20 டிச., 2011

சிரிக்க வாருங்கள்...

அவசர உலகத்தில் 
உங்கள் 
அவதாரத்தை 
கொஞ்சம் 
இறக்கிவைத்து 
சிரித்துப் பாருங்கள்...

சிரிக்க இதோ 


புது அவதாரமாய் பொய்...



பொய் யென
நினைத்தால் 
பெய்யும் பொய் 

கண்களால் 
கண்டதும் 
காதால்
கேட்டதும் 
பொய்யென்று 
தெரிந்தாலும் 

தீர சேகரித்து 
மெய் யென சொல்லும் 
பொய்.


பொய்க்கு 
வார்த்தைகள் 
கோர்த்து 

பலப் பல
வண்ணமிட்டு
புன்னகை தொடுத்து 
புது அவதாரமாய்...

ஒப்பனை செய்து
நிஜமாக்கிக் 
கொள்கிறோம்.
உண்மையை 
கொல்கிறோம்

மனிதத்தையே 
குழித் தோண்டி 
புதைக்கிறோம்...


அனுதினம் 
சொல்லும் சில 
பொய்களும்...

19 டிச., 2011

கபாலி கிட்ட சொல்லி ...சிரிக்க மட்டும்

தேர்தலில் நிற்கணும் அதுக்கு என்னென்ன 
செய்யணும் சொல்லுங்கள்...
ஜோதிடர் :
அதுக்கு ஓட்டர் லிஸ்ட்டில் உங்கள் பெயர் 
இருக்குதா என்று பாருங்கள் 
ஓட்டர் ஐ டி எடுத்துவிடுங்கள் ...

இந்த பரிகாரம் செய்தால் நான் 
ஜெயித்து விடுவேனா ?
ஜோதிடர் :
=====================================
ஜோதிடர் :
உங்களுக்கு ராகும் ,கேதும் 
வெவ்வேறு வீட்டில் இருப்பதால் 
பிரச்சனை தான் ....

ஜோதிடம் பார்ப்பவர்:
அப்ப நம்ம கபாலி கிட்ட சொல்லி 
ஒரே வீட்டில் இருக்க செய்துவிட்டால் 
போச்சு..
=================================

நாம ராசிக்கு ...சிரிக்க மட்டும்


உங்க தலைவர் மேல் உங்களுக்கு 
விசுவாசமிருக்கலாம் 
அதுக்காக அவர் ரிப்பன் கட்பண்ணிய பிறகுதான் 
நான் ஆப்ரேஷன் செய்யணும் என்று 
சொல்லுவது சரியில்லை 
=====================================
தலைவர்:
தேர்தல் வரும் நேரம் ,செண்டிமெட் 
வருவது போல நல்ல புதுசா 
கேலே வருவது போல வியாதி பெயர் 
வையுங்கள்...
அப்பத்தான் நாம ராசிக்கு சரியா வேலை 
செய்யும்...

டாக்டர் 
பத்து வருஷமா உங்களை காப்பாற்ற 
இருக்கிற வியாதிகளை சொல்லி 
வாய்தா வாங்கியாச்சி ,இனி என்னால் 
சொல்ல வியாதியே  இல்லே...

==================================
தலைவர்:
என்னத்த வாயில வைக்கிறீர்கள் ?

டாகடர்:
ஜுரத்தை காட்டும் தர்மா மீட்டர் 

தலைவர்:
அப்ப சரி ஊழலை கண்டுபிடிக்கும் 
கருவியோ  என்று பயந்துவிட்டேன்...
=================================

18 டிச., 2011

அதிசியம்


உன் இருக் கண்கள்
பட்டு உடைந்தது
கண்ணாடி மட்டுமா ?
முன்னாடி இருக்கும்,
நானும் தான்!


தள்ளாடி விழுத்த
கண்ணாடி சொன்னது,
உன் விழிகள்
செய்த மாயம்
இந்த காயம்!


சூரியனுக்கு
போர்வை
போர்த்தி


கண்ணுக்குள்
நிலவை நிறுத்தி..


போராட்டம் 
தொடுத்தல்
எனது இதயம்
என்ன செய்யும்


மலைக்குள்
மலர்   பூக்கும்
அதிசியம்
உருவாகும்...


உங்கள் கண்கள் 
செய்த மாயம்