20 பிப்., 2010

நேற்று, இன்று!



நேற்று!
விதை விதைத்து 

விவசாயம்.
இன்று!


விவசாயம் அழித்து 
வீடு செய்தோம்.


மாளிகை கட்டவே 
நிலம் கைமாறியது.
வாய்க்கால் எல்லாம் 
வீடாய் முளைக்க...

அரிசிக்கும் 
தண்ணீருக்கும்   
அடுத்த மாநிலத்தில் 
கையேந்தும் நிலையானது.


வாழ்க்கை இனிக்கிறது!



கண்களில் இருப்பவளை
காதல் சொன்னவளை


கவிதை வடித்தவளை

கைப்பிடித்து நடந்தவளை

நெஞ்சில்சுமந்தவளை,
ஒன்றாய் கலந்தவளை 

அன்பில் இணைத்தவளை
அந்திநிறத்தவளை

அவள் காட்டிய அறத்தொடு
அவள் தந்த இல்லறத்தொடு 

இதயம் சுவாசிக்கிறது. 
இன்னும் கேட்கிறது
அவளோடு வாழும் போது
வாழ்க்கை இனிக்கிறது!



19 பிப்., 2010

யுத்தம்


நாட்டின் அனுமதியோடு
நடத்தப்படும் கொலைகள்!

நானா நீயா போராட்டத்தில் 
மக்களே மூலப்பொருளாய்...
ஆட்டிப்படைக்கும் அதிகாரம் 
மக்களுக்கு எதிராய்...
மனிதன் என்ற போர்வையில் 
மிருகங்கள் ஒன்று கூடி 

படைகள் கொண்டு தடையின்றி
கொடுக்கப்படும் நரபலி !





கோழைகள் இல்லை.





உயிர் அழிந்தாலும் 
உண்மைகள்  மறையாது .

காலங்கள் போனாலும்.
கண்ணீர் கரைகள் நீங்காது.

மண்ணுக்காக மரணம் 
மண்ணுலகம் பேற்றப்படும் 

தோல்விகள் கூட சரித்திரம் தான்.
வெற்றியை விட கவனிக்கப்படும் 

வெற்றி எனபது இன்று உனக்கானது 
நாளை எனக்கும் வந்துப்போகும்...

தோல்வி என்பது இன்றைய நிலை.
தோற்றவர்கள் கோழைகள் இல்லை



இதை அறிந்து புரிந்து நடந்தால் 
வாழ்வில் தோல்வியே இல்லை.



16 பிப்., 2010

தாஜ்மஹால்!



தாஜ்மஹால்!
இது காதலர்களின்
சின்னமா ?
இல்லை...


காதல் சின்னம்.
வாழ்க்கையை வாசித்தும்
சுவாசித்தும் ,நேசித்தும்
வாழ்ந்த தம்பதிகளின் 
வாழ்க்கைச் சின்னம்!


இனிய இல்லறத்தை 
உலகிற்கு வெளிச்சமாய் 
காட்டும்  காதல் சூரியன்.


தாஜ்மஹால் 
இல்லறத்தின் இதயம்!



காதலர்களின் சின்னமல்ல.
இது காதல் சின்னம்!