21 ஜூன், 2012

சிபிஎம் ஆதரவு - சிபிஐ புறக்கணிப்பு


ஜனாதிபதி தேர்தலில் இடதுசாரி கட்சிகளின் நிலை குறித்து முடிவெடுப்பதற்காக அக்கட்சிகளின் உயர்மட்ட தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்றது. பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, ராமச்சந்திரன் பிள்ளை, ஏ.பி.பரதன் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதா, வேண்டாமா என்பதுதான் இக்கூட்டத்தில் இடம்பெற்ற முக்கிய விவாதமாக இருந்தது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முக்கிய தலைவர்கள் ஏற்கனவே பிரகாஷ் காரத், பரதன் ஆகியோரிடம் பிரணாப்புக்கு ஆதரவு கோரியிருந்தனர். எனவே பிரணாப்பை ஆதரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது. அதிலும் மேற்குவங்க மாநிலத்தின் மார்க்சிஸ்ட் எம்.பி.க்கள் பிரணாப்பை ஆதரிப்பதில் பிடிவாதமாக இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் பிரணாப்பை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்தன. எனவே இக்கூட்டத்தில் இடதுசாரி கட்சிகளிடையே ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இறுதியில் இடது சாரி கட்சிகள் தனித்தனியாக தங்கள் முடிவுகளை வெளியிட்டன. அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

பிரணாப்புக்கோ, சங்மாவுக்கோ ஆதரவளிக்க தங்களுக்கு விருப்பமில்லை என இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா கூறினார். அதே போல் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியும் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. ஆனால் மற்றொரு முக்கிய கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரணாப் முகர்ஜியை ஆதரிக்க முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் மேற்குவங்கத்தில் மம்தாவுக்கு எதிர்கட்சியாக விளங்கிவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மம்தாவை எதிர்ப்பதற்காகவே தற்போது பிரணாப்பை ஆதரித்துள்ளதாக தெரிகிறது. மற்றொரு இடதுசாரி கட்சியான பார்வார்டு பிளாக் கட்சியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது.

சந்திரனுக்கு சென்றுவர முன் பதிவு....

லண்டன், ஜூன்.21-
சந்திரனுக்கு பயணம் செய்ய ரூ.700 கோடி கட்டணம்: 2015-ம் ஆண்டு தொடக்கம் 
சந்திரனுக்கு பயணம் செய்ய ரூ.700 கோடி கட்டணம்: 2015-ம் ஆண்டு தொடக்கம்

பூமியில் பல இடங்களுக்கு சுற்றுலா சென்று வருகிறோம். தற்போது விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி அடைந்து விட்டது. அதை பயன்படுத்தி சந்திரனுக்கு ஆட்களை சுற்றுலா அழைத்து செல்லும் நடவடிக்கையில் இங்கிலாந்து நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

அதற்காக ஒருநபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி கட்டணம் நிர்ணயித்துள்ளது. அதற்காக ரஷியா நிறுவனத்திடம் இருந்து 6 விண்கலங்களை விலைக்கு வாங்கி உள்ளது.

ஒரு விண்கலத்தில் 3 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். சந்திரனுக்கு சென்று வரும் பயண திட்டம் வருகிற 2015-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

தற்போது, சர்வதேச விண்வெளி மையத்துக்கு சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். அதையும் தாண்டி பூமியில் இருந்து 3 லட்சத்து 76 ஆயிரத்து 586.5 கி.மீட்டர் தூரம் சென்று திரும்பும் பயண திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இது குறித்து லண்டனில் உள்ள வெஸ்ட் மனிஸ்டரில் நேற்று செயல்முறை விளக்கம் நடத்தப்பட்டது.

ஒருநபர் சந்திரனுக்கு சென்று வர ரூ.700 கோடி மட்டுமே....

உயரும் நம் மதிப்பு!


அனல் கக்கும் துன்பங்கள்
அடுக்கடுக்காய் சோதனைகள்
வீட்டில் இல்லை துணிமணிகள்
விளக்குகள் இல்லா குடிசைகள்!

இதுவரை படித்ததோ சோகக்கதை
இன்றும் இது ஒரு தொடர்கதை
இருள் போக்கும் என்ற நம்பிக்கை
இருப்பதால் தொடரும் வாழ்க்கை!

வரும் போதும் எதுவும் கொண்டுவரவில்லை
வாழும் போதும் எனக்கென எதுவுமில்லை
வருத்தப்பட எனக்கு ஒன்றுமில்லை
விரல்கள் இருக்குக்க எனக்கு பயமேயில்லை!

நேற்றைய உலகமும் கிழக்கில் உதித்தது
இன்றும் அது போலவே நிகழும்போது
நாளைய உலகத்தின் கவலை எதுக்கு
நாளும் உழைத்தால் உயரும் நம் மதிப்பு!

