10 ஜன., 2012

ஆண்மகன் என சொல்லாதே!



காதல் இல்லையேல் சாதல்-என
வழி முறையை கொண்ட இவனை
நாளைய தலைமுறை என்று-நீ
சொன்னால் நீயோ கிணற்று தவளை!

வாழும் முறையே அறியாத -இவனை
ஆண்மகன் என சொல்லாதே!
வழிமுறை தெரியாத இவனை-உன்
மகன் என்றே கூறாதே!

நல்லெண்ணம் வரும் வரை-உன்
வீட்டுக்குள்ளே சேர்க்காதே!
கறை நீக்கி குறை போக்கும்வரை-நீ
கண்ணீர் விட்டு கரையாதே!

2 கருத்துகள்:

  1. பெயரில்லா11 ஜன., 2012, 8:12:00 PM

    சீராட்டி வளர்ந்த மகன் பாராட்டிப் பிறர்கூற பார்புகழப் பயன்வாழ்வு வாழாது வடித்திடும் குருதி சாக்கடையின் நீருக்கு சரிநிகர் சமமே... சமூக மீதான கவலையில் சுழற்றியசாட்டை கலைநிலா உங்களின் வரிகள்...அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்

    பதிலளிநீக்கு
  2. நன்றி தோழரே உங்கள் மறுமொழிக்கு

    பதிலளிநீக்கு