17 ஜூன், 2012

அரசு வேலை கேட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்....



தமிழகம் முழுவதும் பிளஸ் 2 மாணவ, மாணவியர், 4 லட்சத்து, 67 ஆயிரத்து, 886 பேர், தாங்கள் படித்த பள்ளிகள் மூலம் அரசு வேலை கேட்டு வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில், 31 ஆயிரத்து, 732 பேர் பதிவு செய்துள்ளனர். பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவு வசதி செய்யப்பட்டதன் மூலம், மாணவ, மாணவியரின் அலைச்சல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும், இதன் மூலம் பதிவு செய்யும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.களேபரம்: தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் கொடுத்த நாளில் இருந்து, ஒரு வாரம் வரை மாவட்ட வேலைவாய்ப்பு பதிவு அலுவலகம் களேபரமாகும் நிலை இருந்தது. மதிப்பெண் பட்டியல் பெற்ற அனைத்து மாணவ, மாணவியரும், மாவட்ட தலைநகரில் இருக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஒரே நேரத்தில் குவிவதால், இட நெரிசல், குளறுபடி, மாணவ, மாணவியர் மயக்கம் அடைந்து விழுந்தது உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்கதையாக இருந்தன. தற்போது இப்பிரச்னைகளைத் தவிர்க்க, அந்தந்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவை செய்து முடிக்க, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி, மெட்ரிக், சுயநிதி பள்ளிகளுக்கும் ஆன்-லைன் வசதி வழங்கப்பட்டிருந்தது. இதில், அந்தந்த பள்ளிகளில் படித்த மாணவ, மாணவியரின் பதிவேடுகளை சரிபார்த்து, வேலைவாய்ப்பு பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தது.
முன்னுரிமை: மேலும், மே 30ம் தேதி முதல், ஜூன் 13ம் தேதி வரை பதிவு செய்யப்படும் அனைத்து பள்ளி மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு பதிவும், மே 30ம் தேதியில் முன்னுரிமை பட்டியல் அமையுமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், கூட்ட நெரிசல் இல்லாமல், குளறுபடியின்றி பதிவு செய்தது மட்டுமின்றி, மாணவ, மாணவியரின் அலைச்சலும் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாணவ, மாணவியரும், இதற்காக மாவட்ட தலைநகரைத் தேடி, நீண்ட நேரம் காத்திருந்து பதிவுசெய்யும் சூழலை மாற்றியமைத்து, அவரவர்

ஊரிலேயே பதிவு செய்தது, மாணவர்களின் சிரமத்தை வெகுவாகக் குறைத்துள்ளது. இதனால், வேலைவாய்ப்பு பதிவு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளில் தேர்ச்சி பெறுபவர்களில் சராசரியாக, 50 சதவீதம் முதல், 60 சதவீதம் வரையே பதிவு செய்து வந்தனர். பள்ளிகளில் பதிவு செய்யும் புதிய முறை அமல்படுத்தப்பட்ட பின், சராசரியாக, 80 சதவீதம் பேர் பதிவு செய்கின்றனர்.
முதலிடம்: தமிழகத்தில் உள்ள, 32 மாவட்டங்களிலும் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல், கடந்த 13ம் தேதி மாலை 6 மணி வரை, 4 லட்சத்து, 67 ஆயிரத்து, 886 மாணவ, மாணவியர் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட வாரியாக பதிவு செய்தவர்கள் விவரம் வருமாறு: சென்னை 31,732, மதுரை 24,538, சேலம் 23,799, கோவை 22,901, திருநெல்வேலி 22,179, திருச்சி 22,004, வேலூர் 21,833, திருவள்ளூர் 20,228, காஞ்சிபுரம் 20,173, நாமக்கல் 18,608, விழுப்புரம் 18,287, தஞ்சாவூர் 16,799, ஈரோடு 16,781, கன்னியாகுமரி 16,700, விருதுநகர் 15,342, கடலூர் 14,236, திருப்பூர் 13,969, திண்டுக்கல் 11,968, புதுக்கோட்டை 10,410,தூத்துக்குடி 10,408, நாகப்பட்டினம் 10,282, கிருஷ்ணகிரி 9,943, தருமபுரி 9,901, சிவகங்கை 9,612, ராமநாதபுரம் 9,14

, திருவாரூர் 8,467, தேனி 7,917, கரூர் 5,117, அரியலூர் 4,914, பெரம்பலூர் 4,845, நீலகிரி 4,603. இதில், அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த, 31 ஆயிரத்து 732 பேரும், குறைந்த பட்சமாக, நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 4,603 பேரும் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வு முடிவுகள், கடந்த 4ம் தேதி வெளியானது. மதிப்பெண் பட்டியல், வரும் 21ம் தேதி முதல் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது. அன்று முதல், படித்த பள்ளிகள் மூலம் வேலைவாய்ப்புக்காக மாணவ, மாணவியர் பதிவு செய்ய சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.

வேலை கிடைக்க நாமும் வாழ்த்துவோம் 

நன்றி தினமலர் - நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக