வாலிப தேசத்தில்
காதலே கொள்கை...
உனக்கு இல்லை என்றாலும்
எனக்கு காதல் என்னை காதலி
இல்லை...கொலையாய் தற்கொலையாய்
மாறும் அபாயம்...
தனி மனிதனின் காயங்களுக்கு
சாதி ,மத சாயங்களை
பூசப்பட்டு ஊர்வலம்...
திட்டமிட்டும் நடக்கிறது
சில காதல்
காய்ப்பட இல்லை அவமானப்பட
செய்யவே...
யெல்லாம் அறிந்தும்
தெரிந்தும் ஏனடா
இந்த காதல் உனக்கு...
உன்னை நீயே அழித்துக்கொள்ள
நோயின் தொடக்கம்
தொண்டர்கள் படை சூழ
நடைப்பயணம்
====================
மறந்த வாக்காளருக்கு
நினைவூட்டல்
போராட்டம்...
====================
விதவை குறிக்கீடு
விபரீதம்
நம்பிக்கை இல்லாதவன்...!
வரமாய் நினைத்தேன்
வதமாய்
மாறும் வரை...
============================
காதல் வந்தால்
கவிதை வரும் என்றார்கள்
நானும் தினமும்
பார்த்துக்கொண்டுதான்
இருக்கிறேன்
கவிதை வரும் யென்று...
நான்கு திசை பார்த்து பார்த்து
என் கழுத்தில்
வலி வந்தது தான் மிச்சம் ...
நல்வரவு
நாய்கள் ஜாக்கிரதை
மனிதர்கள்...!
===================
ஆளும் கட்சி எதிர் கட்சியாய்
எதிர் கட்சி ஆழும் ஆளும் கட்சியாய்
காட்சிகள்...
===================================
கட்சி மாற்றம்
வரவு சிலவு கணக்கு
அரசியவாதிகள்...!
===================================
அச்சதோடு பயணம்
மழை வருமோ என்று
பயத்தில் ஒரு பக்கம்...
வெப்பத்தின் நெருக்கடியில்
தப்பிக்க
மழை வராத என்ற
ஏக்கத்தில்...