துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
துளிப்பாக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

25 ஆக., 2012

அப்பா...

அம்மா இறந்தாள் 
சுமங்கலியாய் 
பிள்ளைகளுக்கு 
அப்பா இனி 
சுமையாய் ...!
======================

அம்மா இறந்த பின் 
ஒதுக்கப்பட்ட 
ஜடமாய் அப்பா...!

======================

அம்மா இறப்பு 
பேசி பேசி 
கடைசியில் அப்பாவுக்கு 
இடம் முதியோர் இல்லம் 

=======================
கைப்பிடித்து நடை பழகிய 
மகன் சொன்னான் 
கை தடியை நான்றாய் 
பிடித்து நடந்தால் என்ன...!

24 ஆக., 2012

மழையின் நடனம்



ஒதுங்கி  நடந்து 
மழையோடு போராட்டம் 
நனைத்தது பண்டிகையை 
உடையை...
=========================

குடைக்கு கொண்டாட்டம் 
சொன்னவிலைக்கு 
விலைப்போனது
மழைக்காலம்...

==========================
வறுமை  பூமிககு 
அன்ன தானம் 
மழை...!
=======================
இடி ஓசையோடு 

காற்று கவிதை பாட 

மின்னல் வெளிச்சத்தில் 
மழையின் நடனம் !


ஆயுதம்...!


பெண்களின் கண்களே 
உலகின் முதல் 
ஆயுதம்...!
======================
கண்ணுக்குள் 
வலையை விரித்து 
ஆண்களை 
அலைய விட்டு 
அழகு பார்க்கும் 
மாயக் கண்ணாடி..!
======================

7 ஏப்., 2012

கண்ணீர்...எனது 600 வது பதிவு




இறப்புக்கும் புதிய பிறப்புக்கும்,
சோகத்தோடும் ஆனத்தோடும்,
பதிவு செய்தன 
கண்ணீர்த் துளிகள் !
------------------------------------------------------------

உணர்வுகளை உண்மையாக்கும் 
உன்னத நண்பன்
கண்ணீராய் 
வருவான் 

அமைதியை  தருவான்...


=================================


சோகங்களை இணைத்து 
இரு கண்கள்  நடத்தும் 
போராட்டம் .
==================================

சின்னச் சின்ன பூக்கள் 
சிரித்து அழுது இறந்தன
கண்ணீர்த்துளிகளாய்!
--------------------------------------------------------------

காதலைப் பற்றி 
கண்கள் எழுதிய 
மறைக்க முடியா கவிதை....












30 மார்., 2012

கூந்தல்... துளிப்பாக்கள்!





காற்றே என்னவளின் 
கருப்புக் கவிதைகளை 
கலைத்து விடாதே!
======================



கார்குழலை பெண்ணின் 
தலைக்கு கிரீடமாய் 
வைத்துப்போனவர் யார் ?

========================


காரிகை காற்றில் சிரித்து 
உன்னை உரசிப்பார்க்கும்போது 
பொறாமை தான் எனக்கு.


=========================


13 ஜன., 2012

வறுமை...துளிப்பாக்கள்.






வயிறு செய்த
களங்கம், இந்த
வறுமையின் காயம்.


===========================
அம்மா பிச்சை போடுங்க.
வறுமையின் கூப்பாடு
இல்லை மதத்தின் கோட்பாடு.


============================

வாழ்க்கையின் விலாசத்தை
அறிந்து வந்து போகும் 

வறுமை
ஏழைகளின்  பங்காளி.


===============================

வறுமையின் நிறம் சிவப்பு
ஏழைகள் என்றால் உகப்பு,
வந்துவிட்டால் 

வெறுத்துவிடும் பிறப்பு.

=================================
இளமையும் வறுமையும்,
சண்டைப்போட்டால்...
இளமை இணங்கி 

வறுமைக்கு வழிவிடும்
குற்றங்கள் செய்ய 
துணைப்போகும்....
==================================
வாழும் போது
பசியை தந்து 
உயிர்களை அபகரித்து 
கொண்டது வறுமை...
====================================

28 டிச., 2011

மழையின் காதலுக்கு...




மழையின்
காதலுக்கு
எழுதிய கவிதைகள்
தூறலாய் தூறப்பட்டன 

பூமிக் காதலிக்கு!
=============================

இடியின் துணையோடு,
மின்னலில் பூவெடுத்து
பூமிக்காதலிக்கு 
சூட்டப்பட்ட
மாலையே 
இந்த மழை!

========================

மேகத்தின் மோகத்தில்,
மழை காமம் கொள்ள,
கர்ப்பம் தரித்தாள்
பூமிக்காதலி !
தாவர குழந்தைகளை
பெற்று யெடுத்தாள்!


=====================

மழை காதலனுக்கும்
பூமிக்காதலிக்கும்,
சண்டையாம்,
மழையின் அழுகை
வெள்ளமாய் ஓடியது!

============================

பூமியின் மேல் கொண்ட
மழையின் காதலுக்கு,
கறுப்புக்குடை பிடித்து,
எதிர்ப்புத் தெரிவித்து
ஒதிங்கினர்
மனிதர்கள்!
=============================

24 டிச., 2011

கூந்தல் தந்த துளிப்பாக்கள்!



கார்மேகம் 
இந்த பெண்ணோடு
உறவாடுதா இல்லை
இடையோடு 
கொஞ்சிப்பேசுகிறதா
================================

காரிகை 
காற்றில் சிரித்து
உன்னை 
உரசிப்பார்க்கும்போது
பொறாமை தான் எனக்கு.

============================

கார்குழலை 
பெண்ணின்
தலைக்கு கிரீடமாய்
வைத்துப்போனவர் யார் ?

============================

ஒரு கருப்பு 
நீர்விழ்ச்சி,
காற்றில் 
கவிப்பாடியதை
இன்று தான் பார்க்கிறேன்.

=============================

காற்றே என்னவளின்
கருப்புக் கவிதைகளை
கலைத்து விடாதே...

15 டிச., 2011

இந்த அருவியே சாட்சி!


மேகம் எழுதியவைகளை
மலை பிரசிவித்தது
வெள்ளைக் கவிதையாய்.
=========================
மேகத்தின் சூழ்ச்சி
மகிழ்ச்சி கண்டது
வீழ்ச்சியோடு 
அருவியாய் மாறியது .
========================
மலைக்க வைக்கும் 
இந்த காட்சி
மேகத்தின் மோகத்துக்கு
இந்த அருவியே சாட்சி!
=========================
மலைக்கும் காதல்
மேகத்தோடு கூடல்,
அருவியாய் சொன்னது .

9 டிச., 2011

குப்பைத் தொட்டி



தாயின் கருவறைகள்
தந்த உயிர்களுக்கு
அடைக்கலம்.
==================

குப்பைத் தொட்டி
கருவறைகளாய் மாற
குப்பையானது சில
தாயிகளின் கருவறைகள்
====================
காதலில் இணைத்து 
காமத்தில் கலந்து 
கலைக்கமுடியா கருவுக்கு 
முகவரி...
=====================

18 நவ., 2011

கவிதை!துளிப்பாக்கள்...



கனவில்  கலந்து
கற்பனையில் உறவாகி     
கருவுற்றது கவிதை!
=============================
கற்பனைக்கு நிலவோ
பெண்ணாகி கவிதைக்கு
உயிராகியது.
==============================
கற்பனை கனவோடு 
இரவுக்குள் நுழைந்து 
மறுநாள்  மறுபிறவி
=============================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

11 நவ., 2011

மலர்கள் ( துளிப்பாக்கள்)
















மணம் வீசும் கொழுந்து,
மயக்கும் பொழுது, மனதை
கொள்ளைக் கொள்ளும், மரிக்கொழுந்து.


=======================================

காதலர்களின் சின்னம்.
நிறத்திலோ பல வண்ணம்,
சிகப்பு ரோஜா என்றே சொல்லும்.

