12 ஏப்., 2012

இன்னும்...



வாய்மையை
பொய்கள் ஒன்று கூடி 
நல்லடக்கம் செய்தன.


வாய்மை மீண்டும் 
சுகபிரசவமானது  
இந்த உலகத்தில்.


ஜாதியின் பெயரால் 
மதத்தின் பெயரால் 
மறைத்தாலும்...

எரித்தாலும் 
எதிர்த்தாலும்...



ஏதோ ஒரு உயிர்
வாய்மையை 
வாழவைத்துக் கொண்டு 
தான் இருக்கு 
இந்த உலகத்தில் 
இன்னும்...

சந்தேகம் இருந்தால்...சிரிக்க மட்டும்,





தலைவர் சொல்லுறதை வரவர பொறுக்க முடியவில்லை...

என்னால் குனிந்து பொறுக்க முடியாது என்று சொல்லுறதுதானே...

என்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமைஎன்ன கொடுமை ஐயோ! தலைவர் பேசுகிற பேச்சை சொன்னேன்...
============================================================
தலைவர்:

நடந்து முடிந்த செயற்குழு கூட்டத்தில் ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்..?

தொண்டன்:

புதுசா சேர்த்த மகளிர் அணி தலைவி செல் நம்பர் வேண்டும் தலைவா..!

தலைவர்:
 மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
===============================================================

காதலர்கள் நடக்கையில்,

 


கைகோர்த்து காதலர்கள் 
நடக்கையில் 


காதலர்களின் பிம்பத்தை 
கார்மேகம் சொல்லும்.

இரு இதயங்களுக்கு 
குடைப் பிடிக்கும்.
காதலர்கள் கடல்கரை 
மணலில்  எழுதும் கவிதைக்கு
அலைகளோடு சேர்ந்து
கடல் காற்றும்
ஜதி சேர்க்கும்.

கடலும் ,காதலும் 
இயற்க்கைக்கு மகுடமாய் 
பிரதிபலிக்கும்...

10 ஏப்., 2012

நான் எப்ப போவேன்...சிரிக்க மட்டும்,


ஆசிரியர்:
நான் எப்ப போவேன் ,எப்ப வருவேன் என்று அதுக்கே  தெரியாது...
இது யாரு ?

மாணவன்.
நம்ம மின்சாரம் தான்...

======================================
மின்சாரம் போனதால் சம்சாரத்தை தொட்டது தப்பாச்சி?

என்ன பிரச்சனை 

புதுசா குழந்தை பிறந்து போச்சு 

  மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்
====================================

உன் கையை மூலதனமாக்கு...




தேவதையே!
உன் தேவைக்கு 
கை நீட்டும் நிலை 
மறந்தால் உணர்வாய்
உழைத்தால் உயர்வாய்!



தானம் வாங்குவதை 
அவமனாமாய் நினைத்து 
கையேந்தும் நிலை விட்டு 
உன் கையை மூலதனமாக்கு...


உன் விரல்களும் வழிச் சொல்லும்,
புது விடிகள் பிறக்கும்.
தடைகள் வரும் கவலை விடு,
விடைகள் அறிய விண்ணப்பமிடு!
நீயே உனக்கு ஏணி,
அறிந்தால் இல்லை வேலி!