6 பிப்., 2012

செயலைக் கவனமாகச் செய்!



இன்றைய ஆட்சிக்கு அஸ்திவாரம்,

நேற்றைய தோல்விக்கு,

உதாரணம்!


செய்வதை திருத்தி செய்தால்

வெற்றி உன் பக்கம்,

தோல்வியில் துவண்டு போனால்

வெற்றி எனபது அடுத்தவர் பக்கம்!


வெற்றி பெற்றபின்
தன்னை அடக்கி
வைத்துக்கொள்பவன்
இரண்டாம் முறையும்
வென்ற மனிதனாவான்!





தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.



கடி கடி....

நாய்க்கு நாலுகால் இருந்தாலும் 
ஒருக்காலும் அதனால்  மிஸ்டு கால் 
பண்ணமுடியாது.....

=============================
சோப்புக்கள் பல இருந்தாலும் 
ஆண்களுக்கு என்று இருப்பது 
ஒன்று தான் அது எது ?

நீயே சொல்லுப்பா 

வேற எது லைப்பாய் சோப்புதான் 

மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்மண்டையில் அடிவிழும்

சோற்றுக் கற்றாழை




சோற்றுக் கற்றாழை
இது ஒரு 


மருத்தவ நிவாரணி...

இலைச்சாறுகளில் 
ஆந்த்ரோகுயினோன்கள்இ
ரெசின்கள் பாலிசக்கரைடு 
மற்றும்...
ஆலோக்டின்பி’ எனும் 
பல வேதிப்பொருட்கள் உள்ளன.

பெண்களுக்கு என்றும் ராணியாய்,
வரம் தரும் 
அடுக்கு மடல் கொண்ட செடி.

இது ஒருவகை இனிப்பு கூழ்,
இது மூல நோய்க்கும்,
வயிறுப் புண்ணுக்கும்
இலையின் சாறு மருந்தாகும்.

அழகுக்கு 
அழகுச் சேர்க்கும்.
சோற்றுக் கற்றாழை
தாயகம்
தென்னாப்பிரிக்கா 
மற்றும் அரேபிய நாடாகும்...

இதை நாடாமால் போனால்
அரியசெடியை இழந்த நிலையாகும்.

இதன் மருத்துவ குணம் 
அறிந்தும்
இன்னும் நாம் வீட்டில் 
பயிரிட மறுத்ததால்,
இனியும் இல்லாமல் போனால்
நமது இயலாமையைக் குறிக்கும்...

வரும் தலைமுறை சபிக்கும்
இளமைக்கு 
இது தேவை என்றால்
இன்னுமா தயக்கம்...
பயிரிட ஏனப்பா சுனக்கம்?

இதன் மருத்துவம் 
பயன் தரும்.
இளமை தரும்
சோற்றுக் கற்றாழை,
நமக்கு என்றும் சொந்தம்

1 பிப்., 2012

வெத்து வெட்டா ?


வடிவேலு:

அட அரசியலு பேசியது 
ஒரு தவறா 
நான் வேணா கட்சி ,காட்சி மாறி 
விடுகிறேன்:

விஜயகாந்த்:

எனக்கு அரசியலில் புடிக்காத 
வார்த்தை தப்பை தப்பா செய்யாமல் 
இருப்பது தான்...

வடிவேலு :

இதை யாருஎழுதி கொடுத்தது ?

விஜயகாந்த்:

உனக்கு ஐயா ...
எனக்கு அம்மா ...

வடிவேலு :
அப்ப
நம்ம இரண்டு பேரும் சும்மா 
வெத்து வெட்டா ?

சீத்தாப்பழம்...(மருத்துவக்கவிதை)












பல்லுக்கும்
எலும்புக்கும்,
சீத்தாப்பழம் 
சிறப்பு பெரும்,

முடி உதிர்வை தடுக்க,
பலத்தின் விதைப்பொடி
விடைசொல்லும்.

மேலும் 
சிறுபயறு மாவு 
கூட்டணி சேர,
பேன்கள் ஒழிந்துப்போகும்...

முடி மிருதுவாகும்
அழகு சேர்க்கும் வழியில்
சித்தாப்பழம்
தலைமை ஏற்கும்.

இதயம் காக்கப்படும்
பலப்படும்
காசநோயை விரட்ட 
துணை நிறுக்கும்...

பழத்தின்  பலன்களை 
அறிய...
இந்த சீத்தாப்பழம் 
உண்டு வாழ்ந்தால்
உண்மை புரியும்...