==================================
நிலவின் வருகையை கண்டு
எழுத துடிக்கும் மலர்க் கவிதை.
மலர்ந்த அல்லி.
=================================

சூரியனின் கண் பட்டு
தன்னை மறக்கும் இழக்கும்
தண்ணீர்த் தாமரை 

======================================
என்யவளின் கூந்தலுக்கு,
வரையப்பட்ட அழகு ஓவியம்
மல்லிகை 



=============================
மனதில் பதிந்த மணம்
மெல்லிய இடைச் சொல்லும்
இது முள்ளில்லா முல்லரும்பு.
================================





உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

24 அக்., 2011

கண்கள்...!துளிப்பாக்கள்!


கண்டவர்களை ஈர்க்க,
மையோடு பொய்ழுதிய
கவிதையிது!
=============================
இமை முடி திறந்து,
மெய்மறக்க செய்யும்,
போதை இது!
===================================
அரசன் முதல் ஆண்டி வரை
அடிமை படுத்திய,
சூத்திரமிது!
===================================
சூழ்ச்சிக்குள் இரையாக்கும் 
வேதியல் உருமாற்று
உலோகமிது .
===================================
கண்ணுக்குள் மையிட்டு
இமைக்குள்  இணங்கவைக்கும்
ஆயுதமிது!
===================================
கன்னியரின் கண்பட்டால் 
போதும், கால் கடுக்க 
நிறுக்கும் உலகமிது!
==================================
இவள் இமை முடி சிரித்துவிட்டாள்
காதல் என்று கொள்ளும் 
காளையர் பூமிது!

எய்ட்ஸ்!துளிப்பாக்கள்.



விடியும் வரை கட்டில் பாடம் 
விபரிதமறியாமலே விண்ணப்பம்
எய்ட்ஸ் ஏற்றுக்கொண்டது!
================================
இருந்ததை கொடுத்து
இரவில் வாங்கியது 
அழிக்கும் எய்ட்ஸ்!
=================================
விடிய விடிய சொல்லியும் 
விழிப்புணர்வு வரவில்லை 
எய்ட்ஸ் வரும்வரை!
=================================
இவன் விரும்பியதை நடத்த 
அவள் இருந்ததை தந்தாள்.
எய்ட்ஸ்!
==================================


விலைமகள் !துளிப்பாக்கள்.


வாசிக்கத் துடித்தவர்கள்,
வாசித்தப் பின் தந்த பட்டம்
வேசி, தாசி !
===============================

நேயர் விருப்பத்திற்கு பின்
தன் குழந்தைக்கு
தலாட்டுத் தொடரும்.
================================

விலைப் பேசி,வீழ்ந்தபின்
விடிந்தவுடன் சொல்கிறான்,
விலை மகள் என்று.
================================

15 அக்., 2011

உதடுகள் எழுதிய கவிதைகள் .




உதடுகள் எழுதும்
காற்றுக் கவிதை
இசையாய் வந்தது.

===================
காற்றுக்கும் காதலாம்
மூங்கிலில் கவிதைப் பாடியது
புது இசையாய்!
---------------------------------------

உதடுகள் பேசும்
காற்றின் வார்த்தைகளை
இசையாய் மொழிபெயர்த்தது.
-------------------------------------
மூங்கில் முகம் கண்டு
உதடுகள் மீட்ட காற்றும்,
இசையாய் உரு மாறும்

28 ஜூலை, 2011

பேருந்து! பற்றிய துளிப்பாக்கள்!



மூட்டைகள் போல 
திணிக்கப்பட்ட மனிதர்கள்
அரசு பேருந்து!

==================

பழைய காதலை,
                                                தூசித்தட்டி சொன்னது,
கல்லூரி பேருந்து!
==================


அழுது,அடம்பிடிக்க,
அமுக்கப்பட்ட நிலையில்,
பள்ளிப் பேருந்து!

===================


சர்க்கஸ் ஆட்டத்துடன்,
திரைப்பாடல்கள் ஒலிக்க
புழுதியோடு கிராமத்து பேருந்து!

=========================




28 பிப்., 2010

காற்றில் கலப்படம்.




நச்சுகளை வெளியிடும்
தொழிற்சாலைகள்...

இவர்களுக்கு பெயர்
தொழிலதிபர்கள்.