4 மார்., 2010

சமாதானப்புறாக்கள்!





பூமிவுடைய சமஸ்தானத்தில்
சமாதான இனத்தின்
முகவரிகள் நாங்கள்.

ஆயுதம் தாங்கிய
மனிதர்கள் முன்னால்...
எங்கள்
சமாதானம்
சபை ஏற மறுக்கிறது!


பயத்தோடு திரும்பிகிறது.
சமாதானத்துக்காக நாங்கள்
தொடுத்த பூமாலைகள் கூட
ஜாதிவாரியாய் பிரிக்கப்பட்டு
பூக்களுக்குள்ளே,
சண்டை நாடக்கிறது!

ஜாதிகளும் ,மதங்களும்,
கட்சிகளும் ,
மனித நேயத்தை 
கொன்றுவிட்டதால்,
எங்களை,நேசிக்க யாருமில்லை.
மனித நேயம் மாண்டுவிட்டதால் 
நாங்களும் ஏதோ 
சமாதானப்புறாக்கள்,
என்ற பெயரில் வலம் வரும்
பறவைகள் தான் நாங்கள்!

வசந்தக்காலம்! ,அது இறந்தக்காலம்!

 
இதோ இவர்கள் 
வாழ்ந்த காலம்
வசந்த அந்தக் காலம்
அது இறந்த காலம்!
இனி வருவது அவசரக்காலம்!

கணினியோடு வாழும் நேரம்.
அதுப்போல் இருப்பது எக்காலம்?

வானம் தூவும் மழைக்காலம்,
வயல்களில் கதிர்கள் பேசும்.
காதலாய் காற்று வீசும்.
மீண்டும் வருமா அந்தக்காலம்!

மீட்டுத்தருமா வருங்காலம் ?
இதோ இவர்கள் வாழ்ந்த காலமே
வசந்த காலம் ,அது இறந்த காலம்!


அடுக்கு வீடுகளில் 
அடுக்கப்பட்டு
அடுத்த வீடுக்கும் 
உறவுல்லா கலிகாலம் 

ஆசைகளை துறந்தக்கோலம்
இதானே இன்றைய காலம் .
மகிழ்ச்சியை மறந்தக்கோலம்
நமக்கு இந்த நிகழ்காலம்
ஒரு இறந்த காலம்!
வருங்காலம் ??????????

விழிகளில் மழையாய்!



நீண்ட இடைவெளிக்கு பின் சந்திக்கும்
கணவன் மனைவியின் நிலை இந்த கவிதை!


















ஊமை நாடகம் ஒன்று
பார்வையாலே நடக்குது இங்கு!
மௌனமே ஆசையாய்,
பூக்களின் கவிதையாய்,
அரங்கேற்றம் இன்று.

நான்கு பார்வைகள் கலந்து,
நலம் கேட்க்கும் பார்த்து!
கேட்டதும்...
விழிகளில் மழையாய்,
அந்த துளிகளோ....
ஆசைகளின் மொழியாய்,
மாறிப்போகும் வேலை இது.



கண்களின் சந்திப்பு 
கண்ணீராய்  பிரிவை சொல்லும் 
கண்ணும் கண்ணும், கொள்ளையடித்து 
கதைகள் பல சொல்லும்!

28 பிப்., 2010

இந்த பேனா ,விழியாகி போனது!




என் எண்ணங்களை
எழுத்தாக்கி,
அதை தமிழ்
மொழியாக்கி,
எளிய நடையில்
கவிதையாக்கி,
காதல் சொல்ல
வழியாக்கி ,
இந்த பேனா
விழியாகி போனது.
எழுதுவற்கு 
உயிரானது.
என் வாழ்க்கையில்
பேனா ஒன்றானது.
சுகமானது.


மரணத்தில் அடங்கும்!





உலகத்தின் உதயம்
கதிரவனுக்கு உரிமம்.


உண்மையின் உதயம்
தாய்மையில் தொடங்கும்.


அன்பின்   உதயம்
மனதுக்கு புரியும்.

நட்பின் உதயம்
கஷ்டத்தில் அறியும்.

இனிமையின்  உதயம் 
மனைவியிடம் கிடைக்கும்.

தலைமுறையின் உதயம்,
பிள்ளைகளாய் வளரும்.

சந்தோசத்தின் உதயம்,
பேரப்பிள்ளைகளாய் மாறும்.

வாழ்வின் உதயம்
மரணத்தில் அடங்கும்.