பார்வைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பார்வைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

15 நவ., 2012

விளம்பரம் மாயாஜாலங்கள் ...


இன்றைய விடுமுறை நாளில் தொலைக்காட்சி தான் நமக்கு பொழுது 
போக்கு... வேலையை விட்டு நிகழ்ச்சிகளை பார்த்தால் எல்லாம் 
தொழில் தான்...விளம்பரம் விளம்பரம் தான்...

போட்டிப்போட்டுக்கொண்டு தங்களது விளம்பரங்கள் மூலம் அவர்கள் பொருட்களை வாங்க அல்லது திணிக்க பார்க்கும் நிலை...

அதை எப்படி எல்லாம் விளம்பரம் செய்கிறார்கள்...
நமக்கு பிடித்த நடிகர், நடிகை மூலம்...

இதுக்கு இந்த மீடியாக்கள்  போட்டிபோட்டுக்கொண்டு வித விதமாய் ஒவ்வொரு நிகழ்சிகளுக்கு பலமணி நேரம்  போட்டவண்ணமாய் இருப்பதை பார்க்கலாம்...

எப்படி நாம் பிழைக்க வேண்டும் என்று எண்ணும்  அளவுக்கு...
விடுமுறையின் போது தொலைக்காட்சிகள் நமக்கு விளம்பரங்கள் மூலம் சொல்லித்தருகிறது...

அடுத்து எல்லா விளம்பரத்திலும் 99%விழுக்காடு தூமையாக்கலாம்  
நன்றாக இருக்கும் என்ற முன் எச்சரிக்கை வேறு...

விளம்பரம்இங்கு  
வாங்கி விற்கப்படும்    
தொலைக்காட்சிகள்...

11 நவ., 2012

ஏன் ?


ஏன் ? என்ற  கேள்விகள் நமக்குள் கேட்க்கும் தினம் தினம் 
அதை தான் இன்று பார்வையில்...
நாம் பேருந்துகளில் பயணிக்கும் போது சில்லரை பாக்கி தராமல் இருக்கும் நடத்துனர்,அதை கேட்டால் நாம் என்னமோ அவரிடம் இனமாய் கேட்பது போன்ற பார்வை...நம்மிடம் இருக்கும் பொருளுக்கு சரியான அனுமதி சீட்டு தராமல் மேற்கொண்டு பணம் பெறுகின்ற நிலை...

நமது வீட்டு தொலைபேசி இணைப்பு பெறும்போதும் இல்லை சரிவர வேலை செய்யாத நிலையில் அழைக்கும் போதும்,அரசாங்க ஊழியர்கள் நம்மிடம் பணத்தை கேட்டு பெறுகின்ற நிலையை என்ன சொல்லுவது?

இவர்கள் அரசாங்கத்திடம் சம்பளம் பெறாமல் வேலை செய்கிறார்களா?
ஏன் நம்மிடனம் சிலர் இப்படி நடக்கிறார்கள்...
இப்படி கிடைக்கிற பணத்தை என்ன சொல்லுவது இனமாய் பெறுவதா ?
இல்லை லஞ்சமா இல்லை தானமா ?  

ஏன் ?நல்ல வேலையில் இருந்துக்கொண்டு இப்படி சிலர் நடக்கிறார்கள்?
ஏன் ஏன் என்று நமக்குள் இப்படி தோன்றும் கேள்விகள் ஏராளாம்...

அதில் இதுவும் ஒன்று...திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை 
ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டை எழுத்து போலதான் இவர்களும் 
தன்னை தானே உணராமல் போக்கும் வரை இது ஒரு தொடர்கதை....

4 செப்., 2012

புதுக்கவிதை தாத்தா மு .மேத்தா...

பெரிய குளத்தின் பீடுமிகும் கவிஞரே! உங்கள் இளம்வயதின் நினைவுகளை எங்களுக்குச் சொல்வீரா?

""வாழ்வில் நான் மகிழ்ச்சியாக இருந்த தருணங்கள் அவைதான். புழுதியில் புரண்ட பூக்களாக நாங்கள் இருந்தோம். அற்புதமான நல்ல நண்பர்கள் எனக்கு வாய்த் திருந்தார்கள். சிறகு முளைக்கும் முன்னே வானில் பறந்த பறவைகளைப்போல், எதுவும் அறியும் முன்னே நாங்கள் இலக்கியம் படைக்க ஆரம்பித்தோம். அந்த வயதில்தான் நான் அதிகம் படித்தேன். அரசியல் மேடைகளில் இளைய கதாநாயகனாக உலாவந்தேன். பெரியகுளம் விக்டோரியா நினைவு கழக உயர்நிலைப் பள்ளியில் மாணவர் தலைவனாக பதவியில் இருந்தேன்.

அங்கே ஒரு மந்திரிசபை அமைத்தோம். மாணவர் தலைவர்தான் முதலமைச்சர். என் வாழ்வில் என் தந்தை எனக்குக் கொடுத்ததுதான் அதிகம். கேட்டது எதுவுமில்லை. பள்ளியில் நான் மந்திரிசபை அமைத்தபோது அவர் என்னிடத்தில் ஒரு வேண்டுகோள் வைத்தார். எங்கள் குடும்ப வைத்தியரின் மகனை மந்திரிசபையில் சேர்த்துக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார். என் சகாக்களிடம் யோசித்துவிட்டுச் சொல்வதாக சட்டாம்பிள்ளைத்தனமாகச் சொன்னேன். இறுதியில் என் நெஞ்சில் நிறைந்த தந்தையின் வேண்டு கோளை நிராகரித்தேன். சின்ன வயதிலேயே நேர்மைத் தராசை கையில் தூக்கிக்கொண்டு நடந்தேன். இன்றுவரை அந்தத் தராசை கீழே போட எனக்கு மனம் வரவில்லை. அதனால் தான் சில சமயங்களில் நானே கீழே விழுந்து நொந்துபோக நேர்கிறது. ஆனால் அந்த காயங்களைத்தான் என் கௌரவங்கள் என்று கருதுகிறேன். எனக்கு வாய்த்த என்னுடைய நண்பர்களான ஆறுமுகம், முகமதுமைதீன், ஆறீஸ்வரன், வேலுச்சாமி, சிவஞானம், சிவநேசன், பாலகுமார் போன்றோர் லட்சியத்தோடு நான் வளர்வதற்கு உரமாக நின்றார்கள். வழிமாறாமல் உயர்வதற்கான வாய்ப்பை அவர்கள் வழங்கினார்கள். இன்னும் பகிர எவ்வளவோ இருக்கின்றன.''

"ஈர விழிக் காவியங்கள்' எழுதி வெளியிட்டவரே!
எழுதி வெளியிட்டதனால் எவர் மனதைத் தொட்டீர்கள்?

"" இன்று ஏராளமான கவிதைகளை எழுதும் இளைஞர்களையும் அவற்றை வாசிக்கிற மூத்தவர்களையும் தொட்டேன். அவர்கள் நெஞ்சில் வேர்விட்டேன்.''




மரபுக் கவிதைகளால் மனம் மகிழ்ந்த நாயகரே!
புதுக்கவிதைக் காதலியைக் கரம்பிடித்ததெதனாலே?

""சமூகத்தில் குமுறல்களை வெளிப்படுத்த வேலியில்லாத ஒரு இலக்கிய வடிவம் தேவைப்பட்டது. சுவரேறிக் குதிப்பதற்கு பதிலாக சுவர்களைத் தகர்த்து விட்டு வானம்பாடிகளாய் நாங்கள் நடக்கத் தொடங்கினோம். "சொற்புதிது பொருள் புதிது வளம் புதிது ஜோதிமிக்க நவ கவிதை' என்று பாரதி பாடினானே, அவற்றைப் படைப் பதற்கு புதுக்கவிதை வாகனத்தில் பயணம் செய்தோம்.''

