை கிடைக்கவில்லை 
விற்று பார்த்து 
வியந்து போனான் 
விவசாயி...

1 ஆக., 2013

பந்தமாய்...

மலர்கள் திருமண பந்ததுக்கும் 

மரணத்துக்கும் பந்தமாய்...

ரணமான மனதுக்கு மங்கையின் கூந்தலில் 
சொந்தம் கொண்டாடும் மலர்கள் ஆறுதாலாய் 

வரவேற்பு அறைகளை அலங்கரிக்கவும் 
வாஸ்த்துக்கும் மலர்கள் முன் நிறுத்த படுகிறது 

நமது வாழ்வில் ஒன்றாய் வலம் வரும் மலர்கள் 
வாசம் வீசும் மலர்களும் ,மனதை ஈர்க்கும் அழகு மலர்களும் 

நமது பயணத்தில் தொடரும் ...
மலர்கள் தான் பெண்ணுக்கும் பொருளாய் 
பாடலுக்கும்,உவமைக்கும் வழுவாய் இன்னும் 

மலர்கள் இல்லாத வாழ்க்கை இல்லை 
மலரை நேசிக்காத உள்ளமுமில்லை...

இணக்கமாய் மலர்...

பூக்களில் ஆனவமில்லை 
பூக்க மறுத்த செடிகளுமில்லை...
மனிதா அறிந்துக்கொள் 
பூக்களை பார்த்து புரிந்துக்கொள்...


மனமும் மணமும் 
மயக்கும் குணமும் 
ஒன்றாய் மலருக்கு...


இரவுக்கும் 
இறப்புக்கும் 
இணக்கமாய் மலர்...


உதிரிய மலர் எருவாய்
உருமாறும் 
வண்டுக்கு கொடுத்து 
தேனாய் இனிக்கும்...



வருடங்கள் உனக்கு வரலாறு 
சொல்லும் 
பூக்களோ இருக்கும் வரை 
அழகை சொல்லும் 
இல்லறத்தை வளர்க்கும் 
இருக்கும் 
இடத்தை அலங்கரிக்கும்...

7 ஜன., 2013

கண்கள்...

மையும் பொய்யும் 
கலந்த கவிதை 
கண்கள்...
================
ஒரு நொடி பார்த்தாய் 
தப்பாய் போனது 
பாதை ....
==================
கணக்கு பார்க்கும் 
கண்களுக்கு 
காதல் புரியாது 

காதல் சொல்லும் 
கண்களுக்கு 
வாழக்கை தெரியாது ...
=======================


4 ஜன., 2013

புதிய வண்ணத்தோடு












வண்ணத்தை 
பூசிக்கொண்டன 
இலைகள்...
==================
இலைகளும் 
மருதாணி 
பூசிக்கொண்டதோ
====================

காதல் எண்ணத்தில் 
புதிய வண்ணத்தோடு 
இலைகள்...
=====================

தென்றல்...

தென்றலை கண்டதும் 
மழை 
வரவேற்றது...
=====================
மழை மீது 
தென்றலுக்கு கோபம் 
குடைபிடித்து 
வெளிநடப்பு...
=====================
மழையின் ஆசை அறிந்து 
தென்றல் குடைப்பிடித்து 
ஊர்வலம்.....
=========================

இடை நனைக்க
இடி 
மின்னல் 
மழையோடு சேர 
இடை மறைத்தது 
குடை....