சமூகக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூகக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

3 ஜூன், 2012

அட சீய் மனிதனே...


மதங்களும் சாதிகளும் 
கலக்காத கரங்கள் 
இங்கே...


இதைக்கண்டு 
ஐந்துக்குள் ஆறு 
வெட்கப்படும்...


அடிதடி 
கொலைகள் 
மத்தில் மனிதன்...


அன்போடு 
அரவணைத்த நிலையில் 
பறவைகள்...


அட சீய் மனிதனே
என்று தான் சொல்லுமோ 
பறவை இனி கோபப்பட்டால்...

21 ஏப்., 2012

இவ்வுலகம்...



இல்லறம் நல்லறமானது
இரு உள்ளங்கள்
இணைத்த இல்வாழ்க்கையில்...


இரவுகளும் பகலாய் போனது
இன்பங்கள் படை சூழ 
இணைந்தன உடல்கள்...


இருவரின் நெருக்கம்
இணைப்பெருக்கம் தந்தது 
இருவர் மூவராய் போக...


இறைவன் தந்த இல்வாழ்க்கை
இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால்
இவ்வுலகம் சொர்க்கமாகும்...

20 மார்., 2012

உண்மை போதையை அறிவாய்...




குடியை கொண்டு 
குடியை கெடுக்க,
ஒத்திகைப் போராட்டம்!


கஷ்டத்தை மறக்க 
விஷத்தை குடிக்கும்,
குடிமக்கள் இவர்கள்!


இருப்பதை தொலைக்க,
இருந்ததை 
இழக்க
இருப்பதில் 
கொடுத்து வாங்குபவர்கள்!




மனிதன் என்ற பெயரில் 
வாழும் அரக்கர்கள்
இருந்தால் என்ன 
இறந்தால் என்ன !


வாடிகையாளராய் போனதால் 
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!


தற்கொலை வாதிகளே 
அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,


பின் நண்பர்களாய் தொடரும்
மனைவியோடு 
சுகமும்,கட்டில் பந்தமும் 
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!


உன் தலைமுறைக்கு 
முகவரியாய் இருந்துப்பார்
உணர்வாய் உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !

18 மார்., 2012

புது விடியலை கொண்டு துரத்து...


 

தனக்கு தானே 
வைத்துக்கொள்ளும் 
தீ 


போதைக்கு 
பாதைப்போட்டு 
வாழ்க்கைக்கு 
வாய்க்கரிசி போடுவதே 
குடி...


மானம் 
அவமானம் 
எல்லாம் போதைக்கு 
பயந்து ஓடிவிடும்...



குடிக்க குடிக்க 
நல் குடியை கெடுக்கும் 
இந்த குடி..


குடித்தால் 
உன்னை குடிக்கும் 
இந்த குடி 


குடியை தடிக் கொண்டு 
விரட்டு 
புது விடியலை கொண்டு 
துரத்து...



14 மார்., 2012

உனக்காக துடிக்கிறேன்!

 

விடிந்தது உலகம் என கொண்டேன்-விரலை
விரித்து எழுந்த சூரியனை கண்டு!
வீதியில் பார்த்தேன் விடியவில்லை-விழுந்த
வேட்டியை மறந்த மனிதனை கண்டு!

மது ஒன்று போதும் என்று-தினம்
மறவாமல் குடிப்பது உன் எண்ணம்!
மதுவோடு உன் உடலும் கரைவது.-கண்டு
மனம் கொதிக்கிறது தினம், தினம்!

நீ யாரோ நான் அறியவில்லை-நீ
நினைவின்றி காணும் போது பதறுகிறேன்!
நீ விடியலை தேடாமல் குடிப்பதை கண்டு -கண்களில்
நீர் வடிக்கிறேன் !உனக்காக துடிக்கிறேன்!

உன் சக மனிதனாய்...
உன் சகோதரனாய்...
உன் விடியலுக்கு ஏங்குகிறேன் ...!

25 பிப்., 2012

தேர்தல் ஒரு பார்வை!



தேடித் தேடி,வந்து சொன்னார்கள்
தேவைகளை நிறைவேற்றுவதாக,
பொதுத்தேர்தல் !


கேட்டதும் கிடைத்தது,
கேட்காததும் கூட கிடைத்தது,
இடைத்தேர்தல்!

31 ஜன., 2012

இயற்கையோடு...










இயற்கை இங்கு
கதிரவனின் 
காதல் கண்டு
சிவந்து விட்டது!

மரத்திற்கும்
மலருக்கும்,
இலவச மின்சாரமாய்,
கதிரவனின் சேவை!

பார்க்கும் கண்கள் எல்லாம்,
மயங்கவைக்கும் அழகு,
இயற்க்கை சொல்லும் பாங்கு!

