சிரிக்க மட்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிரிக்க மட்டும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 செப்., 2012

மெடிக்கல் டீ போடுங்க...சிரிக்க மட்டும்,


எனக்கு சாதா டீ ,மச்சானுக்கு மெடிக்கல் டீ போடுங்க...

அது என்ன மெடிக்கல் டீ ?

மச்சானுக்கு இனிப்பு நீர் , சக்கரை இல்லாத டீ தான் 
மெடிக்கல் டீ...
=============================================
தலைவர் இப்ப எல்லாம் மோதிரத்தில் கூட 
கல் வைக்காமல் தான் போடுகிறார் 

ஏன் 

அதையும் கிரானைட் கல் என்றும் சொல்லிவிடுவார்கள் 
என்று பயம் தான்...
===============================

29 செப்., 2012

அவர் ராசிக்கு...சிரிக்க மட்டும்,


கட்சியை விட்டு செயலாளர் ,தலைவர் இருவரையும் நீக்கி விட உத்தரவுவிடுகிறேன்...

தலைவரே உப தலைவர் என்று சொல்லாமல் தலைவர் என்று 
தவறா சொல்லிவிட்டீர்கள் 
=======================================
ஏன் தலைவர் கட்சிலிருந்து யாரையாவது தினம் நீக்கி 
பின் மன்னித்து விட்டேன் என்று சேர்த்து  வருகிறார் ?

அவர் ராசிக்கு நீக்கி பின் சேர்க்கனுமாம் அதான்...
==========================================

24 ஜூன், 2012

பழகிவிட்டால்...சிரிக்க மட்டும்,


என்னாப்பா நம்ம கட்சி ஆபிஸ், சிறைசாலை மாற்றி விட்டார் தலைவர் 

இப்படி இருந்து பழகிவிட்டால் பயப்பட தேவையில்லை அல்லவா அதுக்கு தான்...

===============================================
என்ன நம்ம கட்சி மாநாட்டு பந்தல் சிறைசாலை போல செய்து விட்டார்கள் ஏன் ?

சிறை சென்று வந்த தலைவருக்கும் . தொண்டர்களுக்கு பாராட்டும் மாநாடு தானே இது! இருந்த இடத்தை மறக்காமல் இருக்கத்தான் 
இந்த ஏற்ப்பாடு =================================================

5 ஜூன், 2012

இது டூ இன் ஒன் ..சிரிக்க மட்டும்,

நிருபர் :

உங்கள் கைதுக்கு உங்கள் கட்சியிலிருந்து எந்த வித 
எதிர்ப்பும் வரவில்லையே...

தலைவர்.

என்னுடைய கைதை கண்டித்து ஆயிரகணக்கான 
தொண்டர்கள் தீக்குளிக்க முன்வந்த செய்திக் கேட்டு 
பெட்ரோல் விலையை ஆளும் கட்சி ஏற்றிவிட்டார்கள்
இதனால் தான் அதை கைவிட்டுவிட்டோம்...
================================================
பெட்ரோல் விலையை கண்டித்து தலைவருடைய 
போராட்டம் ரொம்ப நூதனமா  இருக்கே...

தலைவருக்கு லாரி ஓட்ட ஆசை ஆனா ஓட்ட தெரியாது 
அந்த ஆசையை போக்கத்தான் இப்படி செய்துவிட்டார் 
இது டூ இன் ஒன்...போராட்டத்துக்கு போராட்டம் 
ஆசையும் நிறைவேறிவிட்டது 

4 ஜூன், 2012

வெளிநாட்டு சதி...சிரிக்க மட்டும்,





தலைவருக்கு பிரச்சனை என்று வந்தால் பல ரூபத்தில் 
வருது பாவம் அவர்...


அப்படி என்ன தான் வருது...


ஊழல் விஷயமா ரெய்டு நடந்த போது, முதலில்
சின்ன வீட்டுக்கு போனதால் ,கட்சியில் தனக்கு 
இதில் கூட முக்கியத்துவம் இல்லை, என்று பெரிய 
வீட்டு அம்மா சண்டைக்கு வராங்களாம்...
=======================================

ஏனப்பா உன் தேர்வு முடிவு என்ன ஆச்சி ?

