22 நவ., 2011

திட்டுறதே கேக்காதே...சிரிக்க மட்டும்.






உன் மனைவி இப்படி திட்டுறாங்க உனக்கு 
கோபமே வராதா ?

என்னை திட்டும் போதுஎல்லாம் காதை
விரலால்   அடைத்துவிடுவேன்,திட்டுறதே 
கேக்காதே...

====================================
கணவன் 
நீ என் மனைவி உன் புடவையை துவைக்கிறேன் 
சரி உங்க அம்மா புடவையும் துவை என்றால் 
என்னால் முடியாது ...
மனைவி:
எனக்கு நீங்க தாலிக் கட்டிருந்தாலும் 
பணம் கொடுத்து வாங்கியது எங்க அம்மாதான் 
அவங்க புடவையும் துவைக்கணும் தான் .

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

நம்பிக்கையாய் உதிக்கும்...




தற்கொலைவாதிகளே
தற்கொலைக்கு என்ன அவசரம் 


வாழ்க்கையை பாருங்கள்.
காதல் மட்டுமா வாழ்க்கை 


சோகம் மட்டுமா நித்திலை
வறுமைக்கு பயந்தா 
வாழக்கை 


வேலைலில்லை என்ற சொல்லை,
சொல்வதா உன் வேலை
இது தானா   உன்னிலை 


இரைப்பைக்காக 
கழிவுநீரை சுத்தம் 
செய்கின்ற மனிதரை 
கண் முன் நிறுத்து...


அனுதினம் காகிதம் 
பொருக்கி வாழும் 


மனிதர்களை 
பார்த்தாவது 
உன் பாதை  மாற்று


காதல் காதல் 
என்று சொல்வதை 
அதில் அழிவதை 
தடுத்து 




உன்னால் முடியும்
வாழ்க்கை வாழ்வதின் 
அர்த்தம் அறிந்துக்கொள்


நம்பிகையே   சூரியன்.
உனக்கும் விடியல் உண்டு 
உன் திசையை 
கிழக்காய் மாற்று...


மேற்கில் 
இருள் மறைந்து 
வாழக்கைப் 
பாதை அறிந்து 
புதிய விடியல் 
நம்பிக்கையாய்
உதிக்கும்...



=====================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

யானைக்கும் அடி சறுக்கும்...





யானை பசிக்கு
கோழியே 

உறவானது
உறவாகி தொடர
கருவானது
கருவான நிலை
காமம் கண்ணை
மறைக்கும் 
என்ற சொல்லும்
யானைக்கும் அடி சறுக்கும்
என்ற பழமொழியும் 
உண்மையாகிப் போனது.


=================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

நட்பு கவிதையில்!





நேற்றும் இன்றும் 
என்னோடு 
நாளை கடந்தாலும் 
கடத்தினாலும் 
உள்ளத்தோடு 
உலாவும் நினைவோடு 
வருவான் என் 
நண்பன் அன்போடு...

கருத்து பிழை வந்தாலும்,
இலக்கணம் மாறது
எழுத்து பிழை வந்தாலும்
எண்ணங்கள் குறையாது,
திருக்குறள் போல
இரு வரியாய்...
சேர்ந்தே இருப்போம்
எங்கள் நட்பு கவிதையில்!
===============================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

சிற்பி எழுதிய கவிதை...





நம்பிக்கை தந்த வேளை
நம்பி செய்த வேலை

பெறுமை சொல்லும் வழியை 
பொறுப்புடன் செய்த நிலையை 

பெருமை கொள்ளும் கலையை
முட்டை தந்த அழகை

புதுமை, செழுமை என்றே 
பார்த்தாலே சொல்லுவோம் அருமை

கைகள் படைத்த திறமை 
கண்ணை பறிக்கும் சிலையை
 
உடையாமல் செய்த மகிமை
இது சிற்பி எழுதிய கவிதை


================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!