யார் அங்கே?
கொஞ்சம் எல்லாம் தள்ளி வை...
இயற்கையோடு 
உன் உள்ளத்தை
இணைத்துவை!

இயற்கையோடு 
உன் இருக்கையை 
படுக்கையை
இருக்குமாறு மாற்றிவை!

அவசர உலகத்தில் 
சற்று இளைப்பாற
இயற்கையோடு 
இணைந்துக்கொள்...

உலகத்தின் 
மாசுக்கு விடைக்கொள்
புதிய மரத்தை 
விதைக்க 
கற்றுக்கொள்....

25 ஜன., 2012

பெண்ணின் நிலை...


பிஞ்சுக் குழந்தைகளும் 
பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !

பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா.

சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே

கோலம் போடா குனிந்தாலும்
போகும் வண்டியும் நிற்குதே!

வேலை செய்கிற நேரத்திலும்,
புடவை மேலே பார்வை 
மேய்கிறதே 

ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !

21 ஜன., 2012

கொலை...



வேடிக்கை பார்க்கும
கைகளுக்கு
பட்டாசு
கிடங்கில் வேலை.

ஊசி வெடி, 

யானை வெடி ,
என சொல்வதுவுண்டு.
அத்தனையும் இந்த
பிஞ்சுகள் 

செய்வது வருவதுண்டு

ஏழ்மை இங்கு
ஏக்கத்தோடு பார்க்க ...
பட்டாசு பரிதாபத்தோடு
பார்க்க...


தீயோ வெறியோடு பார்க்க...
பாதுகாப்பு

இல்லாத வாழ்க்கை...

வறுமை கொண்ட 
வாழ்க்கை
ரொம்ப கொடுமை. 
வாழனும் என்பதற்கு
செய்யும் வேலை


கந்தகம் வெடித்தால் 

உடல்கள் 
சிதறும் நிலை...


இது ஒரு வகை 
வறுமை செய்யும் 
கொலை...

20 ஜன., 2012

நாமும் அரவணைப்போம்...




குழந்தை 
தொழிளார்களுக்கு
சட்டமுண்டு
இருந்தும் 
வேலைக்கு 
சேர்ப்பதுக்கண்டு
கோவம் வருவதுண்டு 


பிச்சை எடுப்பதை 
தடுக்க நினைப்பதுண்டு 
இருந்தும்
இப்படி குழந்தைகளை 
கண்டால் மனதில் 
இறக்கம் கண்டு 
கொடுப்பதுமுண்டு 


கையேந்தும்
குழந்தைகளுக்கு
அரவணைக்க யாருண்டு...


பிள்ளை இல்லாத
பெற்றோர்களும்,
இவர்களை தத்து எடுக்க
தயங்குவதுண்டு


பெற்ற பெற்றோர்களும் 
வயிற்றுக்கு
பிச்ச எடுக்க
பிள்ளைகளை
அனுப்புவதுண்டு


இதை தொழிலாகவே
செய்வதுண்டு
இதற்காக குழந்தைகளை 
கடத்தும் கூட்டமுண்டு 


எல்லாம் அறிந்தும் 
தெரிந்தும் 
இவர்களை 
அரவணைக்க 
யாருண்டு....


பெற்றால் தான்
பிள்ளையா ...
என்ற கேவியோடு 
உதவும் கரங்கள் 
இருப்பதை போல


நாமும் அரவணைப்போம் 
இல்லாமை தடுப்போம் 
கல்வியை கொடுப்போம் 

19 ஜன., 2012

இல்லறத்தின் மாண்பு...எனது ஐநூறு



படைப்பு  ஐநூறு 


ஊடல் கொள்ளும் 
காதலே..
உணர்ச்சிகளின் 
தொகுப்பு


தொகுப்புகள் 
நடத்தும் வகுப்பு
அதன் பின்னே 
முன்னுரைக்கும்
காமத்தின் 
கிளுகிளுப்பு


உறவுகளின் 
புவி ஈர்ப்பு
உண்டாக்கும் 
படபடப்பு!


முத்தத்தில் 
நுழைந்து
தழுவலில் 
இணைந்து
அறிந்து
மகிழ்ந்து
புணரும்


ஊடலோடு 
காணும் இன்பம்
உண்மை 
இரு இதயங்களின் 
பிரதிபலிப்பு...


பெற்றோர்களாய் 
தாத்தா
பாட்டியாய்
மறுபிறப்பு 
இதுவே 
இல்லறத்தின் 
மாண்பு...

15 ஜன., 2012

இடைத்தேர்தல்...


மறைந்த 
முன்னாள்  வேட்பாளருக்கு
இரங்கல் தீர்மானம்...

