9 மார்., 2013

எல்லாம் உன்னால்...

நீ வீசிய காதல் வலையில் 
மாட்டிய காதலனாய் 
நான்...

நீ பார்க்கும் பார்வையில் 
பூக்கும் மலராய் 
மாறினேன்...

நீ சிரிக்கும் அழகில் 
சிலிர்த்தே போகிறேன் 
நான்....

எல்லாம் உன்னால் யென்றால் 
மௌனத்தால் 
மறைக்கிறாய்...

_________________

எதிர்ப்பார்க்கிறேன்...

நானும் எதிர்ப்பார்க்கிறேன் 
புதிய மாடலாய் மாறும் ...வரும் 
பாவாடை தாவணி...
=====================

மறக்க முடியவில்லை 
உன் காதலையும் 
பாவாடை தாவணியும்...

======================

சாரிக்கு சாரி 
சொன்னது 
ஜீன்ஸ் டாப்ஸ்...
======================

4 மார்., 2013

நிலவு சுடுகிறது...




நிலவு சுடுகிறது
காமத்திலும்
நடு ஜாமத்திலும்...

நெருக்கத்திலும் 
இணக்கத்திலும் 
இரவாய் பகல் 
மாறினாலும் 

நிலவு சுடுகிறது 

2 மார்., 2013

பெண்மை...


பெண்மை 
பொம்மையாய் 
இன்று...

பார்க்க ரசிக்க 
மட்டுமே...

பெண்மைக்கும் 
மனசு இருப்பதை 
மறந்த நிலையில் 
மானிடம்...

மானாய் போனது 
மனிதரிடம் 
பெண்மை...

பிரபலம்

சாலை எங்கும் பலமாய் 
கூட்டம் 
பிரபலம்...
=========================
தும்மல்,இருமல் 
பேசப்பட்டன 
பிரபலம்...
==========================
மறைக்க நினைத்த காதல் 
மறைக்க முடியவில்லை 
பிரபலம்...
===========================
வரலாறு பேசும் 
தோல்விகள் 
பிரபலம்...
============================
ஆணவமும் அடி பணியும் 
சொன்னதும் இல்லை என்றே மாறும் 
பிரபலம்...
===========================
பாலமாய் 
பலம் 
பிரபலம்...
========================================