9 மார்., 2013

எதிர்ப்பார்க்கிறேன்...

நானும் எதிர்ப்பார்க்கிறேன் 
புதிய மாடலாய் மாறும் ...வரும் 
பாவாடை தாவணி...
=====================

மறக்க முடியவில்லை 
உன் காதலையும் 
பாவாடை தாவணியும்...

======================

சாரிக்கு சாரி 
சொன்னது 
ஜீன்ஸ் டாப்ஸ்...
======================

4 மார்., 2013

நிலவு சுடுகிறது...




நிலவு சுடுகிறது
காமத்திலும்
நடு ஜாமத்திலும்...

நெருக்கத்திலும் 
இணக்கத்திலும் 
இரவாய் பகல் 
மாறினாலும் 

நிலவு சுடுகிறது 

2 மார்., 2013

பெண்மை...


பெண்மை 
பொம்மையாய் 
இன்று...

பார்க்க ரசிக்க 
மட்டுமே...

பெண்மைக்கும் 
மனசு இருப்பதை 
மறந்த நிலையில் 
மானிடம்...

மானாய் போனது 
மனிதரிடம் 
பெண்மை...

பிரபலம்

சாலை எங்கும் பலமாய் 
கூட்டம் 
பிரபலம்...
=========================
தும்மல்,இருமல் 
பேசப்பட்டன 
பிரபலம்...
==========================
மறைக்க நினைத்த காதல் 
மறைக்க முடியவில்லை 
பிரபலம்...
===========================
வரலாறு பேசும் 
தோல்விகள் 
பிரபலம்...
============================
ஆணவமும் அடி பணியும் 
சொன்னதும் இல்லை என்றே மாறும் 
பிரபலம்...
===========================
பாலமாய் 
பலம் 
பிரபலம்...
========================================

3 பிப்., 2013

காதல்...







காலமும் 
கடிதமும் தொடர 
செய்கிற நிலை...

பருவம் விதைத்த 
மரம் 
காதல்...

மனதுக்கு பிடித்தால் 
"பாவம்"
காதலனாய் இல்லை 
காதலியாய் 
மாற்றும்..

ஒரு தலையாய் 
இருந்தாலும்
இறக்க கூட 
செய்யும் 
இரக்கமற்ற செயலை 
செய்யத் தூண்டும்...

இருந்தாலும் நேசம் 
வாசம் போங்க 
செய்யும் 
நமது வாசல்

வராத வரைக்கும்...