17 அக்., 2011

வறுமையை போக்க முனைந்திடு.




வறுமைக்கு வாக்கப்பட்டதால்,
அரை ஜான் வயிறுக்கு ஓட்டம்.
பட்டினி வயிற்றுக்குள் கருவாய்
வளர்ந்ததால் உனக்கும் போராட்டம் .

குடில் கூட உன் தாயின்
முந்தானை தான்.
உன் முகவரி கூட
உன் கண்ணிர் பட்டு
அழிந்து போனது புரிகிறது.

புத்தகம் தூக்க வேண்டிய
உன் கரங்கள்,
அடுத்த வேலை உணவுக்கே
செங்கல் தூக்கும் நிலை.

உன் கண்கள்
சிந்தும் அக்னிக்கு
விடை கிடைக்கும்.
உன் நம்பிக்கை
தாயின் வலி போக்கும் .


கிடைக்கும் நேரத்தில் படித்திடு
உண்மை பேசி வாழ்ந்திடு.
இல்லாமை போக்க உழைத்திடு
வறுமையை போக்க முனைந்திடு.


அக்டோபர் 17 ,வறுமை ஒழிப்பு தினம் .


வாழ்க்கை மிச்சமிருக்கு.



போரின் குணத்தோடு பிறந்தாயா !
மானுடம் அழிக்க தான் வளர்ந்தாயா!
மண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையா!
இது தான் உனது வாடிக்கையா!

ஆதிக்கம் ஒன்றே உன்
நிலையாய் போனதால்,
உயிரின் நிலை அறியவில்லை.
இந்த அவல நிலை போக்க
எந்த கைகளும்  முன்வரவில்லை.

கண்ணீர் சிந்தியே எங்கள்
கண்களும் வெளுத்துவிட்டது.
எங்கள் உடல்களும் மெலிந்துவிட்டது.
உனது போரின் செயலால்
கொலைகளும் இங்கு மலிந்து விட்டது.

கொடுமைகள் போக்க
சர்வ தேச உதவிகள் மறுக்கப்பட்டது.
இருந்தும் நம்பிக்கை மட்டும்
மிச்சமிருக்கு,அச்சம் போக்கும்
என்ற எண்ணமிருக்கு.

எங்கள் வழிமுறைகள் மீது
உறுதியிருக்கு!
உருகுலைந்தாலும்,வளரும்,
வரும் தலைமுறை மீது
வெற்றியிருக்கு!
இதை நம்பித்தான்
எங்கள் வாழ்க்கை மிச்சமிருக்கு.

கிரிடிட் கார்ட்.


வட்டிக்காரன் எனது தெருவில்,
நேற்று வரை வந்துபோனான் 

இன்று எனது கையில்.

இது தான் நிஜம்!



மனிதா இது தான்
உன் நிறமா ?
நிழலான உருவத்தின்
நிஜமா?


மண்ணுக்குள் ,இல்லை
நெருப்புக்குள் புதைந்து
போகும் உடலை வைத்து,
ஆடிய ஆட்டம் கொஞ்சமா!


விழியை விரித்துப் பார்.
சதைகள் போர்த்திய கூட்டைப் பார்!
இன்னுமா இறுமாப்பு ?
வேண்டுமா வீராப்பு ?


இடத்துக்கும்,பணத்துக்கும்,
பெண்ணுக்கும், பொருளுக்கும்,
சண்டைகள் தேவையா ?
அது உன் வேலையா ?


உன் நிலையை பார்!
இருக்கும் வரையே நீ மனிதன்
இறந்தால் அடுத்த நிமிடம் பிணம்
இது தானே நிஜம்!


விடியலை நோக்கி....!


இளைஞனே!
புதிய விடியலை பார்க்க
உன் பாதயை மாற்று!

விதியை அறிந்தாலும்,
விடுமுறையில்லா,வேகமும்
விவேகமும்,உனக்குள் இருந்தால்,
விடைகள் உன்னைத் தேடி வரும்.

வெற்றியின் விலாசம்,
உனதாகும் ,உனக்கே உரித்தாகும் .
இருளை அகற்றும் விடியலின்
கதிர்கள்  தெரியும்.முயன்றுப் பார்!

உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்...
காமத்தை மறந்தும்...
கோபத்தை துறந்தும்...
வாழ்ந்துப் பார்!


உனக்குள்ளே இருப்பதை அறிந்து
உன்னையே மாற்றிப் பார்!
உலகம் உன்னை போற்றி
உன்னையே வாழ்த்தும் பார்!