19 ஜன., 2012

துன்பம் வரும்....சிரிக்க மட்டும்


என்ன அமைச்சர் கூட்டத்தில் பேசிக்கொண்டு 
இருக்கும் போது சிரிக்கிறார்...

துன்பம் வரும் வேளையில் சிரிக்கிறார் 

அப்படி எனன் துன்பம் அவருக்கு ?

அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட 
செய்தி வந்துவிட்டது அல்லவா....
==========================================
என்ன தலைவர் தனியா பேசிக்கொண்டு 
இருக்கிறார் ?

நாளை சட்டசபை பேச்சுக்கு 
தனியா பேசி 
ஒத்திகை பார்கிறார்...
============================================

இல்லறத்தின் மாண்பு...எனது ஐநூறு



படைப்பு  ஐநூறு 


ஊடல் கொள்ளும் 
காதலே..
உணர்ச்சிகளின் 
தொகுப்பு


தொகுப்புகள் 
நடத்தும் வகுப்பு
அதன் பின்னே 
முன்னுரைக்கும்
காமத்தின் 
கிளுகிளுப்பு


உறவுகளின் 
புவி ஈர்ப்பு
உண்டாக்கும் 
படபடப்பு!


முத்தத்தில் 
நுழைந்து
தழுவலில் 
இணைந்து
அறிந்து
மகிழ்ந்து
புணரும்


ஊடலோடு 
காணும் இன்பம்
உண்மை 
இரு இதயங்களின் 
பிரதிபலிப்பு...


பெற்றோர்களாய் 
தாத்தா
பாட்டியாய்
மறுபிறப்பு 
இதுவே 
இல்லறத்தின் 
மாண்பு...

வெற்றி மாலை...




வாழும் போதே நீ அறிதல் வேண்டும் 
வாழ்க்கைக்கு அர்த்தம் வேண்டும்
வாழ்ந்தால் இவனை போல வாழ்ந்து மடியவேண்டும்

வாழ்ந்த பின் உன்  வரலாறு சொல்லவேண்டும்! 

ஊருக்கு என்றும் நீ பயன் படவேண்டும்
உண்மை சொல்லி வாழ்ந்திடவேண்டும்
அடுத்தடுத்து  இன்னல்கள் வந்தாலும்
தடுத்து,வெற்றியோட நீ வாழ வேண்டும்!

இருக்கும் காலம் உனக்கு கொஞ்சம் தான்
இன்னும் நீ கற்க,கடக்க வேண்டும்தான்
இருக்கும் வரை வாழ்க்கை போராட்டம் தான்!
இறக்கும் போதும் இன்னல்கள் வந்து சேரும்தான்!


நன்மை என்பது உன் நண்பன்தான்
நீ அழைத்தால் உடன் வருவான் தான்!
கைகள் களைப்பின்றி   தொடங்கும் வேலை
கழுத்துக்கு வந்து சேரும் வெற்றி மாலை

18 ஜன., 2012

பெரிச்சாலிகளும் ..சிரிக்க மட்டும்




தலைவர் ஜெயிலுக்கு போய் வந்ததை 
கதையா எழுதுகிறார்...

என்ன தலைப்பு...

ஊழல் பெரிச்சாலிகளும் 
ஜெயில் பெரிச்சாலிகளும் 
======================================

என்ன தலைவர் சுயசரிதம் எழுதுகிறாராமே?


ஆமா "சிறையில் நல்லவனாய் " என்ற தலைப்பில்.
=========================================

தாயின் ஆதங்கம்!


குடும்ப விளக்கு
அணையாமல் எரிய
போட்ட கணக்கு
எனக்கு மட்டும் 
என்ன விதி விலக்கு
கணவனும் மனைவியும் 
உழைத்தால் தானே 
விடியும் கிழக்கு 

வேலைகளோடு 
வேலையாய்
தன் குழந்தைகளை 
பார்த்துக்கொள்ளும்
நிலை தானே இன்று

நானும் தாய் தான்
வறுமையை போக்க
பாசத்தை துறந்தேன் 
நான்...

நேரம் கிடைக்கும் 
போது தான்
சேமித்து இருக்கும் 
பாசத்தை
தவணை முறையில் 
தரவேண்டி உள்ளது

என் வீட்டுக் கவிதையை கூட
சரியாக படிக்காதவள் நான்

நான் போகும் போது உறக்கம்
வரும் போதும் தூக்கம்
தூக்கவும் முடியாமல்
தூக்கத்தை களைக்கவும்
மனமில்லாமல்
துக்கத்துடன்,
கொஞ்சுவேன் 
தினம் தினம் மனதில்...