வாழ்த்துக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

8 ஆக., 2013

அனைவருக்கும் எனது ரமலான் பெருநாள் நல் வாழ்த்துக்கள்...



பசி வந்தால் அனைத்தும் 
பறந்து போகும் இது பழமொழி 

ரமலான் வந்தால் 
ரஹ்மான் அருளால்
பசியே பறந்து போகும் 
இது நபி வழி...

கறையை போக்க 
பிறை சொன்னது நோம்பினை 
நோற்று அறிந்தோம் 
அதன் மாண்பினை...

ஏகன் அருளிய மறையை 
அதன் கிருபையை அறிந்தோம்
நன்றி சொல்லவே 
பசியை மறந்தோம்...

புத்தாடை உடுத்தி 
உள்ளதில் கொடுத்து 
உள்ளம் மகிழ்ந்து...

பிறை கண்டு நோற்றோம் 
பிறை கண்டே பெருநாளை 
ஏற்றோம்...

இருக்கும் காலம் வரை
இருப்பதில் கொடுத்து வாழு 
இறைவனை மட்டும் வணங்கு....

அனைவருக்கும் எனது 
ரமலான் பெருநாள் நல் 
வாழ்த்துக்கள்...

12 நவ., 2012

தீபத் திருநாளில்...



தீபத்தின் ஒளியில் 
வறுமை மறையட்டும் 

பட்டாசு சத்தத்தில் 
சாதி மதச்சண்டைகள் 
ஓடட்டும்...

அறியாமை விலகி 
அன்பு வளரட்டும் 

இல்லாமை இல்லாமல் 
இல்லங்கள் நிறையட்டும் 

மனித நேயத்தில் 
மனசுகள் மலரட்டும்...

இத்தனையும் 
இந்த தீபத் திருநாளில் 
கிடைக்க
எனது உள்ளம் கனிந்த 
வாழ்த்துக்கள்....

3 நவ., 2012

எனது ஆயிரமாவது பதிவு....



















எண்ணத்தை 
எடைப்போட்டு 
அதை வரிக்குள் 
அள்ளிப்போட்டு...

வெட்டு ஒன்னு 
துண்டு இரண்டு 
வெட்டிபோட்டு...

ஒவ்வொரு 
தலைப்பாய் 
கூறுப்போட்டு...

சிரிக்க
சிந்திக்க 
தந்த   நிலையில் 
படித்தது 
உங்கள் மனம்...

வளர்ந்தது எனது 
தளம் 

வண்ண வண்ணமாய் 
படங்களும் 
ஆயிரத்தில் அடங்கும்....

சொந்த எண்ணத்தோடு 
சில 
காப்பி பேஸ்டும் 
இதில் அடங்கும் ...

நனறிகள் நன்றிகள் 
சொல்லும் 
எனது உள்ளம் 

9 செப்., 2012

மம்முட்டி என்னும் மனிதனை...




















மனிதம் இங்கு 
இந்தியனாய் 
முகம் பார்க்க...

ஈகை இடமாற 
ஈர்த்தது உள்ளம் 
வாழ்த்தும் வண்ணம்...

கந்தகத்தில் 
கரைந்து 
காயம்பட்ட 
உயிர்களுக்கு...

மருந்தை 
மனமார தந்த 
மம்முட்டி
என்னும் மனிதனை 
பாராட்டுவோம்...!



18 ஜூன், 2012

என் மகனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்....



நான் எழுதிய கவிதைக்கு 
கருவாகி
இன்று தோழனாய் 
உருமாறி
இருபத்திரண்டு வயதை 
தொட்ட எனது 
மகனே...!

வாழ்த்தட்டும் காற்றும் 
நாளை நீ காட்டும் 
திசையும் வாழட்டும்...

வாழ்த்தட்டும் பூக்களும் 
நாளை உன் விரல்கள் 
இல்லாமையை 
போக்க உதவட்டும்....

வாழ்த்தட்டும் 
நல்லோர் உள்ளம் 
போற்றட்டும்
நண்பர்கள் உள்ளம்...

தீமை அகற்ற 
தீயாய் உன் எண்ணம் 
எரியட்டும்...
எட்டு திசையெங்கும் 
ஈகை வளர 
உன் கரங்கள் துடிக்கட்டும் 

என்றும் இனிமையாய் 
இனிதே வாழ்க நலமாய் 
எனது இனிய பிறந்த நாள் 
நல்  வாழ்த்துக்கள்....


9 ஜூன், 2012

உங்கள் வருகையால் ஐம்பாதாயிரம்...


வாசர்கள் வருகையால்
எனது வாசல்
விழாக் கோலமாய்...



எனது வலைதளத்தில்

சந்தோசத்தின் வாசனைகள்
உங்கள் வருகையால்


ஐம்பாதாயிரம் பக்கங்கள்
உங்கள் பார்வைப்பட்டு
திறக்கப்பட்டன


ஒவ்வொருமுறை
உங்கள் வருகையால்
வலைய தளத்தில் 
மகிழ்ச்சி ஒலி 
கூடிக்கொண்டே போகிறது...


சித்திரை  மாதத்தின் 
வெப்பத்திலும் 
உங்கள் வருகையால் 
எனது தளம் 
மார்கழியாய்...


