நகைசுவை கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைசுவை கவிதைகள். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஆக., 2012

அண்ணா என்று ...


வாலிப தேசத்தின் 
தேவதை அவள்!
அழகான 
பெயர்கள் சூட்டப்பட்ட 
மலராய் தினம்தினம் 
மலர்ந்தவள் என் 
மனதில் 

நேற்று அவளை பார்த்தேன் 
என் அருகில் அதே சிரிப்புடன் 
வந்தாள்...
வந்தவள் எனக்குபுது 
பெயர் சூட்டினால் 

அண்ணா  என்று ...
நலம் விசாரித்து சென்றாள்...

14 ஏப்., 2012

பயணிக்க ...நகைசுவை கவிதைகள்.,.


பணமில்லாததால்
பயணிக்க 
கேட் அவுட் என்றார்கள் 
இருந்தாலும்...
வித் அவுட்டில்
எனது பயணம் 
நாட் அவுட்...
============================

6 ஜன., 2012

காதல் இன்று...


காதல் இன்று
கணினி

மயமாக்கபட்டதால்

காதலி இதயத்திற்கு
இணையப்பக்கம்  அதிகமாய்
போய்விட்டது. 

இந்த கடித காதலனை
இ மெயில் காதலிக்கு 
தெரியாமல் போய்விட்டது....

வைரஸ் தாக்கியும் 
சர்வர் பிரச்சனைகள் 
ஒருப்பக்கம் இருந்தாலும் 

உன் 
பேஷ் புக் பக்கம் 
இன்னும் என்னை 
ஏற்றுக்கொள்ளவில்லை...

யாஹூ.ஜிமெயில் 
மூலம் அழைத்தாலும் 
ஹாட் மெயில் 
தந்து புறக்கனிக்கிறாய்...

இன்னும் நீ என்
காதலை 
ஏற்காத BSNL 
இணைப்பாய்....

நீ இருந்தாலும்
இல்லாமல் 
போனாலும்...

மோஸ் 
கைப் பிடித்த படி
கீபோர்ட்  வாசித்தப்படி 
மானிட்டர் பார்த்தபடி 
கனவில் நான் 
உன் மடியில்
படுத்தப்படி...

3 ஜன., 2012

இந்த வார இதழோடு...




குமுதமாய்
வந்தவளுக்கு
ராணி வாழ்க்கை!

குங்குமம் தந்தது
இதயம் பேசிகிறது
தின மணி அடிக்க
தினத் தந்தி கூற

தினமலருடன்
மாலைமலர் தொடுத்து
கல்யாண மாலையுடன

தமிழ் முரசு எடுத்து
முரசொலி முழங்க
தினகரனோடு
திருமணம்!

நக்கீரன்
தமிழ் வாழ்த்துப் படிக்க
ஆனந்த விகடன்
ஜூனியர் விகடன்
சுட்டி விகடன்
நாணய விகடன்
கூட்டு விகடகவி
நடத்த...

நமது எம் ஜி ரும்
ஆசி வழங்க
வண்ணத்திரை
சன் டிவி
ஜெயா டிவி
கலைஞர் டிவிகள்
ஒளிபரப்ப...

கல்கண்டு கொடுத்து
சினிமா எஸ்பிரஸ்
எடுத்து
முத்தாரமாய்
இந்த வார இதழோடு
இனிதே
பயணம் முடிந்தது!

27 நவ., 2011

பெண்ணினம்...


பெண்ணினம் பற்றி 
தீவிர முழக்கம் 
ஆண்கள் போராட்டம் 


புதுமை பெண்ணுக்கு 
புத்துயிர் தர 
ஆண்கள் பரிந்துரை 


அட போங்கடா 
விட்டால் போதும் 
விட்டயிடத்தை 
பிடிப்போம் 
பெண்ணினம் 
செயலில்...


(அங்கதக் கவிதை ஒரு பார்வையில் )

22 நவ., 2011

யானைக்கும் அடி சறுக்கும்...





யானை பசிக்கு
கோழியே 

உறவானது
உறவாகி தொடர
கருவானது
கருவான நிலை
காமம் கண்ணை
மறைக்கும் 
என்ற சொல்லும்
யானைக்கும் அடி சறுக்கும்
என்ற பழமொழியும் 
உண்மையாகிப் போனது.


=================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

24 பிப்., 2010

முன் ஜாக்கிரதை !


என் இதயம்
உன் பெயரைத்தான்
சொல்கிறது என
கவிதைக்கு தான்
சொன்னேன்.


அதுக்காக இப்படி
சோதித்து பார்ப்பது சரில்லை.


நீ முன் ஜாக்கிரதை பேர்வழி
என்றாலும் அம்மாடி 
அதுக்காக இப்படியா ?

22 பிப்., 2010

படம் சொல்லும் கவிதை!



நீ ஊமை இல்லை
எனபது தெரியும்

இன்னும் ஏன் மௌனம் ?


உன் மௌனத்தின் அர்த்தம்

தெரியவில்லை.



உனது இந்த வழி எனக்கு 
புரியவில்லை 

என் காதலை

உண்மை என

கொள்!


ஊமையாய் 

வேஷம் போடாமல்
உன் இதழ் திறந்து

பதில் சொல்!




பூனையாய்...




என் காதலி ,
நான் தந்த முத்தத்தில்

பூனையாய் இருந்தவள்
புலியாய் மாறினாள்.


நானோ,
அவள் தந்த முத்தத்தால்

புலியாய் இருந்தவன்

பூனையாய் போனேன்!

புளியாய் கரைந்தே  போனேன்!