8 ஜன., 2012

வள்ளுவன் வாக்கு...


இரு வரிக் குறளில்
இவர் தந்த குறளே
உண்மையை விளக்கும்

உலகம் போற்றும்...

அறத்துப்பால் 
பொருட்பால்
காமத்துப்பால் என
முப்பால் தந்த 
தமிழ்ப்பால் ...

தமிழ் தந்த உறவால்
இவர் தந்த குறளால்
குரலோடு சொன்ன
குறளின் அன்பால்
இவர் மேல்
நான் கொண்டேன் காதல்!

1330 குறள்களில்
 
பக்தியின் நிலை
வாழ்க்கை முறை
வாழும் நிலை...

நட்பின் வகை
கல்வியின் தேவை
எண்ணற்ற கொள்கை
இவர் தந்த வகை
திருக்குறளாய்
உலகமே வியக்கும் 
மகிமை...

அழகிய தமிழை 
இவர் போல யாரும்
சொன்னதில்லை.
சொல்லப்போவதுமில்லை

தமிழில் இருவரிகளில் 
எழுதிய  வழிமுறை 
இவர் தந்த குறளே
பல மொழிகளில் 
சாதனை...

வள்ளுவன் 
குரலாய் இன்றும் 
பாடும் போதனை 
பார்த்த நிலையினை 
வள்ளுவன்  புகழினை 
சொன்னால் 
தவறுயில்லை 

வள்ளுவன் 
வாக்கு 
பொய்ப்பதில்லை!
வள்ளுவனை 
வாழ்த்த வயதில்லை...!

வள்ளுவன் மீது காதல் 
கொண்டால் தவறில்லை
தமிழே இவர் என்றால் 
தமிழுக்கே பெருமை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக