3 ஜன., 2015

மணம் வீசும்...!

மனம் 
குணம்
அறியாமலே
முகம் தெரியாத 
முகநூல் நட்பூ
மனம் பேசும்
மணம் வீசும்...!

நெருடல் தான்

நெருடல் தான்
தேடலானது
தேடல் தான்
நிஜமானது
நிஜம் தான் 
காதலானது...!
தேடியது நிஜமா எனறும்
கிடைத்த பின் நெருக்கமாய்
இப்படி
எப்படி
என
இன்னும் நெருடல் தான் ...!

மறுபடியும் ...

நீயே வைத்துக்கொள்
உன் காதலையும்
என்னையும் சேர்த்து..!
மறுபடியும் 
காதலிக்காமலும்
காயப்படாமலும்
இருக்கலாம் அல்லவா...!

1 ஜன., 2015

காதல் கேளிக்கை!

விடலை பாடத்தில்
காதல் 
கேளிக்கை!
முதியோர் படிவத்தில்
காதல் 
கோரிக்கை...!

பூக்களாய்!








பச்சை செடி
தன் நிறத்தை கழற்றி
புது வண்ணத்தை காட்டியது!
பூக்களாய்!