அழகுத் தமிழுக்கு ஆணிவேர் ஆனவரே!
உங்கள் தமிழுக்கு உயிர்வேராய் இருந்தவர் யார்?

""இளங்கோவும் வள்ளுவனும் கம்பனும் துருவ நட்சத்திரங்களாய் எனக்குத் திசைகாட்டினார் கள். பாரதியும் பாரதிதாச னும் எனக்குள் இசை மீட்டினார்கள். ஏழை எளிய மனிதர்கள் எனக்கு கவச உடை பூட்டி, தங்களுக்காகப் போரிட களத்தில் நிறுத்தினார்கள். கவிஞர் சிற்பி என் னைப் பற்றி இப்படி குறிப்பிடு வார்... "சமூகமே இக்கவிஞரின் ஆலயம். அதன் போர்க்களமே இவரின் கீதலயம்.''

கவிதைக்கு அழகு கற்பனையா?
இல்லை பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தானா?

""பூவுக்குள் தேன்போன்ற பொருளடக்கம் தான் எந்த இலக்கிய வடிவத்தையும் எழுச்சி பெறச் செய்கிறது. வண்டுகளாய் மட்டுமே சுற்றித் திரியாமல் வாள்களாகவும் வேல்களாகவும் மாறவேண்டிய கட்டாயத்தை வாழ்க்கை தீர்மானிக்கிறது.''

காதலே இல்லாத உலகத்தில் சில நாட்கள்
வாழச் சொன்னால் வாழ்வீரா சொல்லுங்கள்?

""வாழ்வேன். இதோ இப்போது உங்கள்முன் வாழ்ந்து கொண்டுதானே இருக்கிறேன். வெறும் வியாபாரிகளுக்கு மத்தியில் படைப்பாளிகளும் வாழத் தானே வேண்டியிருக்கிறது. மூச்சு நின்றுவிட்டால் பேச்சு நின்றுவிடும். அதுவரை பேசாதிருக்க இயலுமா?''

இந்த உலகை இயக்கும் சக்தி எதனிடம் உள்ளது? எடுத்துச் சொல்லுங்கள்?

""உழைப்பிலும் இளைஞர்களின் உணர்விலும் உள்ளது. அதை உருவாக் கும் சக்தி, எந்த பேரங்களுக்கும் இடம்கொடுக்காத எழுதுகோல்களில் உள்ளது.''

யுத்தக் களத்தில் வென்றவர்கூட
முத்தக் களத்தில் தோற்பது எதனால்?

""யுத்தக் களத்தில் எதிரி யார் என்பது தெரிகிறது. முத்தக் களத்தில் காதல் எது- மோதல் எது என்பதைக் கண்டுபிடிக்க முடிவதில்லை.''

மீண்டும் ஒரு பிறவி உண்டென்றால் நீங்கள்
யாராகப் பிறக்க ஆசைப் படுவீர்கள்?

""இதில் நான் பிறவாமை வேண்டும் என்று கூறிய பெரியார் கட்சி.''

மனது நிரம்புவது மரபிலா? இல்லை
புதுக்கவிதை எழுதும் பொழுதிலா? சொல்லுங்கள்!

""கோப்பை நிரம்புவது வெந்நீரிலா தண்ணீரிலா என்று கேட்பதைப் போன்ற கேள்வி இது. மரபோ புதிதோ அது கவிதையாக இருக்க வேண்டும் என்பதுதான் நியதி. மரபிலும் நல்ல கவிதைகள் உண்டு. புதுக்கவிதையிலும் வெறும் வசனங் கள் வந்துவிடுவதுண்டு. நல்ல கவிதைக்கு வடிவம் முக்கியம். இரண்டிலும் அது இருக்கும். அல்லது இல்லாமலும் இருக்கும். கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதையெல்லாம் சிறந்தது என்று கூறமுடியாது. அடடா என்று எது நம்மை மறந்து ஆனந்தமாய் அலற வைக்கிறதோ- அது நம் மனதை நிரப்பிவிட்டது என்று அர்த்தம்.?''

சிறகு முளைத்த எழுதுகோல் கொண்டவரே!
உங்கள் வானம் காதலா? சமூகமா?

""சமூகத்தின்மீதான காதல்.''

தலைநரைக்கும் வயதிலும் உங்கள் எழுத்து இளமையாக இருக்க என்ன காரணம்?

""இதயம் எப்போதும் இளமை யாகவே இருக்கிறது. ஒரு முடி நரைக் கும்போது உள்ளுக்குள் புதிய பூக்கள் ஏராளமாய்ப் பூக்கின்றன. அவை முடிசூடிக் கொள்வதால் நாம் அகதி ஆவதில்லை. நம் எழுத்துக்கு அகவை யும் ஆவதில்லை.''

மரபில் உங்கள் மனம்கவர்ந்த கவிஞர்கள் யார்? பட்டியலிட்டுப் பதமாகச் சொல்லுங்கள்...

""நான் வாழும் காலத்தில் என்னோடு வாழ்ந்த, வாழ்கின்ற கவியரசர் கள் மீரா, ரகுமான், பாலா, சிற்பி, இன்குலாப், சேலம் தமிழ்நாடன் இன்னும் பலர். பட்டியல் கொடுக்க நான் விரும்பவில்லை.''

தித்திப்புத் திரையுலகில் திருக்கவியே
நீங்கள் நுழைந்த தருணத்தை விரிவாகச் சொல்லுங்கள்...

""தற்செயலாய் நேர்ந்ததுதான் என்னுடைய திரைப்பயணம். என்னோடு தியாகராயர் கலைக்கல்லூரியில் படித்த நண்பர் சுப்பிரமணியன் அவர்களுடைய தந்தை, தென்தமிழ்நாட்டு நாடக உலகில் புகழ்பெற்ற உடையப்பா ஆவார். "அனிச்சமலர்' என்று அவர் ஒரு படம் எடுத்தார். படிக்கும்போதே அவர் என் பாட்டுப் பணிகளை அறிந்தவர். ஆதலால் அவருடைய படத்தில் முதல் பாடலையே நான்தான் எழுதவேண்டும் என்று அழைத்தார். ஆளுயர ரோஜாப்பூ மாலையோடு வாசலில் நின்று வரவேற்று என்னை அழைத்துச் சென்றார்.

இசையமைப்பாளர்களான சங்கர்- கணேஷ் இருவரிட மும் இவர்தான் எங்கள் கவிஞர் என்று அறிமுகப்படுத்தினார். அதில் முதல் பாடலை எழுதியதற்குப் பிறகு திரைப்பட உலகை நான் திரும்பிப் பார்க்கவே இல்லை.

எழுத்தாளர் பாலகுமாரன் என்னிடம், "கலைஞானி கமல்ஹாசன் அடிக்கடி உங்கள் கவிதைகளைப் பற்றிப் பேசுகிறார். அவரைச் சந்தித்தால் புதுப்பட வாய்ப்புகள் ஏராளமாய்க் கிடைக்கும்' என அடிக்கடி சொல்லிக் கொண் டிருந்தார். திரையுலகைப் பற்றி பெரிதாக கனவொன்றும் எனக்கு இல்லாததால் அவருடைய அழைப்பினை நான் ஏற்காதிருந்தேன். என்னுடைய ரசிகர்கள் ஏன் நீங்கள் திரைப்படங்களில் எழுதவில்லை என்று என்னைக் குற்றக் கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்க ஆரம்பித்தனர். வேறுவழியில்லை; நானும் சினிமாவில் பாடல்கள் எழுதியாகவேண்டும். இல்லா விட்டால் அவர்கள் ஏற்கெனவே எனக் குக் கொடுத்திருக்கும் "கவிஞர்' என்ற பட்டத்தைப் பறித்துக் கொள்வார்கள் என்று தோன்றியது. எனவே கமலைச் சந்திக்க சம்மதம் சொன்னேன்.

