1 ஜூன், 2012

தலைவர் சொன்னதை...சிரிக்க மட்டும்,


தலைவர் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல்  
எதிர் கட்சி தலைவர் மன்னிப்பு கேட்டாரா ?

ஆமா ஆர்பாட்டத்தில் தலைவர் உருவ பொம்மையை 
எரித்தபோது அவர் போல இல்லையாம்...
இதை எதிர் கட்சி தலைவரும் ஆமா என்றும் இது போல 
தவறு இனி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன் 
மனித்துக்கொள்க என்று கேட்க வைத்துவிட்டார் நம்ம தலைவர்...
==================================================



தலைவர் சொன்னதை கேட்டு நீதிபதியே மயக்கம் போட்டு கிழே விழுந்துவிட்டார்...


அப்படி என்ன சொன்னார் 

தான் லஞ்சம் வாங்கியது லஞ்சம் ஒழிப்பு துறை வேலை 
செய்கிறதா என்று பார்க்க தான் என்று சொன்னார்..



ரொம்ப நல்லவன்..சிரிக்க மட்டும்,





எங்க வீட்டுக்கு வந்த திருடன் கோடிஸ்வரன் நிகழ்ச்சி 
போல நான்கு ஆப்ஷன் சொல்லி அதில் நாம் 
சொல்லும் சாமான்களை மட்டும் தான் 
திருடிவிட்டு போனான் 



திருடனில் இவன் ரொம்ப நல்லவன் என்று சொல்லு...
===================================
எங்கவீட்டுக்கு வந்தவன் ரொம்ப புத்திசாலி 


எப்படி சொல்லுறே?


திருட உங்க வீட்டில் 
ஒண்ணுமில்லே சும்மா வெறுங்கையோடு 
போனால் உங்களுக்கு தான் அசிங்கம் உங்கள் 
தங்கப் பல் செட்டை கொடுங்க என்று 
கேட்டு வாங்கிட்டு போனான்...
====================================

தோல்வி...



தோல்வி வரும்போது 
வேண்டிக்கொள்...


கற்க இன்னுமிருக்கு 
என அறிந்துக் கொள்...


தோல்வி நிரந்தமில்லை 
என்று உணர்ந்துக்கொள்...


வெற்றியின் நேரம் வந்துவிட்டது 
என புரிந்துக்கொள்...


தோல்வியே வெற்றின் அறிகுறி 
என மனதில் கொள்.,,,

மோகத்தால்...



சைவ உணவுகள்
மறுக்கப்பட்டன
பாஸ்ட் பூட் வருகையால்..



இட்லி,தோசை
மறைக்கப்பட்டன
பிசாவின் மோகத்தால் .



கேசரியும்
இடியப்பமும்,
புதைக்கப்பட்டன
நூடுல்ஸ் ஏற்க்கப்பட்டதால்.

இளநிர்,மோரும்
தடுக்கப்பட்டன
அடைக்கப்பட்ட குளிர்பானத்தால்...

அச்சமில்லை...









அச்சமில்லை அச்சமில்லை...
உன் வாழ்விலே!


வரும் கஷ்டமெல்லாம் 
ஓடிப்போகுமே...

வஞ்சமில்லை வஞ்சமில்லை 
உன் வாழ்விலே...


நீ உறுதியோடு எதிர்த்து போரிட்டால் வெற்றி உன் வசமே...



வஞ்சம் கொண்ட உள்ளமெல்லாம் 
நடுங்கி ஓடிடுமே...



பயமில்லை பயமில்லை 
வாழும் வாழ்விலே...


மலையென எரிமலையென  
நீ எழுந்தால் போதுமே...


தோல்விகள் கூட உன்னை கண்டு 
தோற்று போகுமே...



அச்சமில்லை அச்சமில்லையே
என நீ துணிந்து நின்றாலே ...