ஓட்டுகள் பெற
அனுதாபம் 
நிறைவேற்றப்பட்டன

வெற்றியை தேடி 
ஆளும் கட்சியும் 
தோல்வியை சமன் 
செய்ய எதிர்க் கட்சியும்...

சொன்னதும் 
சொல்லாததும் 
போட்டிப்போட்டு 
செய்து முடிக்கப்பட்டன...

சிலவாய் ஒரு மரணம் 
வரவாய் தொகுதி 
நிவாரணம் 
இதுவே இன்றைய 
இடைத்தேர்தல் 

10 ஜன., 2012

ஆண்மகன் என சொல்லாதே!



காதல் இல்லையேல் சாதல்-என
வழி முறையை கொண்ட இவனை
நாளைய தலைமுறை என்று-நீ
சொன்னால் நீயோ கிணற்று தவளை!

வாழும் முறையே அறியாத -இவனை
ஆண்மகன் என சொல்லாதே!
வழிமுறை தெரியாத இவனை-உன்
மகன் என்றே கூறாதே!

நல்லெண்ணம் வரும் வரை-உன்
வீட்டுக்குள்ளே சேர்க்காதே!
கறை நீக்கி குறை போக்கும்வரை-நீ
கண்ணீர் விட்டு கரையாதே!

30 டிச., 2011

போலிச்சாயம் பூசி...





என் பெயர் ஜனநாயகம்...
தெருக்கோடியில் 
கொடிகள் ஏற்றி 
தன்னை அடையாளமிட்டு 

வேட்பாளராய் நின்று
வெற்றி பெற்றேன்,
நானும் கோடியில் வளர.

படிக்காமலே
நானும் கல்லுரி கட்டினேன்
கல்வியை 

வியாபாரமாக நினைத்து.

மருத்துவம் படித்தேன்
மருத்துவம் 

செய்து பணத்தை
கொள்ளை அடிக்க...

அதிகாரத்தை 

துஷ்பிரயோகம் செய்து 
என் இஷ்டப்படி 
சட்டத்தையே 
வளைத்தேன் 

லஞ்சமே 

என் மூலதனம்,
வாங்குவது 

மட்டும் சட்டமாகும்.

மந்திரிகளுக்கும்

பணக்கார ஜாதிகளுக்கும்,
நான் அடிமை....
இருப்பிலும் 

நான் சொல்லுவேன்...

இது தான் 

ஜனநாயகம் என்று
போலிச்சாயம்
பூசி...

26 டிச., 2011

சொர்க்கம் கண்டு



சிறுத் துளி 
விந்திலிருந்து
கருவுக்குள் விழுந்து,
தண்ணீரோடு வாழ்ந்து,
முட்டி, மோதி,
வலியோடு வெளியேறி,
பெற்ற வாழ்க்கை கொஞ்சம்,
இதில் ஏனடா 
தற்கொலை எண்ணம்!


அவசரம் தாண்ட 
உன் வாடிக்கை,
காதல் எனபது கேளிக்கை,
அதுக் கூடவா 
உன் உடன்படிக்கை,
இதனால் தானா
உன் தற்கொலை?


சீ! வெட்கம் கேட்டவனே!
பூமியை பார்.இன்னும் பார் .
உனக்கு யாருடன் கோபம்?
பூமி மீதா ? 
இல்லை மனிதனிடமா ?
பூமி உன்னை 
விட்டு சுற்றுகிறதா ?
உன் தாய் வலிக்கு பயந்து
கருவிலே அழித்தாளா?


உன் ஆற்றல் 
தெரியுமா உனக்கு?
உன்னால் பூமியை 
வெல்ல முடியும்.
மேல் நோக்கி 
பறக்க முடியும்.
மண்ணுக்குள் புதையவா
கயிறுக்குள் நுழைந்தாய்?
இதற்காகவா கருவுக்குள்
உன்னை சுமந்த
உன் தாய் !


அன்பாய் 
அதன் உருவமாய்,
கவியாய்,நீஅழைத்தால்,
உருமாறும் உலகம்.
உனக்கு ஏன் 
தடுமாறும் மனம்


வளம் ,வலம் 
வரும், வண்ணம்,
வாழும் எண்ணம் கொண்டால்,
உன் வாழ்க்கை மஞ்சம்,
ஏன் இன்னும் தயக்கம்.


வாழப் புறப்படு
வாழும் போதே
சந்தோஷமாய் 
இருந்திடு 

சொர்க்கம் காண 
முனைந்திடு 
சொர்ர்க்கத்தில் 
வாழ்ந்திடு 

23 டிச., 2011

கணவன் மனைவி சூத்திரம்...



