13 டிச., 2014

மறைக்க முடியாது...!

வார்த்தைகள்
தான் வாழ்க்கைக்கு
அவசியம்...
சிந்தும் வார்த்தைகள்
திசை மாறி போனால்
நேசம் மாறி போகும்
மனம் வாடிப்போகும்...!
உடைக்கப்பட்ட
கண்ணாடிப்போல்
சேரமுடியாது
ஒட்டி வைத்து பார்த்தாலும்
உடைத்ததை மறைக்க முடியாது...!

முதியோர் இல்லதில்

பாத்து போப்பா
மறக்காம 
அடுத்த மாதமும்
வந்து போ
முதியோர் இல்லதில்
அம்மா....

வாலிப கணக்கில்

வாலிப கணக்கில்
மிச்சமிருப்பது
உன் நினைவு ஒன்றுதான்..!

மலரோ..!

நேற்று வரை நீ 
யாரோ
இன்று
வாசம் தந்து 
பாசம் பேசும் 
மனதுக்குள் வளரும்
மலரோ..!

உன் கூந்தலில்

பூக்களின் 
கணகளுக்கு 
வில்லி நீ...!
==========
உன்னை பார்த்த பின்
பூக்களுடன் ஊடல்
தேனீ...!
===========
உனக்காக பூக்கள் எழுதிய
கவிதை உன் கூந்தலில்
அழகாய்..!