கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 ஜூலை, 2016

முகத்தை நீ காட்டு



தேடும் நிலையில் நான் 
மறைந்த நிலையில் நீ ...

ஏனடி இந்த விளையாட்டு 
மறைந்த நிலையில்

மறைத்த உன் 
முகத்தை நீ காட்டு

13 ஆக., 2015

புத்தகம் சிரித்தது...!

மேடை பேச்சு
கைத்தட்டல் பெற்றார்
மூடி வைக்கப்பட்ட
புத்தகம் சிரித்தது...!


24 பிப்., 2015

நட்போடு

வலிகளுக்கு 
ஆறுதல் 
தேடி அழைந்தேன்
நீ அந்த வலிகளை தாங்க 
நட்போடு 
உன் இதயத்ததை
தந்தாய்..!


25 டிச., 2014

நட்பூ வாசம்..!

ஒரே சொல்
அன்பு கொள்
தோள் சாய்ந்து
வேதனை கொல்.

ஏனெனில்
வேசம் கடந்த
மனதுக்குள் பாசம்
நேசம் காட்டும்
நட்பூ வாசம்..!


22 டிச., 2014

இரும்பும் மெழுகாய்...

தடை போட்ட போது
இடை பட்ட நேரத்தில்
இடை படும்போது 
இரும்பும் மெழுகாய்...

13 டிச., 2014

உன் வழி நடக்க...

உன் விழி நீரும்
ஆனந்தமாய்
அணிவகுக்க...
விழி நிலவே
நான்
உன் வழி நடக்க
வகை செய்..!

தந்த போதிலும்...!

நித்திரை சிறைப்பட்டது
விழித்திரை
திறக்கப்பட்டது..!
உன் வருகை 
கனவு என
விடை சொன்னது..
இருந்தால் என்ன
வந்தது நீ என்பதால்
கனவாய் போனாலும்
மனமும் மகிழ்ச்சியில்
தூக்கம் துக்கம்
தந்த போதிலும்...!

நீ இன்னும்...!

இன்னும் எத்தனை
நாள்
இந்
இதயத்திரையில்...!
காத்திற்கும்
காலமெல்லாம்
காதலாய் 
இன்னும் எத்தனை 
நாள்
இந்த போரட்டம்..?
முடிவு அறியா
நெடுந் தொடராய்
இதயத்திரையில்...!
காத்திற்கும்
காலமெல்லாம்
காதலாய்
காற்றாய்
கவிதையாய்
என்னோடு
உணர்வோடு
கலந்தவளாய்
நீ இன்னும்...!
காற்றாய் 

கவிதையாய்
என்னோடு
உணர்வோடு
கலந்தவளாய்
நீ இன்னும்...!

கொல்கிறது...!

உன்னை பார்த்த பின்
விட்டு விட்ட இடத்திலிருந்து
தொடர நினைத்து...
காலங்கள் ஒடினாலும்
கண்ணை மூடினால்
மனக்கண்ணில் உன்
புதிய முகம் கொல்கிறது...!

மறைக்க முடியாது...!

வார்த்தைகள்
தான் வாழ்க்கைக்கு
அவசியம்...
சிந்தும் வார்த்தைகள்
திசை மாறி போனால்
நேசம் மாறி போகும்
மனம் வாடிப்போகும்...!
உடைக்கப்பட்ட
கண்ணாடிப்போல்
சேரமுடியாது
ஒட்டி வைத்து பார்த்தாலும்
உடைத்ததை மறைக்க முடியாது...!

முதியோர் இல்லதில்

பாத்து போப்பா
மறக்காம 
அடுத்த மாதமும்
வந்து போ
முதியோர் இல்லதில்
அம்மா....

வாலிப கணக்கில்

வாலிப கணக்கில்
மிச்சமிருப்பது
உன் நினைவு ஒன்றுதான்..!

17 நவ., 2014

தீராத அழகி

வாளை விட 
செவ்வாழை இதழுக்கு,

ஏது ஈடுயிணை!


வில்லைவிட 
உன் இமைகளுக்கு 
கூர்மை!

ஆயுத்ததைவிட 
இளமையான உடலுக்கு 
வலிமை!

நீயோ
தீராத அழகி
திமிர் படித்த ஜாதி!
தீ பிடிக்கும் 
வழி!


அணக்க சொல்லடி
அடைங்கி போக 
வாடி...

நானோ 
தீவிரவாதி!
ஏன் இன்னும் 
விலகி...



விடைச்சொல்லு 
அழகி!
தடையின்றி 
இடைவெளி குறைத்து 
செய்துவிடு என்னை 
வதம்!
விட்டுவிடு 
உன் பிடிவாதம்!

நமக்குள் 
போட்டிகள் எதற்கு ?
போர் தொடுப்பேன் 
உனக்கு!
போர்வையாய் நீ 
எனக்கு!



16 நவ., 2014

அச்சமில்லை!

அச்சமில்லை! அச்சமில்லை!
உன் வாழ்விலே!
வரும் தோல்வியெல்லாம் 
இறந்து போகுமே!
நீ துணிந்து நின்றால்,
அச்சமில்லை! அச்சமில்லையே!

வஞ்சமில்லை வஞ்சமில்லை 
காணும் வாழ்விலே!
வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம் 
நடுங்கி ஓடுமே!
நீ எதிர்த்து போரிட்டால் 
வெற்றி உன் வசமே!

பயமில்லை பயமில்லை 
வாழும் வாழ்விலே !
மலையென எரிமலையென 
எழுந்தால் நீயே!
உன் பகைவனை
 ஜெயிப்பாயே
அவனை அழிப்பாயே!

ஏமாற்றத்துடன்

தொடர் மழை தான் 
விடுமுறையில்லை 
ஏமாற்றத்துடன் 
குழந்தைகள்...!

என்னை உடுத்திக்கொள்.

காதல்
மழையில் நனைத்து
துவைத்து
சலவை செய்யப்பட்டது மனது.

இன்னுமா புரியவில்லை
உன் வருகைக்காக தான்டா.
காதல் குளிரில்
கமபளி எதற்கு
நான் இருக்கும் போது...!
நீ சொல்ல வேண்டியது
நான் சொல்லுகிறேன்
புரிந்துக்கொள்
என்னை உடுத்திக்கொள்.

காதல் ஊற்றே...

காதல் ஊற்றே
என்னை காப்பாற்று
அவள் மீது பற்று
அது தீயாய் பற்றி எரிவதை கண்டு
காதல் ஊற்றே
என்னை காப்பாற்று...!


காற்றே கொஞ்சம் நிறுத்து
அவள் நடந்து போகும் போது
காரிகை கலைந்து விடாமலும்
முந்தானை பறந்து விடாமலும்
அவளை காப்பாற்று..!

உற்று பார்க்கும் அவள் விழியில்
என் மீது பற்று கொள்ள
நேற்றும் நான் இங்கு இருந்தேன்
இன்றும் நான் இருக்கிறேன்
நாளை தொடர்வேன்...
அதற்குள் என் காதலை
அவள் அறியட்டுமே
அதுவரை
காலமே என் காதலை
காப்பாற்று..!

மறந்து போகிறேன்...

உன் பேச்சிலும் 
சிரிப்பிலும் 
தொட்டு பேசும் நிலையிலும் 
உன்னோடு இருக்கையிலும் 
கலந்தே போகிறேன் 
அதில்
கரைந்தும் போகிறேன்
தன்னிலை துறந்து
என்னை மறந்து போகிறேன்...