உடல் தரும் மாற்றம்
இதை கண்டு 

வாலிபம்  தடுமாற்றம்.
காமம் எனபது 
உணர்வாகும்...
கண் சிமிட்டும் 
நேரத்தில் நம்மை 
வந்து தாக்கும்...

அமைதிக் காக்கும் 
வழிகள் தெரிந்தாலும்
திருமணம் 
என்ற உறவாகும்
அவமானம் 
காணாத வழியாகும்...

தன்மானம் 
காக்கும் நிலையாகும் 

விபரிதம் 
போக்கும் உறவாகும் 
கணவன் மனைவி  
சூத்திரம் 
அன்பைக் காட்டும் 
பல்கலைக்கழகம் 

விவாகம் 
ஒன்றே சிறந்ததாகும்.
நோய்கள் போக்கும் 
மருந்தாகும்

வரும் தலைமுறையை 
காக்கும் ...

22 டிச., 2011

இது என்ன கோட்பாடு?





கடவுளை வணங்காதே
கடவுள் இல்லை என்று
நாத்திகவாதிகள்
சொல்வது உண்டு.

தங்களது 
மறைந்த தலைவனுக்கு
சிலை வைத்து
மாலை
மாரியாதை என்று
வணங்கி வருவதுமுண்டு!


காட்சிகள் 
மட்டுமே இங்கு
மாற்றம்.
சொன்ன செயல்களில்
தடுமாற்றம்!



நம்பிக்கை எனபது 
அவரவர்  விருப்பம் 
உன் வார்த்தைகள் தந்ததோ
ஏமாற்றம்!
பகுத்தறிவுவாதியே
ஏன் இந்த மாற்றம்
குழப்பம்...?

20 டிச., 2011

புது அவதாரமாய் பொய்...



பொய் யென
நினைத்தால் 
பெய்யும் பொய் 

கண்களால் 
கண்டதும் 
காதால்
கேட்டதும் 
பொய்யென்று 
தெரிந்தாலும் 

தீர சேகரித்து 
மெய் யென சொல்லும் 
பொய்.


பொய்க்கு 
வார்த்தைகள் 
கோர்த்து 

பலப் பல
வண்ணமிட்டு
புன்னகை தொடுத்து 
புது அவதாரமாய்...

ஒப்பனை செய்து
நிஜமாக்கிக் 
கொள்கிறோம்.
உண்மையை 
கொல்கிறோம்

மனிதத்தையே 
குழித் தோண்டி 
புதைக்கிறோம்...


அனுதினம் 
சொல்லும் சில 
பொய்களும்...

17 டிச., 2011

உடன்கட்டையாய்





இல்லம் 
பாதுக்காக்க 
நிலையோடு 
கதவுகள் 


நடந்து பழக
நடைவண்டி 
உட்கார்ந்து 
எழுதி படிக்க 
மேஜை ,
நாற்காலி 


இரவுக்கு 
இன்பம் பெற 
கட்டியில் 
எல்லாம் 
மரத்தின் 
அடைக்கலம் 


மரத்தை மறந்தான் 
வேலை நிறுத்தமா 
மரத்தை தானே 
வெட்டி போட்டான் 


மழையை 
தள்ளி வைத்தான் 
சுத்தமான காற்றை 
தூக்கி எறிந்து
மறந்த நிலையில் 
நடை பிணமாய் 


மரணத்தில் மட்டும் 
எரியும் மரத்தோடு 
நன்றி மறந்த  உடலோடு 
உடன்கட்டையாய்
மனிதன்!



16 டிச., 2011

காதல் வினை




உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .


எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட 
வாழ்க்கைக்குள் 
சேர்ந்துக் கொண்டோம்.




மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதிலுரைத்து 
ஆட்சி புரிகிறோம் .


காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்.


ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .


கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .


நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோமா.

இல்லை 
இன்றுதான் நம் ,
பெற்றோர்களின் மனம் 
படிக்கிறோமா...


இதுக்குதான்
தன வினை 
தன்னை சுடும்,என்று
சொன்னார்களோ ...


காதல் எனபது
இணைப்பதில்லை 
பிரிப்பது எனபது உண்மை.


காலத்தின் கட்டாயம் 
காதல் வந்தால் 
வாலிபனுக்கு 
ஆனந்தம் .
பெற்றோர்களுக்கோ 
மனக் கஷ்டம்.


ஓடிவந்த பின் அவர்களின் 
அவமானம் ஒன்று போதும் 
நம் வாழ்க்கை விளங்காமலே 
போகும்!


வேணுமா இந்த காதல்...
சொல்லுங்கள் 
கொஞ்சம் பெற்றோர்களாய் 
காதலர்களே மாறுங்கள்...
உண்மை அறிய !