பாலகுமாரன் மூலம் சந்திப்பு நிகழ்ந்த போது கலைஞானி கமல்ஹாசன் அவர்கள், எனக்கு சில உண்மைகளை உணர்த்தினார். "உங்கள் இலக்கியத் தமிழை நான் மதிக்கிறேன். ஆனால், திரைப் படவுலகம் பெரும் வல்லமை மிக்கது. ஒரு படைப்பாளி அந்த ஊடகத்தையும் பயன்படுத்திக் கொள்ளத்தான் வேண்டும். உங்கள் கவிதை லட்சம்பேரைச் சென்றடையும் என்றால், நீங்கள் எழுதும் திரைப்பாடல் கோடிக்கணக்கானவர்களை உடனடியாக ஓடிப்போய்த் தொட்டுவிடும்' என்று உபதேசித்து என்னை இயக்குனர் மனோபாலாவிடம் அழைத்துச் செல்லச் சொன்னார்.

இயக்குனர் மனோபாலா அப்போது "ஆகாயகங்கை' என்ற திரைப்படத்தைத் தொடங்கியிருந்தார். அவர் என்னை பிரசாத் ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று இசைஞானி இளையராஜாவின் முன்பு உட்கார வைத்து இவர்தான்

மு. மேத்தா என்றார். படித்திருக்கிறேன் என்று புன்னகைத்த இளையராஜா, பாடல் எழுதும் வாய்ப்பை எனக்கு வழங்கத் தொடங்கினார். அதன்பிறகு ஏராளமான படங்களில் எழுதினேன்.''

நீங்கள் எழுதிய திரையிசைப் பாடல்களில்
உங்களைக் கவர்ந்த ஒரு பாட்டைச் சொல்லுங்கள்?

""உங்கள் குழந்தைகளில் உங்களுக்குப் பிடித்த குழந்தை எது என்று கேட்பதைப் போன்ற கடினமான கேள்வி இது. சில பாடல்களை வேண்டுமானால் நினைவுபடுத்தலாம். இசை ஞானி இளையராஜா இசையில் ரஜினி நடிக்க, பாலசந்தர் தயாரித்த "வேலைக்காரன்' படத்தின் ஒவ்வொரு பாடலும் என் உள்ளத்தில் ஈரமாய் ஒலிக்கிறது. "இரட்டைவால் குருவி' படத்தில் பாலுமகேந்திராவின் பார்வையில் "ராஜராஜ சோழன் நான்' என்ற பாடல் என் இதயத்தைத் தாலாட்டுகிறது. "சூரியவம்சம்' படத்தில் "நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டிப் பார்க்குது' எனக்குள் அருவியாய் விழுகிறது. "பாடுநிலாவே' என்று என்னுள் "உதய கீதம்' கேட்கிறது. "யார் வீட்டில் ரோஜா பூப்பூத்ததோ?' என "இதயக் கோயில்' என்னுள் எட்டிப் பார்க்கிறது.

"என் மனவானில் சிறகைவிரிக்கும் வண்ணப் பறவைகளே' என்று "காசி' யின் குரல் இதயத்தைத் தித்திப்பாய் தீண்டுகிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி நண்பர்களோடு சேர்ந்து நான் தயாரித்த "தென்றல் வரும் தெரு' என்ற படத்தின் பாடல்கள், எங்களையும் சொல்லக்கூடாதா என்று ஏக்கத்தோடு கேட்கின்றன. வரிசைப்படுத்த முடியவில்லை. நான் எழுதிய பாடல்கள் எல்லாமே என் இதயத்தில் ஏறி, ரங்கராட்டினம் சுற்றுகின்றன.''

எதைநோக்கி உங்கள் இலக்கியப் பயணம்?
அதை எமக்கின்று அறிவிப்பீரா?

""என்னை நோக்குகிறவர்களை நோக்கி.''

இன்றைய இலக்கிய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல நினைப்பது எதுவோ?

""எழுது எழுது எழுது என்று உங்கள் இதயத்திற்குள்ளே ஓங்கி ஒலிக்கும் குரல் கேட்டால் எழுதுங்கள். எழுதவேண்டும் என்பதற்காக எழுதாதீர்கள். எழுதுவதைவிட வாழ்வது இனிது. வாழ்வதைவிடவும் பிறரை வாழவைப்பது இனிது. இனிமையாய் இந்த சமூகத்தை வாழவைக்க நீங்கள் எழுதுங் கள். உங்கள் எழுத்துகளைப் பற்றி நீங்களே பேசாதீர்கள். சக்தி இருந்தால் உங்கள் எழுத்துகளே உங்களைப் பேசும். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். மாமன்னன் ராஜராஜசோழனின் முகம் எந்த புகைப்பட ஆல்பத்திலாவது இருக்கிறதா இப்போது? எந்தப் புகழும் நிலையானதல்ல. இதை மனதில் நிறுத்துங்கள்.''

பிறப்பெனப்படுவது?

""சிறப்புகள் அடைவது.''

வாழ்வெனப்படுவது?

""வறுமையை வெல்வது.''

இறப்பெனப்படுவது?

""இனியதில் இனியது.''


நன்றி நக்கீரன்
சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்



21 ஆக., 2012

எங்கள் ஊர் பெருநாள் தொழுகை நிகழ்ச்சி...எனது 900 ம் பதிப்பு .














                                                                                                   




நீண்ட வருடத்துக்கு பின் பெருநாளைக்கு ஊரில் இருந்தேன் ...வழக்கம்போல் அதே உற்ச்சாகம்...மூன்று பள்ளிகளில் தொழுகை...காலை 7 மணிக்கு அஸ்கர் பள்ளியிலும் ,,
7.45 am ,ESMP நகரியில் TNTJ நடத்திய தொழுகை 

வழக்கம் போல நமது ஜாமியா பள்ளியில் காலை 9.30க்கும் நடைபெற்றது 


வழக்கும்போல மின்சாரம் தான் இல்லை காலை 6 முதல் 9 மணிவரை கட் தான்...


















 நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும்  வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு 
இனிதே பெருநாள் முடிந்தது...



19 ஆக., 2012

எங்கள் ஊர் பெருநாள் கொண்டாட்டம்...பகுதி 1

கும்பகோணம் அருகாமையில் அமைந்துவுள்ள எங்கள் ஊர் (மேலக்காவேரி)பெருநாள் கொண்டாட்டம்... பகுதி 1

நாளை இன்ஷா அல்லா "பெருநாளை முன்னிட்டு" வடக்கு தெருவில் அமைந்திருக்கும் தவ்ஹித் பள்ளியில் பித்திராவுக்கு
(ஏழைகளுக்கு ) கொடுக்கவேண்டிய
பொருள்களை ஒன்றாய் பையில் போடும் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
















இந்த பித்திரா  பொருள்கள் கொடுக்கும் நிகழ்ச்சி தோழர் முகமது ரபி பொறுப்பில்  இன்று நடைபெற உள்ளது...

