2 நவ., 2011

மிளகு.!மருத்துவக் கவிதைகள் .





மிளகு.!
விஷத்தை முறிக்கும்
விசியம் இதிலிருக்கு.

கை வைத்தியத்தில்
மிளகுக்கே முன்வுரிமை.

எதிரி வீடுக்கும்,
கைப் பிடி மிளகோடு
பயமின்றிப் போகலாம்.

மிளகு மற்றும் வால் மிளகு 
என இரு வகைப்படும்.

மிளகுக்கு 
மலையாளி, குறுமிளகு 
கோளகம்.என்ற 
பெயரும் உண்டு 

கொடிவகை செடி.
இதன் காய்களை
காயவைத்தாலே 
மிளகு அவதாரம்.

மிளகுப்பற்று கண்டால் 
தலைவலி ஓடும் 

மிளகுத் தூளும் 
உப்புத் தூளும் 
கலந்து பல் துலக்கி வர 

பல்வலி, ஈறுவலி, 
வாயில் துர்நாற்றம் 
எல்லாம் மறையும்.

மிளகு ரசம் என்றால்
சாதமும்
சத்தமில்லாமல் போகும்.

கண் திருஷ்டிக்கு
கண் கண்ட பொருள்.

ஊக்கம் பெறவும்
குறைகள் போக்கவும்...

விஷத்தை விரட்டும் 
மிளகு மருந்தாகும்

மிளகை நீ உண்டுவந்தால் 
பல நோய்க்கு தீர்வாகும். 

1 நவ., 2011

அதிகாலை கனவு...

ஏர் பிடித்த
கரங்கள் இன்று 
கவலைக்கும்
களைப்புக்கும்
கணினியோடு 
உடன்படிக்கை.

வயலும் வாழ்வும்
புதிய மாற்றம்.

விவசாயி விபரம் காண
கூகுளில் தேடும் நேரம்...

மீண்டும் சாகுபடி
நிலத்தில்.

கட்டப்பட்ட வீடுகள்
எல்லாம் இடிக்கப்பட்டு...

விளைச்சலுக்கு நிலமாய்
மாறுமோ என்ற அச்சத்தோடு 
விவசாயா மண்ணில் 
கட்டிய வீட்டு எஜமானர்கள்.

வாங்கிய மனைகள் 
விற்கமுடியாமல்
மனை வியாபாரிகள்.

காலம் மாறியது
விவசாயி நிறத்தோடு.

கண் விழித்தேன்
எல்லாம் கனவாய்...

அதிகாலை கனவு 
பலிக்குமா என்ற 
குழப்பத்தோடு...

எனது வேலைகள் 
தொடக்கம் கணினியோடு...

விவசாயி.


ஏர் பிடித்த களைப்புக்கு
கணினியே இனி
ஆகாரம்.

இன்னும் இங்கு ....



வாழ்ந்த நிலை அறிய 
கரைந்துப்போன 

சேமித்த  நிமிடங்களை 
நிறுத்திப் பார்த்தேன் 

தூக்கத்தோடு 
சில மணித்துளிகள்

திரை அரங்கத்தில் 
சில மணித்துளிகள்,

சில்லறையாய் 
சிதறிய நிலையில்...

வாழ்க்கையில் கால் பகுதி 
சிலவான நிலை.

மீண்டும் கணக்கில் 
பள்ளி கூடத்திலும்...

நண்பர்களுடனும் கழிப்பட்ட
நேரத்தை பார்த்தால்...

பகல் நிலவாய் நிலையில் 
பாதி வாழ்க்கை போய்விட்டது.


உழைக்க வந்து  வருடங்கள் 
பல ஓடிவிட்டது.

வாழ்க்கையை பார்த்தேன் 
நரை தான் மிச்சம் என்றது.

நானும் சொல்கிறேன் 
வாழ்கிறேன் என்று 

கூட்டி கழித்து பார்த்தால் 
காணமல் போன வாழக்கை 

எங்கே என்று தேடுகிறது....
எள்ளி நகைக்கிறது 

இன்பமுமில்லாமல் 
இறப்புகளுக்கு கூட போகாமல்

சுப காரியத்திலும் 
சுவாசிக்காமல்....

சீய் என்னடா வாழ்க்கை 
எனது உள்ளம் கேட்க...

சொரனையற்ற நிலையில் 
சிந்திக்க மறந்து 

சிரிப்புடன் நான் 
இன்னும் இங்கு ....

நம்பி வாழ்ந்தால் ...


நீ திருந்தாத நிலை 
தந்தை பார்த்து 
திட்டினால் உடனே தூக்கு...

தேர்வில் தோல்வி 
மலையிருந்து குதித்து   பலி 


காதல் தோல்வியால்  தற்கொலை
காதல் மட்டுமா  வாழ்க்கை

வாழ்கையை உணராமல்,
வாழ மறுக்கும் கோழைகள்.

இன்பத்தை எதிர்பார்த்து,
துன்பத்தை தாங்கிக்கொள்ள
விரும்பாதவர்கள் நீங்கள்.

இரு கைகள் இருக்கையில்,
உனக்கு என்ன பயம்.


இறைவன் இருக்கையில்
உனக்கு என்ன அவசரம்.

மரணம் வரும் வரை 
வாழ்ந்துப்  பார்ப்பது பெருமை 

நம்பிக்கை 
துரத்தும் தற்கொலை 
நம்பி வாழ்ந்தால்  தோல்வியில்லை.

இருக்கும் வரை உழைத்து வாழ்ந்தால்
உலகம் வாழ்த்தும் உன்னை.