31 அக்., 2014

விதைத்தவள் நீ..!


உன் விழி பறவைகள் 
படபடக்கும் அழகில்
தூரத்து பார்வையில்..!

உன் விலாசத்தை 
எனக்குள் 
விதைத்தவள் நீ..!

மனசாவது...!

ஆர்பரிக்கும் மனதுக்குள் 
ஆனந்தம் .
அடக்க விருப்பமில்லை 
அனுபவிகட்டும் 
மனசாவது...!

2 அக்., 2014

நட்பூ பூக்கும்.

அன்பை 
விதைத்துப்பார்
நட்பூ பூக்கும்.

============
நிலவை பார்க்கும்
அல்லியாய்
உன்னை தொடரும் 
நிழலாய் 
உனக்குள் நிஜமாய் ...

=====================
நிலவை பார்க்கும்
அல்லியாய்
உன்னை தொடரும் 
நிழலாய் 
உனக்குள் நிஜமாய் ...

===================

எளிது...!

வலி யது போக்கும் 
மகிழ்வதே கொடுக்கும் 
நட்பை அறிவது அரிது
அந்த 
நட்பை கொடுப்பது

எளிது...!

மாறினான்....

மொழியால் 
மதத்தால் 
ஜாதியால் 
அரசியலால் 
வேறு பட்டு
தன்னை தானே உயர்வாய்
நினைத்து
மனித நேயம் மறந்து
மனிதன்
ஆயுதமாய் மாறினான்....