ஒரு நபருக்கு கொடுக்கும்  பித்திரா பை சுமார் 350 ருபாய்க்கு உண்டான பொருள்கள் அடங்கியது 


அடுத்த நிகழ்சிகளுடன் சந்திக்கிறேன்...


விழித்துக்கொள்ளுங்கள்...

Pesum Padam

இன்னும் அக்கறையில்லாத நிலையில் வாகனத்தில் 
பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் நிலையை காணுங்கள் 

பெற்றோர்களே விபத்துக்கு முன் விழித்துக்கொள்ளுங்கள்...

நன்றி .படம் தினமலர் 

பெற்றோர்களே 
அவரசம் 
அலட்சியம் 
நடந்த பின் 
போராட்டம் 
இது தானே உங்கள் நிலை...

7 ஆக., 2012

ரத்த வகை கண்டறியும் முகாம் நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு...

கும்பகோணம் ரோட்டரி சங்கம் ,ராயல் லேப் இணைந்து நடத்திய ரத்த வகை கண்டறியும் முகாம் கடந்த 6.08.12 திங்கள் அன்று மேலக்காவேரி   நகராட்சி தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது...
அந்த நிகழ்ச்சியின் புகைப்பட தொகுப்பு...

தலைமை ,L.சந்திரபிரபு 

முன்னிலை R.ரவிச்சந்திரன் ,கி.ஜெயராமன் .MA.MEd

க.செல்வேந்திரன் ..MA.MEd

வாழ்த்துரை S:பாலாஜி 

நன்றியுரை   தோழர் கவிஞர்  அயூப் கான்... 
சேவைகள்தொ தொடர வாழ்த்துகிறோம் 
நன்றி கும்பகோணம் ரோட்டரி சங்கம் ,ராயல் லேப் ...

2 ஆக., 2012

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

 

"தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்

- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்

- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்

- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in

http://www.rtiindia.org

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

நன்றி ஒன் இந்தியா 

28 ஜூலை, 2012

கவியரசு வைரமுத்து,


 
கவியரசு வைரமுத்து, தமிழுக்குப் புதுநிறம் தந்தவர். இலக்கியத்திற்கு ஈரமும் சாரமும் சேர்த்து இனிமை கூட்டியவர். கடந்த முப்பதாண்டுகளாக திரைப்படப் பாடல்களை வசீகர நடையில் எழுதிக் குவித்து தமிழை தளதளப்பாக்கிக் கொண்டிருக்கிறார். இவர் விரல்மீது காதல் கொண்ட தேசிய விருதுகள், ஆறு முறை இவரை ஆரத்தழுவி ஆராதித்திருக்கின்றன. சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதும் இவரை ஐந்து முறை தேடி வந்து அணி செய்து தன்னை அழகாக்கிக் கொண்டிருக்கிறது. கள்ளிக்காட்டு மக்களின் வாழ்க்கையை புதினங்களில் உயிர்ப்பாக பதிவு செய்த வகையிலும் இவர் சிகரம் தொட்டவர். மொத்தத்தில் தமிழின் வைகறைத் திசையாக விடிந்திருக்கிறார் வைரமுத்து. "இனிய உதய'த்திற்காக அவரைச் சந்தித்தபோது...

எப்படி இப்படியொரு தமிழ்நடை உங்களுக்கு வாய்த்தது?



நடத்தலில் ஒவ்வொருவருக்கும் ஒரு நடைஅமைவதுபோலவே, எழுத்திலும் அமைகிறது. என் எழுத்து நடையில் அமைந்தது பாதி; நான்அமைத்தது பாதி. உரைநடையின் இறுக்கம்குறைக்கக் கொஞ்சம் கவிதை பெய்துகொண்டதில் ஒரு புதிய நடை உண்டாகியிருக்கலாம் என்று கருதத் தோன்றுகிறது.

உங்கள் பால்ய பருவத்தின் மறக்க முடியாதஅனுபவம்?

ஒரு கொலை பார்த்தது- ஒரு புணர்ச்சி பார்த்தது- 11 வயதில் வெறிநாய் கடித்தது- மூன்றும் அறியாத வயதின் அதிர்ச்சிகள்.

நீங்கள் எழுதிய முதல் கவிதை?

வயல்வெளியில் பிறந்தது. அது கவிதையா- கவிதைபோல் ஒரு மொழிமுனகலா என்றுஎனக்கு இப்போது சொல்லத் தெரியவில்லை. கவிதை கையில் இல்லை. அந்தப் பரவசம் மட்டும் பத்திரமாக.

திரையுலகக் காதலில் விழுந்தது எப்படி?

"டூரிங் டாக்கீஸ்' என்ற கலைக் கூடங்களே காரணம்; காற்றில் ஒலித்த பாடல்களே காரணம். கலைஞரின் வசன இலக்கியம்; எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற கந்தர்வ புருஷர்கள்; கண்ணதாசன் என்ற கலையாளுமை இவையே திரைக்காதலுக்குத் தோற்றுவாய் செய்தன. ஐம்பதுகளில் பிறந்த தமிழர்கள் பலருக்கும் இந்த நான்கு பேரின் பாதிப்பு இல்லாமல் இருக்காது.

நீங்கள் சந்தித்த முதல் திரைப் பிரபலம் யார்? அப்போதைய உங்கள் மன நிலை?

நடிகர் அசோகன். டிரஸ்ட்புரத்தில் இரண்டாம் தெருவில் அவர். நான்காம் தெருவில் நான். நடைப் பயிற்சியில் சந்தித்து நண்பர்கள் ஆனோம். படப் பிடிப்புக்கெல்லாம் அவர் காரில் என்னை அழைத்துச் செல்வார். மதுரை திருமாறன்- கே.ஆர். விஜயா இருவரையும் எனக்கு அறிமுகம் செய்தார். திரைத்துறைக்கு நான் வருவேன் என்பதை அறியாத காலத்தில் அன்பு செலுத்தினார்; அவரை அடிக்கடி நினைத்துக் கொள்கிறேன்.

திரையுலகில் ஏமாற்றங்களையும் சங்கடங்களையும் சந்தித்தது உண்டா?

ஏமாற்றங்களும் சங்கடங்களும் அனுபவங்கள். அனுபவங்களே ஆசான்கள். "இதுவரை நான்' இரண்டாம் பாகத்தில் விரிவாய் எழுதுவேன்.

மரபை வசீகரமாகக் கையாளும் நீங்கள், புதுக் கவிதைக்கு ஏன் திசை திரும்பினீர்கள்?

ரயிலில் வந்தவன் விமானத்திற்கு மாறிய கதைதான் அது.

உங்கள் சாதனையாக எதை நினைக்கிறீர்கள்?

சாதனை என்று எதைக் கருதினாலும் அது இன்று அல்லது நாளை முறியடிக்கப்பட்டுவிடும். சாதனை என்பதைவிட ஒரு சந்தோஷம் இருக்கிறது. இதுவரை யாருக்கும் தீங்கு செய்யவில்லை என்பதே அது.




உங்கள் ஆதங்கம்?

எட்டுக் கோடித் தமிழர்கள் உள்ள நாட்டில், ஒரு புத்தகத்தின் ஆயிரம் பிரதிகள் கூட விலை போகாதது.

உங்கள் ஏக்கம்?

இலங்கைத் தமிழர் துயரம் எப்போது தீரும்?



உங்கள் இழப்பு?

தூக்கம்.

உங்கள் அடுத்த இலக்கு?

உங்களுக்கே தெரியும்.

உங்களை வியப்பில் ஆழ்த்திய படைப்பு?

இந்திய இதிகாசங்கள் இரண்டும்.

உங்களுக்கு யார்மீதாவது பொறாமை வந்ததுண்டா?

கோபம் வந்ததுண்டு; பொறாமை என்றால் என்ன?

உலகத் தரத்தில் தமிழிலக்கியம் இருக்கும் போது மேலைநாட்டு இலக்கியங்களைத் தூக்கிச் சுமப்பவர்கள் பற்றி?

முதலில் தன்னை மதிப்பது நல்லது; பிறகு தரணியை மதிப்பது உயர்ந்தது.

காலப்போக்கில் மரபுக் கவிதை காணாமல் போய்விடுமா?

தமிழ் காணாமல் போகுமா?

திரையுலகிற்கு முன் இருந்த வைரமுத்து, திரையுலகிற்குள் வந்த பின்னால் வைரமுத்து- ஒப்பிடுங்கள்.

முன்னவன்- நேரத்தில் பணக்காரன்.



பின்னவன்- நேரத்தில் ஏழை.

அரசியலில் கால் வைக்காமல் இருப்பது ஏன்?

என்னினும் சிறந்தவர்கள் அரசியலை ஆளுவதால்.

இலக்கியம், மொழியின் அலங்காரமா? ஆயுதமா?

துய்ப்பதற்கு அலங்காரம்; தொழிற்பட ஆயுதம்.

"மூன்றாம் உலகப் போர்' எப்போது நூலாக வெளிவரும்?

ஜூலை 13. சென்னை காமராசர் அரங்கில் வெளி யீட்டு விழா. இந்திய அரசியலின் மூத்த தலைவரும், தமிழின் மூத்த படைப்பாளியுமான கலைஞர் வெளியிடுகிறார். "மூன்றாம் உலகப்போர்' ஆங்கில மொழிபெயர்ப்பும் தயாராகி வருகிறது. அது சர்வ தேச அரங்கில் வெளியிடப் பெறும்.

சந்திப்பு: அமுதா தமிழ்நாடன்

நன்றி இனிய உதயம் 

12 ஜூலை, 2012

விருந்தில் திரிஷா,லட்சுமிராய் முன்பு மகத் தாக்கப்பட்டாரா?: போலீஸ் விசாரணை

விருந்தில் திரிஷா,லட்சுமிராய் முன்பு
மகத் தாக்கப்பட்டாரா?: போலீஸ் விசாரணைTapsi S Explanation On Actors Clash


சென்னையில் நடந்த சரக்கு பார்ட்டியில் மகத்தும் மனோஜும் முட்டி மோதி மூக்குடைந்ததற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. மனோஜ் என் சகோதரர் மாதிரி என்று விளக்கம் அளித்துள்ளார் டாப்ஸி. இந்த விளக்கத்தில் மகத்தைப் பற்றி தப்பித் தவறிக் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை அவர்!

சென்னையில் நடிகர்-நடிகைகள் பங்கேற்ற மது விருந்தில் ‘மங்காத்தா' படத்தில் நடித்த மகத் தாக்கப்பட்டார். தெலுங்கு நடிகர் மனோஜ் நண்பர்களுடன் சேர்ந்து அவரை அடித்து உதைத்தார்.
வயிறு, தொண்டை பகுதிகளில் குத்தியதால் மகத் நிலைகுலைந்தார்.

இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். போலீசிலும் புகார் செய்தார். ராயப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

நடிகை டாப்ஸியை இருவரும் காதலித்ததாகவும், அதனால் ஏற்பட்ட தகராறில் இந்த அடிதடி சண்டை நடந்ததாகவும் கூறப்பட்டது. ஏராளமான நடிகர் நடிகைகள் இயக்குநர்கள் முன்னிலையில் இந்த சண்டை நடந்ததால், அவர்கள் தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டனர். அந்த நேரத்தில் டாப்ஸியும் அங்கு இருந்ததாக சொல்லப்படுகிறது.

இந்த விவகாரம் போலீஸ் கேஸாகிவிட்டது. இதையடுத்து 
டாப்ஸி
இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "என்னைப் பற்றி தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இரண்டு நடிகர்கள் தகராறு செய்துகொண்ட இடத்தில் நான் இருக்கவில்லை. அந்த சமயத்தில் கர்னூலில் இருந்தேன். எனவே நடிகர்கள் என் கண்முன்னே மோதிக் கொண்டார்கள் என்ற செய்தியில் உண்மை இல்லை.

என் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது. நான் சினிமா துறையில் நுழைந்ததில் இருந்தே மோகன்பாபு, லட்சுமி, விஷ்ணு, மனோஜ் ஆகியோரை நன்கு தெரியும். அவர்களது குடும்பத்தில் ஒருவராக என்னை பாவித்தும், பாதுகாத்தும் வருகின்றனர். அவர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

மோகன்பாபு என்னை மகளாகவே பாவிக்கிறார். லட்சுமி, மனோஜ், விஷ்ணு ஆகியோர் என்னை இளைய சகோதரியாகவே பார்க்கின்றனர். மலிவான விளம்பரத்துக்காக என்னையும், மனோஜையும இணைத்து செய்தி வெளியிட்டுள்ளனர்.


விருந்து நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் ஒருவர் ஏற்பாடு செய்து இருந்ததாக கூறப்படுகிறது. எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொழில் அதிபர் வீட்டின் காவலானி கைது செய்யப்பட்டு உள்ளார். மனோஜிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் தேடினர். ஆனால் அவர் மலேசியாவுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.

மனோஜ் கைதாகலாம் என்ற பரபரப்பு நிலவுவதால் இரு தரப்புக்கும் இடையே சமரச முயற்சியும் நடக்கிறது. நடிகர் சிம்பு சமரசப்படுத்தும் வேலையில் இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. மனோஜ், மகத் இருவருக்குமே சிம்பு நெருக்கமான நண்பராக இருக்கிறார். இன்னொரு புறம் போலீஸ் விசாரணையும் விறுவிறுப்பாக நடக்கிறது.

தொழில் அதிபரை கைது செய்து விசாரணை நடத்த போலீசார் தேடுகின்றனர். விருந்தில் யார்-யார் பங்கேற்றனர் என்ற பட்டியலையும் போலீசார் தயாரிக்கிறார்கள்.

முன்னணி நடிகர்கள் இருவர் இதில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. நடிகைகள் திரிஷா, லட்சுமிராய் போன்றோரும் கலந்து கொண்டதாக தகவல் பரவியுள்ளது. இது உண்மைதானா என்று போலீசார் விசாரிக்கின்றனர். இரு நடிகைகளும் விருந்தில் பங்கேற்றது உறுதியானால் அவர்களிடம் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திரிஷா, லட்சுமிராய் முன்னிலையில் இந்த அடிதடி சண்டை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். டாப்சியை மனோஜ், மகத் காதலித்ததாகவும் இதுவே சண்டைக்கு காரணம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அவர்களுடன் தனக்கு தொடர்பு இல்லை என்று டாப்சி மறுத்து விட்டார்.

நன்றி தினசரிகள் 

மது விருந்து எனபது இப்பொழுது  எல்லாம் சினிமாகார்கள் விருந்தில் 
ரொம்ப சாதாரணமாய் போய்விட்டது,,மது விருந்துக்கு பின் சண்டைகள் கலாட்டாக்கள் பிரச்சனைகள் என்று தொடர்வது வாடிக்கையாய் உள்ளது..
மங்காத்தா வெற்றி கொண்டாத்தில் இதே போல் மது விருந்தில் பிரச்சனை ஏற்ப்பட்ட செய்திகள் தினசரிகளில் கொஞ்ச நாள் பேசப்பட்டது நாம் அறிந்த ஒன்று...

