11 ஜன., 2012

மீண்டும் ஒரு சுதந்திரம்...


வாழ்க்கையே இயந்திரம்
இவனுக்கு வேண்டும்
மீண்டும் ஒரு சுதந்திரம்

நிம்மதியை விற்று
வாழ்க்கையே தொலைத்து
யாருக்கா வாழ்கிறான்...

இவனின் வேர்வைத் துளிகள்
உலகவங்கியில் வட்டியாக
போவதை அறியாதவன்

சூரியனை கோபப்படுத்தி,
கோடைக்காலத்தை
வருடம் முழுதும் 
வாங்கி தந்த 
ஆயுத வியாபாரிகளின் 
ஊழலை அறியாமல்...

உழைத்து தானும் எடுத்து
நாட்டுக்கும் வரியாய்
கொடுத்து வாழும்
கோமாளி இவன்...

தேர்தல் என்றால் 
தேடிச் சென்று 
வாக்கை பதிக்கும்
பாமரன்...

விடியாத உதயம் 
வராத நிலவு 
இது தானே 
இவனின் வாழ்வு 

இவனுக்கு வேண்டும்
மீண்டும் ஒரு சுதந்திரம்!

2 கருத்துகள்:

  1. ''...இவனுக்கு வேண்டும்
    மீண்டும் ஒரு சுதந்திரம்...''
    சுதந்திரம் பற்றி எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி நன்றி ...

    பதிலளிநீக்கு