30 செப்., 2012

மெடிக்கல் டீ போடுங்க...சிரிக்க மட்டும்,


எனக்கு சாதா டீ ,மச்சானுக்கு மெடிக்கல் டீ போடுங்க...

அது என்ன மெடிக்கல் டீ ?

மச்சானுக்கு இனிப்பு நீர் , சக்கரை இல்லாத டீ தான் 
மெடிக்கல் டீ...
=============================================
தலைவர் இப்ப எல்லாம் மோதிரத்தில் கூட 
கல் வைக்காமல் தான் போடுகிறார் 

ஏன் 

அதையும் கிரானைட் கல் என்றும் சொல்லிவிடுவார்கள் 
என்று பயம் தான்...
===============================

29 செப்., 2012

அவர் ராசிக்கு...சிரிக்க மட்டும்,


கட்சியை விட்டு செயலாளர் ,தலைவர் இருவரையும் நீக்கி விட உத்தரவுவிடுகிறேன்...

தலைவரே உப தலைவர் என்று சொல்லாமல் தலைவர் என்று 
தவறா சொல்லிவிட்டீர்கள் 
=======================================
ஏன் தலைவர் கட்சிலிருந்து யாரையாவது தினம் நீக்கி 
பின் மன்னித்து விட்டேன் என்று சேர்த்து  வருகிறார் ?

அவர் ராசிக்கு நீக்கி பின் சேர்க்கனுமாம் அதான்...
==========================================

தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நன்றி நக்கீரன் 

28 செப்., 2012

இலவசமாய் கனவு...


 

பேருந்து பயணத்தில்
சின்ன தூக்கம்
இலவசமாய் கனவு...

==================
கட்டணத்தில் காரமாய் 
எட்டாத பழமாய்
மின்சாரம்...
-------------------------------------------
காத்திருப்பு தருணங்களில்
அறிய தரும் 
வாழ்க்கை
=======================

தமிழ்நாடே இருளில் மூழ்கியுள்ளது! டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றச்சாட்டு!



சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் வடசென்னை திமுக சார்பில், திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க வ- யுறுத்தியும், சென்னை மாநகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட டிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டும். குறிப்பாக வியாசர்பாடி, மூலக்கடை ஆகிய மேம்பாலங்களை உடனே கட்டி முடிக்க வேண்டும்.

சென்னை மாநகராட்சியை அதிமுக கைப்பற்றிய பிறகு, சென்னை முழுவதும் எங்கு பார்த்தாலும் குப்பைகள், கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. சென்னையில் எங்கு பார்த்தாலும் காலரா பரவி வருகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் சென்னையில் காலரா இல்லை என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். பாதிக்கப்படுவது மக்கள்தான். ஆகவே மக்களின் நலன் கருதி, சுகாதார பணிகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தற்போது தமிழ்நாடே மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கியுள்ளது. மின்சாரம் சீராக கிடைக்காததால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்குக்காக என்றும் பாடுபடக் கூடிய இயக்கம் திமுகதான் என்றார்.

நன்றி படம்: அசோக்...நக்கீரன்