என்ன தலைவர் செல்போன் ஒழிப்பு
போராட்டம் தொடங்கியிருக்கார் ?
செல் என்றால் சிறைசாலை நினைப்பு வருதாம்
அதனால் தான் இந்த போராட்டம்
=========================================
தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தது
தப்பா போச்சு ?
ஏன் ?
தனியா ஒரு கினிக் தொடங்கி வைத்தியம்
பார்க்க ஆரம்பித்துவிட்டார் ....
---------------------------------------------------------------
காலத்தோடு பயிர்
செய்யப்படுகிறது
எண்ணங்கள்!
அவ்வப்போது உண்டாகும்
தவறான எண்ணத்தை
கழைந்தாலும்
எண்ணம் கொஞ்சமாய்
மாறும் பின் தடுமாறும்!
சூரியனோடு சூடாகி
அமர்க்களப்படுத்தும்
காலையில் முழிக்கும்
எண்ணம்.
குளிக்கவும் உடுத்தவும்
உண்ணவும் அவசரத்தை
அணைத்துக்கொள்ளும்.
எண்ணம் அலைமோத
அவசரம் தலை தூக்க
எல்லாமே மறந்துபோகும்...
எண்ணிய
எண்ணமெல்லாம்
காணாமலே போகும்
மறதி வந்து ஒட்டிக்கொள்ளும்.
போகும் வழிகளில்
அவசரப் பயணத்தில்
எல்லாம் தடைப்படும்...
அவசரமே தவறு செய்ய
உறுதுணையாகும்.
தாமதம் வந்து சேர
மேலாளர் திட்டவும்
எண்ணத்தில் கோபம் பிறக்கும்
இன்று யார் முகத்தில்
முழித்தேன் என்று
யோசித்து காலை
நேரப்பக்கங்கள் புரட்டப்படும்.
புரட்டிய பக்கத்தில்
வந்தவர்கள் மீது
கோபம் மீண்டும் விஸ்வரூபம்
எடுக்கும்...
எண்ணம் தன் தவறுகளை
மறைத்து நீதி பேசும்
தன் மீது தவறே இல்லை
என்று சத்தியமிடும்.
பாழாய் போன எண்ணம்
தப்புக்கும் தவறுக்கும்
உற்ற நண்பனாயிருந்து
நம்மை ஆட்டிப்படைக்கும்.
எண்ணமே எல்லாமாய்
வாழ்க்கையில் அங்கமாய்...
புதுப்புது அவதாரமாய்...
குடியை கொண்டு
குடியை கெடுக்க,
ஒத்திகைப் போராட்டம்!
கஷ்டத்தை மறக்க
விஷத்தை குடிக்கும்,
குடிமக்கள் இவர்கள்!
இருப்பதை தொலைக்க,
இருந்ததை
இழக்க
இருப்பதில்
கொடுத்து வாங்குபவர்கள்!
மனிதன் என்ற பெயரில்
வாழும் அரக்கர்கள்
இருந்தால் என்ன
இறந்தால் என்ன !
வாடிகையாளராய் போனதால்
வாழ்கையை ,ஆரம்பத்திலேயே,
தொலைத்தவர்களே ....!
தற்கொலை வாதிகளே
அறிந்த்கொளுங்கள்!
வாழ்க்கையின் இன்பம் ,
உன் தாயின் ஆரம்பம்,
பின் நண்பர்களாய் தொடரும்
மனைவியோடு
சுகமும்,கட்டில் பந்தமும்
உன்னை வசப்படுத்தும்,
வாழ்கையை வாழ்ந்துப்பார்!
உன் தலைமுறைக்கு
முகவரியாய் இருந்துப்பார்
உணர்வாய் உயர்வாய்.
உண்மை போதையை அறிவாய் !
பத்தாயிரம் உள்ளங்கள்
முப்பத்திரண்டாயிரம் பக்கங்களை புரட்டி
எனது வலை தளத்துக்கு பெருமை தந்த
உங்களுக்கு...
நன்றி,நன்றி ,நன்றி .நன்றி !
நட்புக்கு ஈர்ப்புண்டு
அதை உங்கள் வருகையில்
நான் கண்டதுண்டு...
பூட்டியே இருந்த
தளத்துக்கு...
புதிய திறவுகோளாய்
உங்கள் பார்வைகள்...
எனது எண்ணங்களுக்கு
புதிய விடியலை
தந்தது உங்கள் வருகைகள்...
நிலவின் ஒளிப்போல
உங்கள் சத்தமில்லா
ஒளிகள் விழுந்து
இன்று பத்தாயிரம்
ஒலித் தடங்கள்
எனது வலை தளத்தில்
சத்தமே இல்லமால்
புரட்டிய பக்கங்கள்
முப்பத்திரண்டாயிரம்
முகம் பார்க்க
உள்ளம் மகிழ்கிறேன்
உங்களால்...
நன்றி நன்றி
தோழர்களே...
இன்னும் தொடர உங்கள்
வருகைகள் வழக்கம் போல்
இருக்கட்டும்...
நன்றிவுடன்
உங்கள் தோழன்
கலைநிலா