மகளிர் அணித்தலைவி
எதிர்க்கட்சி தலைவரை
பார்த்து இந்த சத்தத்துக்கு
எல்லாம் நான் பயப்பட மாட்டேன்
என்று தைரியமா சொல்லுறாங்க...
அவங்க புருஷன் விடும்
குறட்டைக்கே கலங்காதவங்க ஆட்சே
இதுக்கு எல்லாம் அஞ்சுவங்களா என்ன...
========================================
நம்ம தலைவரோட மனைவி
எழுதிய உறங்காத இரவுகள்
கதைக்கு விருது கிடைத்து
இருக்காமே...
சொந்த கதை சோககதை
தலைவர் விட்ட குறட்டை பத்தி
தான் கதையா எழுதியது ...
=========================================
தலைவரை இரவில் கைது பண்ணி
பகலில் விட்டுவிட்டார்களே
நம்ம தொடர்களை பார்த்து
பயந்து தானே....
அட நீ ஒன்னு தலைவர் நேற்று ராத்திரி
விட்ட குறட்டை கேட்டு சிறையிலுள்ளவர்கள்
பயந்து போனதால் தான் உடனே விடுதலை...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக