விழி நீரை துடைக்கவேண்டாம்
கரங்கள்..
விழுந்தால் சிரிக்காமல் இருந்தாலேபோதும் உறவுகள்..!

அணைகளுக்கு கட்டுபடாது
நீர் அலைக்கள்
ஆணைக்கு கட்டு படாது
காதலின் உணர்வுகள்..

சிதறினாலும்
சோர்ந்து போனாலும்
எல்லாமே
பார்க்கும் நிலையின்
எண்ணத்தின் பதிவுகளே...

வலிகளுக்கு
ஆறுதல்
தேடி அழைந்தேன்
நீ அந்த வலிகளை தாங்க
நட்போடு
உன் இதயத்ததை
தந்தாய்..!

புண்பட்ட மனதுக்கு
கை பட நேரமில்லை ..
சொல் பட்டு வாழும் மனதுக்கு
மாற்றமேஇல்லை..!
முதிர் கன்னிகள்..!
அதிகாலை கனவு
மட்டும்
எங்களுக்கு பலிப்பதே இல்லை...!