இன்று உலக அகதிகள் தினம்

இன்று உலக அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் பல்வேறு அரசியல் மற்றும் பொருளாதாரம் , உள்நாட்டு போர் ஆகிய காரணங்களால் அங்கு வாழும் மக்கள் அகதிகளாக வெளியேறுகின்றனர். எந்த ஒரு நாட்டிலும் உள்நாட்டு குழப்பம் ஏற்படும் போதோ, இனகலவரம் ஏற்படும் போதோ முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். இவர்கள் அகதிகளாக இடம் பெயருகின்றனர்.

ஆப்ரிக்கா நாடுகள் அதிகம்: அந்த வகையில் முதன்முதலாக ஆப்ரிக்க கண்டத்தில் தான் முதன்முதலாக ஜூன் 20-ம் தேதி அகதிகள் தினமாக அணுசரிக்கப்பட்டது. ஆப்ரிக்க கண்டங்களில் உள்ள 50-ம் ‌மேற்பட்ட நாடுகளில் சோமாலியா, எத்தியேபியா போன்ற நாடுகளில் பசி, பஞ்சம், பட்டினி போன்றவை தலைவிரித்தாடுகின்றன. சில நாடுகளில் உள்நாட்டு போர், பயங்கரவாதிகளின் தாக்குதல் போன்ற பல்வேறு காரணங்களால் அங்குள்ள மக்களை பக்கத்து நாடுகளுக்கு அகதிகளாக இடம் பெயர வைத்துள்ளது. போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் காலரா, மலேரியா போன்ற நோய்களுக்கு பயந்தும் மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ள கொடிய சம்பவங்களும் நடந்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2000-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதி அன்று ஐ.நா. பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி பல்வேறு காரணங்களால் இடம் பெயரும் மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டது.இதைத்தொடர்ந்து தான் ஐ.நா.வின் மனித உரிமை அமைப்பு சார்பில் ஓவ்வொரு ஆண்டும் ஜூன் 20-ம் தேதி சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

சமீபத்தில் வங்‌கதேசம், மியான்மரில் நடந்த இன கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அகதிகளாக மியான்மரில் குடியேற முயன்ற போது அவர்களுக்கு அடைகலம் கொடுக்க மறுக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

இந்தியாவில் 2லட்சம் அகதிகள்: சர்வதேச அகதிகள் தினத்‌‌தையொட்டி ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த 2011-ம் ஆண்டில் உலக முழுவதும் 8 லட்சம் அகதிகள் கட்டாயமாக நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இவற்றில் ஆசிய நாடான இந்தியாவில் ,பக்கத்துநாடான இலங்கை, திபெத் ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் தான் 2 லட்சம் அகதிகளாக வந்துள்ளனர். தவிர பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்தும் அகதிகள் இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா. மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.

தற்போது ஐ.நா. மனித உரிமை அமைப்பு, உலக அகதிகள் தினமான இன்று புதிய பிரசாரத்தினை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.இது குறித்து ஐ.நா. பொதுச்செயலர் பான்கீமூன் கூறுகையில், வாழ வழியில்லாத காரணத்தால் தான் அவர்கள் அகதிகளாக ‌இடம் பெயர்கின்றனர். அதிகரித்து வரும் அகதிக‌ளை கட்டுப்படுத்த சம்மந்தப்பட்ட நாடுகளின் ‌அரசியல் ரீதியான முரண்பாடுகளை களைய தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார்...

வல்லரசுகளின் கையில் 
இன்று உலக நாடுகள் 
உருமாறிய நிலையில் 

20 ஜூன், 2012

நடிகர் சிரஞ்சீவிக்கு கைது வாரண்ட்



தேடப்படும் குற்றவாளி :
நடிகர் சிரஞ்சீவிக்கு கைது வாரண்ட்
 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் கடந்த 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோபிநாத் போட்டியிட்டார்.

இவரை ஆதரித்து நடிகர் சிரஞ்சீவி பாகலூரில் பிரச்சாரம் செய்தார். அப்போது அரசாங்க அதிகாரி களை மீறி கூட்டம் கூட்டியதாகவோ, வாகனங்கள் அதிகம் வைத்திருந்ததாகவோ சிரஞ் சீவி, கோபிநாத் உட்பட 6 பேர் மீது தேர்தல் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 4 பேர் சம்மனை பெற்றுக்கொண்டு கோர்ட்டில் ஆஜரானார்கள். எம்.எல்.ஏ. கோபிநாத்தும், சிரஞ்சீவியும் சம்மனையும் வாங்கவில்லை. கோர்ட்டிலும் ஆஜராகவில்லை. இதனால் நீதிபதி கெஜராஜ், கோர்ட்டை மதிக்காமல் சம்மனை வாங்காத குற்றத்திற்காக கோபிநாத்தும், சிரஞ் சீவியும் தேடப்படும் குற்றவாளிகள் என்று கைது வாரண்ட் கொடுத்திருக்கிறார்கள்.
நன்றி நக்கீரன்