நான் முன்னேறுவது யாருக்கோ பிடிக்கவில்லை...

ஏன் புட்டுகிச்சா ?

இது வெளிநாட்டு சதி வேலை
இதை வன்மையாய் கண்டிக்கிறேன்...

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது

சிரிக்க கொஞ்சம் கடி....


என்னதான் போட்டோகிராபரா இருந்தாலும்
பிணத்தை சிரிக்க சொல்லி எடுக்க முடியாது....


========================================
கரப்பான் பூச்சிக்கு பிடிக்காத வார்த்தை எது தெரியுமா ?


எது?


HIT வார்த்தை தான் என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
=================================

எனது வாத்தியாரும் கோழியும் ஒன்னு 


எப்படி ?


இரண்டு பேருக்கும் நல்லா முட்டை போடத்தெரியும்..
=======================================

பேஷனுக்கும் ரேஷனுக்கும்  ஒருஒற்றுமை உண்டு ?


பேஷனுக்கு போனால் உடை குறையும் 
ரேஷனுக்கு போனால் எடை குறையும்...
======================================



3 ஜூன், 2012

கொசுக் கடி





மணமக கொசு:


எறும்பை கலப்பு திருமணம் செய்துக்கொண்டது 
தப்பா போச்சு மச்சான்....


தோழன் கொசு:


என்ன ஆச்சு அதுக்குள்ளே...?


மணமக கொசு:


முதல் ராத்திரி அதுவுமா குட் நைட் சொல்லிவிட்டு  
குட் நைட் போட்டு தூங்கறாடா மச்சான்...  என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
=======================================
கொசுக்கு பிடிக்காத வார்த்தை எது தெரியுமா 


குட் நைட் தான்....மகிழ்ச்சிமகிழ்ச்சி
======================================

1 ஜூன், 2012

தலைவர் சொன்னதை...சிரிக்க மட்டும்,


தலைவர் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல்  
எதிர் கட்சி தலைவர் மன்னிப்பு கேட்டாரா ?

ஆமா ஆர்பாட்டத்தில் தலைவர் உருவ பொம்மையை 
எரித்தபோது அவர் போல இல்லையாம்...
இதை எதிர் கட்சி தலைவரும் ஆமா என்றும் இது போல 
தவறு இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் 
மனித்துக்கொள்க என்று கேட்க வைத்துவிட்டார் நம்ம தலைவர்...
==================================================



தலைவர் சொன்னதை கேட்டு நீதிபதியே மயக்கம் போட்டு கிழே விழுந்துவிட்டார்...


அப்படி என்ன சொன்னார் 

தான் லஞ்சம் வாங்கியது லஞ்சம் ஒழிப்பு துறை வேலை 
செய்கிறதா என்று பார்க்க தான் என்று சொன்னார்..



ரொம்ப நல்லவன்..சிரிக்க மட்டும்,





எங்க வீட்டுக்கு வந்த திருடன் கோடிஸ்வரன் நிகழ்ச்சி 
போல நான்கு ஆப்ஷன் சொல்லி அதில் நாம் 
சொல்லும் சாமான்களை மட்டும் தான் 
திருடிவிட்டு போனான் 



திருடனில் இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லு...
===================================
எங்கவீட்டுக்கு வந்தவன் ரொம்ப புத்திசாலி 


எப்படி சொல்லுறே?


திருட உங்க வீட்டில் 
ஒண்ணுமில்லே சும்மா வெறுங்கையோடு 
போனால் உங்களுக்கு தான் அசிங்கம் உங்கள் 
தங்கப் பல் செட்டை கொடுங்க என்று 
கேட்டு வாங்கிட்டு போனான்...
====================================

30 மே, 2012

ரீ சார்ஜ்...சிரிக்க மட்டும்,




காதலி 


நம்ம காதல் எங்க அப்பாவுக்கு தெரிந்து போய் 
ரொம்ப கோபம் பட்டார்...


காதலன்:


ஒன்னும்பிரச்சனை இல்லையே 


காதலி:



நீங்கள் அவர் மொபைலுக்கு ரீ சார்ஜ் பண்ணுகிற வரை 
கோபம் இருக்க தான் செய்யும்..