6 ஜூலை, 2012

மாறுபட்ட படங்களை பஞ்சு அருணாசலம் தயாரித்தார்

பஞ்சு அருணாசலம் தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். இவர் கண்ணதாசனின் உதவியாளராகப் பணியாற்றிப் பின்நாளில் பல நல்ல பாடல்களை தமிழ் திரைஉலகிற்கு எழுதியுள்ளார். இவரது முதல்பாடல் 'நானும் மனிதன்தான்' என்ற பாடல் 1960 இல்   வெளியானது.
.   
ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டாராக உயர்ந்து கொண்டிருந்த காலக்கட்டத்திலும், அவரை வைத்து முற்றிலும் மாறுபட்ட படங்களை பஞ்சு அருணாசலம் தயாரித்தார். இவற்றில் "ஆறிலிருந்து 60 வரை'' என்ற படம், 1979 செப்டம்பர் 14-ந்தேதி வெளிவந்தது. தன் சகோதரர்களுக்காக 6-லிருந்து 60 வரை உழைக்கும் கேரக்டரில் ரஜினிகாந்த் வாழ்ந்து காட்டினார்.

வசனத்தை பஞ்சு அருணாசலம் எழுத, எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். 1982-ல் வெளிவந்த "எங்கேயோ கேட்ட குரல்'' புரட்சிகரமான கதை அம்சம் கொண்ட படம். இதில், முற்றிலும் வித்தியாசமான ரஜினிகாந்தை, ரசிகர்கள் கண்டனர். தொளதொள சட்டை அணிந்த கிராமத்து ஆளாக ரஜினிகாந்த் நடித்தார்.

ரஜினிகாந்தின் மனைவியான கதாநாயகி (அம்பிகா), திருமணமான பிறகு வேறொரு ஆளுடன் ஓடிப்போக திட்டமிடுவாள். பிறகு மனம் மாறி திரும்பி விடுவாள். விஷயம், ரஜினிகாந்த்துக்குத் தெரிந்து விடும். அவளை வேறு வீட்டில் குடி வைத்து ஆதரிப்பார். அவள் இறந்தபின், அவள் உடலை எடுத்துப்போக யாருமே முன்வரமாட்டார்கள்.

ரஜினிகாந்த் அவள் உடலை ஒரு கைவண்டியில் வைத்து இழுத்துச்சென்று தகனம் செய்வார். ரஜினிகாந்த் தன் இமேஜ் பற்றி கவலைப்படாமல், மாறுபட்ட குணச்சித்திர வேடத்தில் அருமையாக நடித்தார். படமும் வெற்றிகரமாக ஓடியது. 


இதேபோல், "புவனா ஒரு கேள்விக்குறி''யும் பஞ்சு அருணாசலம் தயாரித்த மாறுபட்ட படம். அதில், பெண்களை ஏமாற்றிக் கெடுக்கும் ஆன்டி ஹீரோவாக சிவகுமாரையும், நல்லவனாக ரஜினிகாந்தையும் நடிக்க வைத்தார். சிவகுமார், ரஜினிகாந்த் இருவருக்குமே மாறுபட்ட வேடம். அதை சவாலாக ஏற்று இருவருமே நன்கு நடித்தனர்.

சிவகுமாரால் கெடுக்கப்பட்ட சுமித்ராவை ஏற்க ரஜினிகாந்த் முன்வருவார். அந்தக்கட்டம் உணர்ச்சி மயமாய் அமைந்தது. படம் பெரிய வெற்றி பெற்றது. படத்தில் நடித்த அனைவரும் புகழ் பெற்றனர். "கல்யாணராமன்'' படத்தில், கமலஹாசனை புதுமையாக நடிக்க வைத்தார், பஞ்சு அருணாசலம். "எடுப்பான'' பல் வரிசையுடன் ஒரு கமலஹாசன். நல்ல தோற்றத்துடன் இன்னொரு கமலஹாசன். புதுமையான இரட்டை வேடத்தில் கமலஹாசன் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசனுடனும் சில படங்களில் பஞ்சு அருணாசலம் பணியாற்றியுள்ளார். அதுபற்றி அவர் கூறியதாவது:-

"சின்னஞ்சிறிய வண்ணப்பறவை என்னத்தைச் சொல்லுதம்மா'', என்று குங்குமம் படத்தில் சிவாஜிக்காக ஒரு பாட்டு எழுதினேன். "கவரிமான்'' படத்தில் மறுபடியும் அவரோடு ஒர்க் பண்ணினேன். அது மிகப்பெரிய ஹிட் இல்லாவிட்டாலும் நூறு நாள் ஓடிய படம். கெட்டுப்போன மனைவியின் கணவனாக சிவாஜியை அவரது ரசிகர்கள் பார்க்க விரும்பவில்லை. சிவாஜியை வைத்து நானும் சித்ரா லட்சுமணனும் எடுத்த "வாழ்க்கை'' சூப்பர்ஹிட். "அவன்தான் மனிதன்'' சிவாஜியின் 175-வது படம். ஜி.பாலசுப்பிரமணியன் எழுதிய கதை இது.

கன்னடத்தில் வெற்றி பெற்ற இவரது கதையே தமிழில் `அவன்தான் மனிதன்.' நான் வசனம் எழுதினேன். ஏ.சி.திரிலோகசந்தர் இயக்கினார். படத்தின் ரிசல்ட் உங்களுக்கு தெரியும். மக்களுக்கு ஒரு கொள்கை உண்டு. கஷ்டப்படும் ஒருத்தன் போராடியோ, திடீரென்றோ பெரிய பணக்காரன் ஆனா ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் உதார குணமுள்ள ஒரு கோடீஸ்வரன், மற்றவர்களுக்கு கொடுத்து கொடுத்தே கஷ்டத்துக்கு உள்ளானால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்றாலும், சிவாஜியின் நடிப்பு இந்தப் படத்திலும் சிறப்பாக இருந்தது.''

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

சித்தப்பா ஏ.எல்.சீனிவாசன் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த பரணி ஸ்டூடியோவில் வேலை பார்த்து வந்த பஞ்சு அருணாசலம், இன்னொரு சித்தப்பாவான கண்ணதாசன் நடத்தி வந்த 'தென்றல்' பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு நாள் போனார். அந்த சூழ்நிலை அவருக்குப் பிடித்திருந்தது. இலக்கிய ஆர்வமும், கதை எழுதும் தாகமும் கொண்ட பஞ்சு அருணாசலம், கண்ணதாசனிடம் பணியாற்ற விரும்பினார்.

பஞ்சு அருணாசலத்தின் கையெழுத்து, குண்டு குண்டாக - அழகாக இருக்கும். கண்ணதாசன் நடந்தபடியே வெகு வேகமாக சொல்லும் கவிதை வரிகளை, அதே வேகத்தில் அழகாக எழுதுவார். எனவே, அவரை தனது உதவியாளராகச் சேர்த்துக் கொண்டார், கண்ணதாசன்.

அப்போது, கண்ணதாசன் அரசியலிலும் தீவிரமாக இருந்ததால், பல நாட்கள் பொதுக்கூட்டங்களில் பேச வெளிïர்களுக்குச் சென்று விடுவார். பஞ்சு அருணாசலத்துக்கு ஓய்வு கிடைக்கும். அப்போது, பட அதிபர்களிடம் கதை சொல்வார். சில கதைகள், படப்பிடிப்பு தொடங்கி சில ஆயிரம் அடிகளுடன் நின்று போயின.

