4 மே, 2012

குறி வைத்து சுடுமா விஜயின் துப்பாக்கி


சினிமா தோன்றிய காலத்திலிருந்து தொடர்கிறது...
கதாநாயகர்களின் போட்டிக்கூட்டணி இன்று வரை...


அப்போது எம் கே தியாராஜா பாகவதர்,பி.யு சின்னப்பா 
என்று தொடங்கி...
எம் ஜி ஆர் , சிவாஜி,அடுத்து ரஜினி ,கமல் என்றும்,
இன்று விஜய்,அஜித் என்று ...


இருவரை மற்றுமே குறிவைத்து,புகழ் பாடும் நிலை
விஜய்,அஜித் வரை தொடர்வது உண்மையே...


ஒரே சாயல் போஸ்டர்கள், மேக்கப் என்றும்...
கதைகள் என்றும் போட்டிக்குள் இவர்கள் பலியாகுவது 
இயல்பான ஒன்றாய் அமைந்தாலும்...

இவர்கள் ஒன்றாக இருந்தாலும், ரசிகர்கள் என்று வரும்போது 
சற்று போட்டி பொறாமைகள் இருப்பது உண்மையே...


அதே போல இன்று துப்பாக்கி படத்தின் போஸ்டர் கூட 
அஜித் அசல் படத்தை சொல்லி அதே சாயல் என்ற முனங்கள் 
கோலிவுட்டில் வரத்தொடங்கி விட்டது! இது ஒரு வியாபார 
முயற்சியே என்றாலும் படத்தின் பெயரை, போஸ்டரை 
நோக்கி பார்வைகள் போவது உண்மையே...
ஒரு வித எதிர்பார்ப்புக்கு உண்டாகிவிட்டது இந்த துப்பாக்கி 


ரசிகர்களின் மனதை குறி வைத்து சுடுமா விஜயின் துப்பாக்கி 
பொருத்து இருந்து பார்ப்போம்...

மதத் தீ மூட்டி...





மத வியபாரிகளுக்குள் 
மானிடம் 
கை மாற 
மனிதம் 
கலப்படமாய் 
கலந்து போனது 
மானிடம் 
மாண்டு  போனது...



ஆங்காங்கே 
சதைப் பிண்டத்தின் 
நடுவில் 


பிணம் 
திண்ணும் கழுகளுடன்

கலப்படம் 
கலர்படமாய் 
நகரத்தில் நகர்வலம்...

அப்பாவிகளை 
அழிக்க என்கவுண்டராய்
தடாவாய்
சட்டம் 
ஒருப்பக்கமாய்...

மதத் 
தீ மூட்டி 
தீயில் எரிக்க 
தீக்குள் இரையாக்க
கையில் தீவட்டியோடு 
தீயவன் 
இருக்கும் வரை...


இருக்கும்  மனிதத்தை 
அழிக்க ஆவேசத்துடன் 
மதம் என்னும்  
போர்வையில்...

மிருகமாய் 
நடமாடும் 
நாடகமாடும் 
நாகரிக உலகத்தில்...


மனிதனின் மனம் 
மதத்தில் நுழைந்து 
மனித நேயம் 
மாண்டு போனது...

2 மே, 2012

உறவுகளின் ஊமை வேடம்...



உறவுகள் இறைவன்
தந்த அற்புதத்தில் ஒன்று.

பாலைவனத்தில் 
தாகம் தீர்க்கும் 
தண்ணீராய் உறவுகள்.

ஊன்றுகோலாய் உதவும்
உறவுகளே...

காலத்தின் மாற்றத்தாலும் 
தலைமுறைகளின்
செயல்களால்...


தவறாய் மாறி
தட்டிக்கேட்கும் போது
தடுமாறும்...
நிலை மாறும்.

நரமில்லாத நாக்கு
ஆயுதமாய் போர் தொடுக்க
எதிர் அணியாய் உறவுகள்
இப்பொழுது...

அருகதையற்ற வாதங்கள்
 வாழ்ந்த அந்தக் 
காலத்தை எட்டி உதைக்கும்.


உறவு என்ற எண்ணத்தில்
கரையை போக்க
உண்மையை  சொன்னதால்,
தட்டிக்கேட்டதால்...


யார் இவன் என்னை
கேட்க என்ற முனங்கள்
முழக்கமாய் வரும்..


தட்டிக்கேட்டவன் நிலையோ 
பரிதாபம்.



தவறுகள் இங்கு மறுக்கப்பட்டு
மறைக்கப்பட்டு 
மனசாட்சிகள் கொன்றுவிட்டு 
நீதி வழங்கப்படுகிறது.

யாருக்காக இந்த நிலை 
முகம் காட்ட மறுக்கப்பட்டு 
பேச மறுக்கும்  உறவுகளே...

உண்மையை உணர 
இன்னொரு பிறவியா 
வேண்டும்....

கொஞ்சம் உணருங்கள்
உள்ளத்தில் கைவைத்து
கேளுங்கள்


காரணத்தை உணர்ந்தவார்களே 
இன்னும் எத்தனை நாளைக்கு ?
ஊமை வேடம்?


உண்மையின் ஊர்வலம்
வரும்போது உங்களை
உரித்துப்பார்க்கும்.


உறவுகள் மரணமாய்
உணர்வுகள் அற்ற ஜடமாய்..
என்னடா வாழ்க்கை இது ...


நேற்று வரை உறவு
என்று சொன்னதெல்லாம்
உண்மை என்றால் 
பிளவுக்கு பரிதுரைக்கும்
எண்ணம் ஏனோ?


எல்லாம் அறிந்த 
தெளிவில்லாத  உறவுகள்
இருந்தால் என்ன
விலகினால் என்ன
எல்லாம் ஒன்று தானே...

கிளாமர்...




அரைகுறை 
ஆடைகளை 
அணிந்துக்  கொண்டு 
சொன்னார்கள் இது 
கிளாமர்...

புதிய தாலாட்டு




வேலைகளால் 
பெற்றோர்கள் 
தூரமாகிப் போகவே...


குழந்தைகளின் தாயாய்
கணினி ஆனது


இனி குழந்தைக்களுக்கு,
கணினி 

புதிய  நிலவாய்
உருவாகி...


இவர்களுக்கு 
கூகிள், யஹூவும்,
புதிய தாலாட்டுப்  பாடி 
உறவாகிப்போனது...