15 மார்., 2012

மாத்தி யோசி... சிரிக்க மட்டும் !



எ‌ன்ன‌ங்க ந‌ம்ம குடு‌ம்ப‌த்து‌க்காக நா‌ன் நாயா உழை‌க்‌கிறே‌ன்‌னு அடி‌க்கடி சொ‌ல்லு‌வீ‌‌ங்களே?

ஆமா‌ம் அது‌க்கு எ‌ன்ன இ‌ப்போ?

இ‌ல்ல ந‌ம்ம ‌‌வீ‌ட்டு வாச‌ல்ல நா‌ய் வ‌ண்டி வ‌ந்‌திரு‌க்கு அதா‌ன் கே‌ட்டே‌ன்.


.......................................................................................
என்னங்க நான் இங்கு நாய் போல கத்துகிட்டு இருக்கிறேன் அப்படி என்ன யோசனை...

ஒண்ணுமில்லே நம்ம கல்யாண சீனை மாத்தி யோசித்தேன்....

ஊனம் ஊமையானது...


அன்புக்குள் 
அடங்கி 
ஊனம் ஊமையானது 

உன் வீட்டுக்கும் உனக்கும் அழகு


காய்கறிகள் 
கலந்த உணவு,
உண்டால் இல்லை, 
பின்விளைவு...

விலையோ குறைவு
பலனோ நிறைவு...
தெளிவு 
கொண்டு 
உண்ண பழகு...

பளபளக்கும் உடல் 
கிடைக்கும் பாரு...
காய்கறி விதைத்து வளரு,
நாளைய தலைமுறைக்கு 
பாதுகாப்பு...
உன் வீட்டுக்கும்
உனக்கும் அழகு

இன்று...


மதம் நம்பிக் கொல்வதால்
உலகில் இறந்தது
மானிடம்!
அதிகாரமும்,ஆணவமும் 
கூட்டணி சேர 
மனிதன் மிருகமாய்....


மனம் நம்பிக்கை
கொள்வதால்
இன்னும்
மனிதம்!


14 மார்., 2012

உனக்காக துடிக்கிறேன்!

 

விடிந்தது உலகம் என கொண்டேன்-விரலை
விரித்து எழுந்த சூரியனை கண்டு!
வீதியில் பார்த்தேன் விடியவில்லை-விழுந்த
வேட்டியை மறந்த மனிதனை கண்டு!

மது ஒன்று போதும் என்று-தினம்
மறவாமல் குடிப்பது உன் எண்ணம்!
மதுவோடு உன் உடலும் கரைவது.-கண்டு
மனம் கொதிக்கிறது தினம், தினம்!

நீ யாரோ நான் அறியவில்லை-நீ
நினைவின்றி காணும் போது பதறுகிறேன்!
நீ விடியலை தேடாமல் குடிப்பதை கண்டு -கண்களில்
நீர் வடிக்கிறேன் !உனக்காக துடிக்கிறேன்!

உன் சக மனிதனாய்...
உன் சகோதரனாய்...
உன் விடியலுக்கு ஏங்குகிறேன் ...!