இந்த சமயத்தில், திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பு கள் பஞ்சு அருணாசலத்தைத் தேடி வந்தன. 1962-ல் வெளியான 'சாரதா' படத்துக்கு அவர் எழுதிய 'மணமகளே மருமகளே வா வா' என்ற பாடல் பெரிய 'ஹிட்' ஆயிற்று. எனவே, கண்ணதாசனின் ஆசியுடன் தொடர்ந்து பாடல் எழுதலானார்.

பஞ்சு அருணாசலத்தின் பாடல்கள் கண்ணதாசன் பாணியில் நன்றாக இருந்ததால், அவரை தன் படங்களில் பயன்படுத்திக் கொள்ள எம்.ஜி.ஆர். விரும்பினார். தன்னை வந்து சந்திக்குமாறு, ஆள் மூலம் சொல்லி அனுப்பினார்.

அந்த சமயத்தில் எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் சரியான உறவு இல்லாமல் இருந்தது. இருவருக்கும் இடையே 'பனிப்போர்' நடந்து வந்தது. எனவே, எம்.ஜி.ஆரை பஞ்சு அருணாசலம் போய்ப் பார்க்கவில்லை.


இந்தக் காலக்கட்டத்தில், பட அதிபர் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்தியிடம் 'ஹலோ பார்ட்னர்' என்ற நகைச்சுவைக் கதையை பஞ்சு அருணாசலம் சொன்னார். கதை பிடித்துப்போகவே, அதைப் படமாக எடுத்தார், கிருஷ்ணமூர்த்தி. கதாநாயகனாக நாகேஷ் நடித்தார். படம் நடுத்தரமாக போயிற்று.

அடுத்து, சினிமாவுக்காக இவர் எழுதிய கதை 'கல்யாணமாம் கல்யாணம்.' இதையும் 'சித்ரமகால்' கிருஷ்ணமூர்த்திதான் தயாரித்தார். நகைச்சுவைப் படமான இதில் கே.ஏ.தங்கவேலு, தேங்காய் சீனிவாசன், 'சோ' முதலானோர் நடித்தனர். படம் வெற்றி பெற்றது. பிறகு 'எங்கம்மா சபதம்', 'மயங்குகிறாள் ஒரு மாது' என்று பல வெற்றிப்படங்களுக்கு கதை எழுதினார்.

வெறும் காமெடி படங்களுக்கு மட்டும் கதை எழுதினால், 'பஞ்சு அருணாசலத்துக்கு காமெடிதான் எழுத வரும்' என்று முத்திரை குத்தி விடுவார்கள் என்று அவர் பயந்தார். எனவே, 'சீரியஸ்' படம் எடுக்க எண்ணினார்.

'பிலிமாலயா' ராமச்சந்திரனும், பஞ்சு அருணாசலமும் சேர்ந்து, 'உறவு சொல்ல ஒருவன்' என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட படத்தை தயாரித்தார்கள். படம் வெற்றி பெற்றது.

தொடர்ந்து, 'மயங்குகிறாள் ஒரு மாது' என்ற படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை எழுதினார். 'பிளாக்மெயில்' செய்வதைப் பின்னணியாகக் கொண்ட மாறுபட்ட கதை. இந்தப் படமும் வெற்றி பெற்றது.

எஸ்.பி.டி. பிலிம்ஸ் எடுத்த 'அன்னக்கிளி' படம் 1976 மே 14-ந்தேதி வெளிவந்தது. பஞ்சு அருணாசலம் வசனம் எழுத, சிவகுமார் - சுஜாதா நடிக்க, தேவராஜ் - மோகன் டைரக்ட் செய்த இப்படம், மகத்தான வெற்றி பெற்று 200 நாட்களுக்கு மேல் ஓடியது.

இளையராஜா இசை அமைத்த முதல் படம் இது. அனைத்துப் பாடல்களும் 'சூப்பர்ஹிட்' ஆனதால் அவர் பெரும் புகழை பெற்றார். தமிழ்ப்பட உலகில் அவருடைய சீசன் தொடங்கியது.

இளையராஜாவை அறிமுகப்படுத்தியது பற்றி பஞ்சு அருணாசலம் கூறியதாவது:-

'கதாசிரியர் ஆர்.செல்வராஜ் அப்போது என் உதவியாளராக இருந்தார். புதியவர்களை இசைத்துறைக்கு அறிமுகப்படுத்தும் என் ஆர்வத்தைத் தெரிந்து கொண்ட அவர், 'இளையராஜா என்று ஒரு இளைஞர் இருக்கிறார். இசையமைப்பாளர் ஜி.கே.வெங்கடேஷிடம் துணை இசை அமைப்பாளராக பணியாற்றுகிறார். அவரை இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தலாம்' என்று என்னிடம் கூறினார்.

ஜி.வெங்கடேஷ் அப்போது கன்னடப்பட உலகில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருந்தார். தமிழில் அவர் அதிகப்படங்கள் பண்ணவில்லை. அவரது இசைக்குழுவில் ராஜாவைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர் திறமை பற்றி எனக்குத் தெரியாது.

தொடர்ந்து செல்வராஜ் என்னிடம், 'இளையராஜாவிடம் 15 அற்புதமான டியூன்கள் இருக்கின்றன. சரியான வாய்ப்பு அமைந்தால் இசையில் நிச்சயம் சாதிப்பார்' என்றார்.

இளையராஜாவை வரவழைத்தேன். இசைக் கருவிகள் எதுவும் எடுத்து வராமல் சும்மா வந்திருந்தார். 'நாளைக்கு இசைக் கருவிகள் எடுத்து வந்து உங்கள் டியூன்களை வாசித்துக் காட்டுங்கள்' என்றேன்.

இளையராஜாவோ, 'வேண்டுமானால் இப்போதே பாடிக்காட்டுகிறேன்' என்றார். 'அன்னக்கிளி உன்னைத்தேடுதே', 'மச்சானப் பார்த்தீங்களா', 'வாங்கோனா' ஆகிய பாடல்களை தாளம் போட்டு பாடிக்காட்டினார். இசைக்கேற்றபடி அவருக்குத் தோன்றிய வார்த்தைகளை பொருத்தமாக போட்டுக்கொண்டு பாடினார்.

அந்தப் பாடல்களில் நான் எதிர்பார்த்த 'மண்வாசனை' இருந்தது. 'இவர் பெரிசா வருவார்' என்று மனம் சொல்லியது. ஆர்.செல்வராஜ் அப்போது 'மருத்துவச்சி' என்ற பெயரில் ஒரு கதை எழுதி வைத்திருந்தார். முழுக்க கிராமியப்படம். அதில் சில புதிய சம்பவங்களை சேர்த்து உருவான படம்தான் 'அன்னக்கிளி.'

முழுக்க முழுக்க அவுட்டோரில் எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர் - நடிகைகள் மேக்கப் போடாமல் நடித்தனர்.படம் தயாராகி முடிந்ததும், ரிலீஸ் செய்ய ரொம்ப சிரமப்பட்டேன். ஏற்கனவே என் படங்களை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த வினியோகஸ்தர்கள் யாரும் இந்தப் படத்தை வாங்க முன்வரவில்லை.

புதிதாக வந்த வினியோகஸ்தர்கள்தான் வாங்கி திரையிட்டார்கள். படத்தின் ஆரம்ப ரிசல்ட் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற மாதிரி இல்லை. ஆனால் சில நாட்கள் ஆனதும், படம் பிரமாதமாக ஓடியது. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது இளையராஜாவின் இசைதான்.