நன்றி நன்றி நன்றி 
வாசக வாசகிகளுக்கு...


30 ஏப்., 2012

மே தின நல் வாழ்த்துக்கள்...


வாழ்க்கை கதவுகள் 
திறக்க உழைப்பு 
உறுதுணை செய்கிறது...

சிரிக்கவும், சிறக்கவும் 
உழைக்க தெரிந்தவனால் 
மட்டுமே முடியும்...

சர்வதேச தினமாய் 
எல்லோருக்கும் பொதுவானது
உழைப்பார்கள் தினமே...

ஒவ்வொரு வருடமும் 
உலகமே ஒரு வட்டத்தில் 
மே முதல் நாளில்...

உழைத்தவனுக்கு 
ஓய்வு எடுக்கு 
அறைக்கூவல் விட்ட நாள்...

இந்த நாளில் இன்னும் 
உழைப்பாளர்கள் உயர 
வாழ்த்துவோம்...!

உறவுகளுக்கும் 
உழைப்பாளிகளுக்கும் 
மே தின நல் வாழ்த்துக்கள் 

13 ஏப்., 2012

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....


சித்திரை திங்கள்
சிக்கலாகிபோனது 
வாழ்த்துச்  சொல்ல 
தடுமாறித்தான் போனது 

தையா?
சித்திரையா?
கேள்விகளோடு 
தமிழ்ப் புத்தாண்டு 
பட்டிமன்றம்...
ஒருபக்கம்...

தமிழுக்கு தொடக்கம் 
"அ "என்றால்...
வருடத்தின் தொடக்கம் 
சித்திரை என்ற முழக்கம் 

முழக்கத்தின் முகவரியை 
வாழ்த்துக்கள் தொடரட்டுமே...

தமிழர்களின் 
வேதனைகள் அழிந்து 
வரும் வருடம் 
வசந்தம் வீசட்டுமே...

 உறவுகளுக்கு
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்....

20 மார்., 2012

நன்றி,நன்றி ,நன்றி .நன்றி...





பத்தாயிரம் உள்ளங்கள் 
முப்பத்திரண்டாயிரம் பக்கங்களை புரட்டி 
எனது வலை தளத்துக்கு பெருமை தந்த 
        உங்களுக்கு...
நன்றி,நன்றி ,நன்றி .நன்றி !



நட்புக்கு ஈர்ப்புண்டு 
அதை உங்கள் வருகையில் 
நான் கண்டதுண்டு...


பூட்டியே இருந்த 
தளத்துக்கு...
புதிய திறவுகோளாய் 
உங்கள் பார்வைகள்...


எனது எண்ணங்களுக்கு 
புதிய விடியலை 
தந்தது உங்கள் வருகைகள்...


நிலவின் ஒளிப்போல 
உங்கள் சத்தமில்லா 
ஒளிகள் விழுந்து 


இன்று பத்தாயிரம் 
ஒலித் தடங்கள் 
எனது வலை தளத்தில்
சத்தமே இல்லமால் 
புரட்டிய பக்கங்கள் 
முப்பத்திரண்டாயிரம்
முகம் பார்க்க 
உள்ளம் மகிழ்கிறேன் 
உங்களால்...


நன்றி நன்றி 
தோழர்களே...
இன்னும் தொடர உங்கள் 
வருகைகள் வழக்கம் போல் 
இருக்கட்டும்...


நன்றிவுடன் 
உங்கள் தோழன் 
கலைநிலா 

1 டிச., 2011

என் இனிய மாப்பிளையே


மாப்பிளைக்கு 
பிறந்த நாள் 
இன்று...


உன் உள்ளத்தை 
அறிந்து 
வியந்து போகிறேன் 


உன் எண்ணத்தை
அறிந்து 
மலைத்து போகிறேன் 


உன் அறிவைக் கண்டு 
பெருமைக் கொள்கிறேன் 


நீ என் மருமகனாய்
பிறந்ததை எண்ணி 
மகிழ்கிறேன் 


இன்று 
உன் பிறந்த நாள் 
சிறப்பாய் வாழ 
வாழ்த்துகிறேன் 


பாத்திமா என்ற 
நம்பிக்கை
நம்பி பிடித்த கை
உன் இல்வாழக்கை.


இன்னும் சிறக்கும் 
எல்லோரும் 
போற்றும் படி 
இருக்கும் 


முத்துக்கள் இரண்டு 
முகவரியாய் இருக்க 
கவலைகள் எல்லாம் 
ஓட்டம் பிடிக்க...


மகிழ்வுகள் 
எல்லாம் அணித் திரண்டு 
உன் வாசலுக்கு 
வந்து நிற்க...



கூடும் வயதோடு 
உண்மை பேசும் 
உள்ளத்தோடு 
உறவுக்கு 
கைக்கொடுக்கும்
உன் சிறப்பு 


சில வலிகள் 
போக்க 
உன்னை 
அறிந்துக் கொள்ள
வழிப்பிறக்கும்
உன் நடப்பு...


உண்மைகளை
அறிந்து.
உன் உள்ளத்தை 
புரிந்து 
இறைவன் தருவான் 
என்றும் நன்மையே...


வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கள்...
என் இனிய மாப்பிளையே