31 ஜன., 2012

இயற்கையோடு...










இயற்கை இங்கு
கதிரவனின் 
காதல் கண்டு
சிவந்து விட்டது!

மரத்திற்கும்
மலருக்கும்,
இலவச மின்சாரமாய்,
கதிரவனின் சேவை!

பார்க்கும் கண்கள் எல்லாம்,
மயங்கவைக்கும் அழகு,
இயற்க்கை சொல்லும் பாங்கு!

யார் அங்கே?
கொஞ்சம் எல்லாம் தள்ளி வை...
இயற்கையோடு 
உன் உள்ளத்தை
இணைத்துவை!

இயற்கையோடு 
உன் இருக்கையை 
படுக்கையை
இருக்குமாறு மாற்றிவை!

அவசர உலகத்தில் 
சற்று இளைப்பாற
இயற்கையோடு 
இணைந்துக்கொள்...

உலகத்தின் 
மாசுக்கு விடைக்கொள்
புதிய மரத்தை 
விதைக்க 
கற்றுக்கொள்....

27 ஜன., 2012

மருதாணி...



தாவணிகள் எழுதும்
கவிதையே மருதாணி!

இலைகளை மைய அரைத்து,
கைகளில் கோலமிட்டால்,
மணப்பெண்ணின்,
அழகுக்கு .அழகு சேர்க்கும்,

திருமண,பண்டிகை 

காலத்திலும்
புடவைக்கும்

தாவணிக்கும்...

மருதாணியே 

தனி அழகூட்டும்
மனதை ஈர்க்கும்!

தலை நரைக்கும்,
கால் ஆணிக்கும் 

மருந்தாகும்!

தூக்கம்,மறந்த 

துக்கத்திற்கும்
பூவையர் போலவே....

மருதாணி பூவும்

தலையணையாய்
மாறினால் தூக்கம் வரும்!

மறுதோன்றி

அழவணம்
 ஐவணம்
மெகந்தி 
என்ற 
துணைப் பெயர்கள் கொண்ட,

மருதாணி ஒரு 

கிருமி நாசினி,
மறுக்காமல் 

நீ வளர்க்க யோசி!

26 ஜன., 2012

மனசு ஒரு ஹார்டிஸ்க்!




ஆசைகளை அடிக்கி
நினைவுகளை 

சேமித்து வைத்த 
மனசு ஒரு
ஹார்டிஸ்க்!

தேவைகளையும்
தேவதைகளையும்,
தேக்கி வைத்து 
தேடும்போது...

தட்டிப் பார்த்தால்
வந்து நினைவாடும்
நிழலாடும்...

பல வைரஸ்கள் 
தாக்கிருந்தலும் 
நம்பிக்கை கொண்ட 
ஆண்டி வைரஸ்கள் 
சுழலுதுவதால் 
இன்னும்....

25 ஜன., 2012

வெற்றிலை....



வெற்றிலை
இதன் முகவரி மலேசியா!
இது ஒரு மருத்துவ மூலிகை!


தமிழர்களின் 
கலாச்சாரத்தோடு
இணைந்து
மங்கள காரியத்தில்,
முகமலர்ச்சியோடு
வரவேற்பதில்
இதன் முக்கிய நிலை!


விதைகள் இல்லாத 
கொடித்தாவரமே 
இந்த வெற்றிலை!
இதன் காம்புகளை
வெட்டி பதியம் போட்டாலே 
வளரும் இந்த இலை !


கரும் பச்சையை 
ஆண்ணென்றும்,
இளம் பச்சையை
பெண்ணென்றும்,
வெற்றிலைக்கு 
உறவுண்டு...
இல்லற நல் உறவுக்கும்
இதில் பங்குண்டு!


கால்சியம்
இரும்பு 
நீர்சத்து,புரதம்,
கொழுப்பும் 
கலந்திருக்கு...

சவிக்கால் 
என்ற வீரியமும்
நிறைந்து இருக்கு...


வெற்றிலையோடு 
பாக்கும்,
சுண்ணாம்பும் 
கலந்தால்,
வாய் சிவக்கும்
நாற்றத்தை விரட்டும்
உண்ட உணவு
 
ஜீரணமாகும்!


வெற்றிலை .
இது வெற்றி இலை
மருத்துவத்தில்
மகத்துவம் கொண்ட,
உறவுனிலை 
இந்த வெற்றிலை !


கும்பகோணம் வெற்றிலை
உலகப் பெயர் பெற்றது
இதை அறிய
சுவைத்து பார்த்து
சொன்னால் 
எனது கவிதைக்கு
நீங்கள் தரும் 
வாழ்த்து மாலை!

பெண்ணின் நிலை...


பிஞ்சுக் குழந்தைகளும் 
பெண்ணாயிருப்பதால்
நாசம் செய்யும் உலகமடா !

பாவி மகள் சமைந்த பின்னாலே,
அவள் வந்து சேரும் வரை பயமடா.

சேலை கொஞ்சம் விலகினாலும்,
காமப் பார்வை கொல்லுதே

கோலம் போடா குனிந்தாலும்
போகும் வண்டியும் நிற்குதே!

வேலை செய்கிற நேரத்திலும்,
புடவை மேலே பார்வை 
மேய்கிறதே 

ஆணின் வக்கிர பார்வைக்கு
பலியாகும் பெண்ணின் மார்பகமே !