படத்தை வாங்காமல் விட்ட வினியோகஸ்தர்கள் பிறகு வருத்தப்பட்டார்கள். படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய 'ஜாக்பாட்'டாக இப்படம் அமைந்தது.'

இவ்வாறு பஞ்சு அருணாசலம் கூறினார்.

நன்றி மாலைமலர் 

1 ஜூலை, 2012

பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2


திரைவட்டாரத்தில் சமீபத்திய பரபரப்பான பேச்சாக இருப்பது துபாயில் நடந்த விருது வழங்கும் விழாவில் சிம்புவும், தனுஷும் இணைந்து 
 
’கொலவெறி’பாடல் பாடியது தான். 

தமிழ் சினிமாவில் எதிர் எதிர் துருவங்களாகவே இருந்த இரு நடிகர்கள் திடீரென கட்டிப்பிடித்து மேடையில் பாட்டு பாடவும், அங்கு எழுந்த கைதட்டலில் அரங்கமும் அதிர்ந்தது, இருவரையும் எதிரிகளாக்கியே பேசிக்கொண்டிருந்தவர்களும் அதிர்ந்து போனார்கள்.

வேட்டை மன்னன், வாலு, போடா போடி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் சிம்பு, அடுத்த படத்தை அவரே இயக்கி நடிக்கிறாராம். சிம்புவின் அடுத்த படம் புதுக்கதை இல்லையாம். ஏற்கனவே வெளியான மன்மதன் படத்தின் தொடர்ச்சி தானாம். படத்திற்கான கதை எழுதிக்கொண்டிருக்கும் சிம்பு, இந்த படத்திற்கு ’மன்மதன்-2’ என பெயரிட்டுள்ளார்.

சிம்புவின் முதல்காதல் தோல்வியில் முடிந்தது. மன்மதன் படத்தின் ரிலீஸுக்கு பின்னர் சிம்பு தன் முதல் காதல் அனுபவத்தைத் தான் மன்மதன் படமாக எடுத்திருக்கிறார் என பரப்பரப்பாக பேசப்பட்டது. அதற்கு பிறகு சிம்பு நயன்தாராவை காதலித்து, இருவரும் பிரிந்துவிட்டனர். அந்த சமயத்தில் என் இரண்டாவது காதல் அனுபவத்தை படமாக எடுப்பேன் என அறிவித்திருந்தார்.

சிம்புவின் கடைசி காதலியான நயன்தாராவும் தனது இரண்டாவது காதலில் தோல்வியடைந்த பின்னர் தான் சிம்பு இந்த படத்திற்கு கதை எழுத ஆரம்பித்தார். எனவே மன்மதன்-2 ல் சிம்புவின் இரண்டாவது காதலியின் கதாபாத்திரமும் வரலாம் என்பது கோடம்பாக்கத்து செய்தி.

மன்மதன்-2 படத்தின் கதாநாயகியாக அனுஷ்காவை நடிக்க வைத்தே தீருவது என்ற முடிவில் இருக்கிறதாம் சிம்பு தரப்பு. அனுஷ்கா ஏற்கனவே சிம்புவுடன் வானம் படத்தில் நடித்திருக்கிறார். மேலும் த்ரிஷா, தமன்னா, சிந்து துல்லானி, மந்திரா பேடி ஆகியோரிடமும் கால்ஷீட் கேட்கவிருக்கிறார்களாம். 

சிம்புவின் நண்பனாக சந்தானம் கதை முழுக்க வலம் வருகிறாராம்.

 பரபரப்பான பேச்சுக்கு பெயர் போன சிம்புவின் மன்மதன் 2,வெற்றிக்கு 
அவர் பங்கும் உழைப்பும் ஒருப்பக்கமும் அடுத்து   கிசுகிசும் கைகொடுக்கும் 


27 ஜூன், 2012

அஜீத் புதிய படமும் பில்லா 2 ம்...




அஜித்தின், பில்லா-2 சூட்டிங் வேலைகள் எல்லாம் முடிந்து விட்டதால் ரிலீஸ்க்கான பரபரப்பு ஆரம்பமாகி இருக்கிறது.
பில்லா 2 தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக உலகளவில் 1200 திரையில் திரையிடப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் பில்லா 2 படத்தில் ஆறாவதாக ஒரு பாடல் இருக்கிறதாம்.

அஜித் நடிப்பில் வெளியான பில்லா படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக பில்லா-2 உருவாகி இருக்கிறது. தூத்துக்குடியில் சாதாரண டேவிட்டாக இருந்த அஜித் எப்படி பில்லாவாக உருவாகிறான் என்பதே பில்லா-2 படத்தின் கதை. உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோல்ட்டி இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

அஜித் ஜோடியாக பார்வதி ஓமணக்குட்டன் நடித்திருக்கிறார். இப்படத்தின் பெரும்பகுதி சூட்டிங் அனைத்தும் ரஷ்யா, சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் சூட்டிங் எல்லாம் முடிந்து விட்டதால், இப்போது ரிலீஸ்க்கான பரபரப்பு துவங்கி இருக்கிறது.

மங்காத்தா படத்திற்கு பிறகு அஜித் நடிக்கும் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. அதற்கு பில்லா-2 படத்தின் மிரட்டலான படக்காட்சிகளே சான்று.


 பில்லா 2 படம் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

அஜீத் குமார், பார்வதி ஓமனக்குட்டன், புரூனா அப்துல்லா ஆகியோர் நடித்துள்ள பில்லா 2 படம் பல சோதனைகளை சந்தித்து வருகிறது. சென்சாருக்கு போன இடத்தில் பல இடங்களில் கை வைக்கப்பட்டது. மேலும் 'ஏ' சான்றிதழ் கிடைத்தது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதி இந்தா அந்தா என்று இழுத்துக் கொண்டே போகிறது. ஜூன் 22ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் கார்த்தியின் சகுனி அதே நாளி்ல் ரிலீஸானதால் படத்தின் வியாபாரத்தை கணக்கில் கொண்டு ரிலீஸ் தேதி ஜூன் 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது ஜூன் 29ம் தேதியும் படம் ரிலீஸ் இல்லையாம். மாறாக வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வெள்ளிக்கிழமையன்று படத்தை ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

ஜூலை 13லாவது ரிலீஸ் செய்துவிடுவார்களா என்று அஜீத் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.


அடுத்ததாக அஜித்குமார் நடிக்கும் விஷ்ணுவர்தன் படத்தை பற்றிய செய்திகள் ரசிகர்களை பரபரப்பாக்குகின்றன. விஷ்ணுவர்தன் இந்த படத்தை துவங்கும் போதே ஆர்யா, நயன்தாரா என பல முக்கிய நடிகர்களை படத்தில் சேர்த்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பல விபத்துகளில் சிக்கி தனது உடலில் பல அறுவை சிகிச்சைகளை செய்துள்ள அஜித்துக்கு மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறை கூறியுள்ளனர். ஆனால் அஜித் தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து ரிஸ்கான காட்சிகளில் நடித்துவருகிறார்.

விஷ்ணுவர்தன் படத்திற்காக அஜித் கடந்த ஏழு நாட்களாக தினமும் ஐந்தரை மணிநேரம் உடற்பயிற்சி செய்துள்ளார். கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு உடலமைப்பு இருக்க வேண்டுமென்பதற்காக கவனமாக ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார் அஜித்.

அஜித் நடிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் அவரை மேலும் ஸ்டைலாக காட்ட வேண்டும் என்பதற்காக பிரத்யேகமான ஏற்பாடுகளை விஷ்ணுவர்தன் செய்திருக்கிறாராம்.