காதலன்:


ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்ஆழவிடுங்கப்பா நானில்
====================================
காதலி::


எனக்கு உங்களால் என் அப்பாகிட்ட மானம் போச்சு 



காதலன்:

நான் ஒன்னும் தப்பு செய்யவில்லையே...

காதலி:

என்னை நீங்கள் காதலித்து ஐந்து மாதம் பத்து நாளாகி 
இன்னும் அவர் மொபைலுக்கு 
ரீ சார்ஜ் பண்ணவே இல்லையாம்...


காதலன்:

தலைசுற்றுதா தலைசுற்றுதா 
தலைசுற்றுதா


கைபுள்ளே...சிரிக்க மட்டும்,


கைபுள்ளே எனது பயந்த சுபாவத்தை படம் பிடித்து 
காட்டிபுட்டான்களே 

=================================================



தலைவர் என்ன குளிக்கும் போது பிடித்துகொண்டு 
குளிக்கிறார்?


எதிர் கட்சி சதி பாத்ரூம் வரை வந்தாலும் வரலாம் 
என்று ஒரு எச்சரிக்கைக்கு தான்...
================================================

29 மே, 2012

வருங்கால... சிரிக்க மட்டும்,



அப்பா கொஞ்சம் நிறுத்துப்பா ...

ஏன்டா?

நான் கேட்ட பணம் தரலே உன்கிட்ட 
லைசன்ஸ் இல்லே என்பதை அந்த 
போலீஸ் கிட்ட சொல்லிபுடுவேன்....

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
===================================
ஆளும்கட்சி கொடியை கட்டிக்கிட்டு வந்தால் 
நோ பார்கிங்லே பாதுகாப்பு இருக்கும் 
என்று சொன்னப்போ நம்மாமல் சிரித்தாய்
 இப்ப பார்த்தியா....
=====================================

நல்லவனப்பா...சிரிக்க மட்டும்,



அப்பா நீ ரொம்ப நல்லவனப்பா 


எதுக்கு சொல்லுறே ?


அம்மா எடை மிஷினியில் ஏறியவுடன் கத்திகிறது 
அம்மா உன்னை அடிக்கும் போது எல்லாம் நீ கத்தியதே 
இல்லையே நீ ரொம்ப நல்லவனப்பா 
============================================
என்னங்க மிஷின் எடையை காட்டாமல் மெசஜ் சொல்லுது...

அட ஆமா !இப்படி குண்டா இருந்தால் நாட்டுக்கும் 
வீட்டக்கும் தாங்காதாம்...


காசுப் போட்டு கமென்ட் வாங்கியவள் நானாகத்தான் 

இருப்பேன்...என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
=============================================

28 மே, 2012

ஊதி ஊதி..சிரிக்க மட்டும்,

காளை மாடு வாங்கிய கடன் இன்னும் 
அடைக்கவில்லை...

இன்னும் கன்று போடவில்லை சார்...

என்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இதுஎன்னகொடுமை சார் இது
================================
சின்ன வயது அனுபவம் 
தலைவர் சின்ன விஷயத்தைக்கூட 
ஊதி ஊதி பெரிசாக்கிடுவார்...


எப்படி ?


சின்ன வயதில் பலூன் கடை வைத்து 
பலூனை ஊதி ஊதி பெருசாக்கிய 
அனுபவம் தான்...
=========================================

27 மே, 2012

பவர் போன...சிரிக்க மட்டும்,


நிருபர்:

உங்கள் ஆட்சியில் பவர் இல்லை என்ற குற்றச்சாட்டுக்கு 
உங்கள் பதில்?

தலைவர் 

பவர் போன தலைவர்கள் எல்லாம் எங்கள் ஆட்சியில் 
பவர் இல்லை என்று சொல்லுவது  வேடிக்கை...
==============================================
பெண்வீட்டார்:

எனது சொத்தை பாத்துகாக்க வீட்டோட மாப்பிளை 
வேண்டும்...

தரகர்:

அப்ப திருடனை பார்க்கட்டுமா ?

பெண்வீட்டார்:

அடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓஅடிதான் விழும் ஓ
====================================================