3 ஏப்., 2012

நடிகர் திலகம்...(திரைப்படம் ஒரு பார்வை...)


1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பெயர்கள் 
=================================================================

அம்மா எங்கே
ஆண்டவன் கட்டளை
(சிவாஜி கணேசன்)

ஆயிரம் ரூபாய்
என் கடமை
(எம். ஜி. ஆர்)

நவராத்திரி
(சிவாஜி கணேசன்)


நானும் மனிதன் தான்

பச்சை விளக்கு
(சிவாஜி கணேசன்)

படகோட்டி
(எம். ஜி. ஆர்)

பணக்காரக் குடும்பம்
(எம். ஜி. ஆர்)

பாசமும் நேசமும்

புதிய பறவை
(சிவாஜி கணேசன்)

பூம்புகார்
பொம்மை
மகளே உன் சமத்து

முரடன் முத்து
(சிவாஜி கணேசன்)

ரிஷ்யசிங்கர்
வழி பிறந்தது
வாழ்க்கை வாழ்வதற்கே
வீராங்கனை

வேட்டைக்காரன்(
எம். ஜி. ஆர்)

கலைக்கோவில்

கை கொடுத்த தெய்வம்
(சிவாஜி கணேசன்)

கர்ணன்
(சிவாஜி கணேசன்)

கறுப்புப் பணம்
நல்வரவு
காதலிக்க நேரமில்லை
சர்வர் சுந்தரம்

தாயின் மடியில்
(எம். ஜி. ஆர்)

தெய்வத் திருமகள்

தொழிலாளி
(எம். ஜி. ஆர்)


உல்லாச பயணம்
வழி பிறந்தது
சித்ராங்கி





1964 ஆம் ஆண்டு வெளிவந்த கர்ணன் ,புதிய பொலிவுடன் கடந்த மாதம் வெளிவந்து புது படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் புதிய சகாப்பதம் 
படைத்து  வெற்றி நடைபோடுகிறது...


மறைந்த நடிகர் திலகத்தின் அதிரடி நடிப்பில் ஒரு காவியத்தின் மறு உருவமாய் நமக்கு காட்சி தந்தார் என்றால் பொய்யில்லை...


என்றும் நமது மனதில்  ஒவ்வொரு கதாபாத்திரமாய் இன்னும்,
திரைப்படத்தின் நிழலில் நடிகர் திலகம் நிஜமாய்...!


ஜனவரி 14 பொங்கல் அன்று இந்த படத்துடன் எம். ஜி.ஆர் நடித்த வேட்டைக்காரன் வெளிவந்தது ....

காற்றின் அவதாரம்...


கோபத்தில்  வெயில் 
ஆறுதல் சொல்லியது 
காற்று...


தண்ணீரோடு கோபம் 
சினம் கொண்டது 
காற்று...


மழைத்துளியின் பாட்டுக்கு 
பின்னணி இசையாய்
காற்று...


மரத்தோடு எழுதிய 
புதுக்கவிதை 
தென்றல்...


மழைக்கு எழுதிய 
மரபுக் கவிதை 
புயல் 


கடலோடு எழுதிய 
புரட்சிக் கவிதை 
சுனாமி...


தென்றாலாய்,புயலாய் 
அவதாரம் 
காற்று...

காலம் கடந்தாலும்...



காமம் கடந்த 
காதலே 
காலம் கடந்தாலும் 
தொடரும்...


தன் துணைக்கு 
நிஜமான நிழலாய்,
நிலைத்து இருக்கும்.


கொண்ட உறவில் 
உண்மையிருக்கும்
உயிரோடு 
கலந்திருக்கும்!


உள்ளம் கொண்ட அன்பில் 
உறுதியிருக்கும்
மண்ணில் மறைந்தாலும் 
மனம் வீசும்!

தியாகச் செம்பால்...சிரிக்க மட்டும்,




என்னது மன்னர், பெயரை மாற்றிக்கொண்டாரா ?

ஆமாப்பா ...பட்டாக்கத்தி பைரவன் என்ற பெயரை மாற்றி
பிளேடு பக்கிரி என்று மாற்றிக் கொண்டார்...


எதுக்கு?

ஒரு கிக்குக்குதான்...
=======================================================
மன்னா அரசியார் செய்த உணவை சாப்பிட்டு நான்கு பேரு 
இறந்துவிட்டார்கள்...


அவர்களுக்கு ,மன்னனை காப்பாறிய தியாகச் செம்பால் என்ற 
பட்டம் கொடு..



2 ஏப்., 2012

அவசரத்தில்..சிரிக்க மட்டும்,

ஒண்ணுமில்லே இடைத்தேர்தலுக்காக போட்ட ரோடு 
அவசரத்தில் கொஞ்சம் அதிகமா போட்டுட்டாங்க 


பயம்பயம்பயம்பயம்
==========================================
டேய் மச்சான் அவன் ரொம்பதான் சீன் விடுறான் ?


எப்படிடா ?


எங்க வீட்டில் யானை குதிரை,சிப்பாய்கள் இருக்கு என 
சொன்னதை  நம்பி 
வீட்டுக்கு போய் பார்த்தால் செஸ் போர்டை காட்டுறா
==========================================