16 ஜூன், 2012

கலாம்'' என்பதற்கு தமிழில் "கலகம்''...கலைஞர் ,


தி.மு.க. தலைவர் கலைஞர் 15.0-6.2012 அன்று மாலை சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு: 
கேள்வி:  உங்களிடம் முதலில் அந்தோணி மூலமாக சோனியா காந்தி சொல்லி அனுப்பிய குடியரசு தலைவர் வேட்பாளர் பெயரும், இன்று அறிவிக்கப்பட்ட பெயரும் ஒன்று தானா?
பதில்:  ஆமாம். அதே பெயர் தான்.
கேள்வி:  மத்திய அமைச்சரவையிலே மாற்றம் வரப்போவதாகப் பேச்சு அடிபடுகிறது. அதில் தி.மு.க.வுக்கு வாய்ப்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறீர்களா?
பதில்:  நாங்கள் அப்படி ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.
கேள்வி:  ரெயில்வே மந்திரி தி.மு.க.வுக்கு கிடைக்கப்போவதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ஏற்கனவே இரண்டு இடங்கள், தி.மு.க.வுக்கு உரியது காலியாக இருக்கிறது. எனவே தி.மு.க.வுக்கு தற்போது மத்திய மந்திரிசபையில் மேலும் இடங்கள் கிடைக்குமென்று சொல்லப்படுகிறதே?
பதில்:  இதையெல்லாம் எதிர்பார்த்து நாங்கள் செயல்படவில்லை. மத்திய அரசை சேர்ந்த பிரதமரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் மந்திரிசபை விரிவாக்கம் பற்றி யோசித்து முடிவெடுப்பார்கள். நாங்கள் ஒன்றும் பதவிக்காக தி.மு.க.வின் கோரிக்கைகளை மாற்று வியாபாரம் செய்ய விரும்பவில்லை.
கேள்வி:  குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.க.வின் நிலைப்பாடு என்ன?
பதில்:  இதே நிலைப்பாடு தான்!
கேள்வி:  தமிழ்நாட்டில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி பெறுவதற்கும், மற்ற மாநிலங்களில் ஆளுங்கட்சி தோற்பதற்கும் என்ன காரணம்?
பதில்:  வெற்றி தோல்விதான் காரணம்!
கேள்வி:  அண்மையில் நடைபெற்ற ஐந்து மாநில தேர்தல்களிலும், தற்போது ஆந்திர இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது. அடுத்து வரவிருக்கின்ற பாராளுமன்றத் தேர்தலில் இந்தத் தோல்வி எதிரொலிக்குமா?
பதில்:  வெற்றி தோல்வியை எதிரொலிக்க முடியாது.
கேள்வி:  மம்தா பானர்ஜி சொல்லும்போது அப்துல்கலாம்தான் வேட்பாளர் என்பதைப்போல சொல்லியிருக்கிறாரே?
பதில்:  "கலாம்'' என்பதற்கு தமிழில் "கலகம்'' என்றும் ஒரு பொருள் உண்டு. எப்படியோ குடியரசு தலைவர் தேர்தலிலும் "கலகம்'' உருவாகியிருக்கிறது.
இவ்வாறு தி.மு.க. தலைவர் கூறினார்.

கடந்த முறையும் கலாம் களம் இறங்க கூடாதற்க்கு காரணங்கள் சொல்லப்பட்டன...
இந்த முறை வழக்கம் போல் வாய் ஜாலத்தின் மூலம் புது உகமானம் 
சொல்லிவிட்டார்...
கலகமா இல்லை 
கலக்கமா ?
கழகம் ஆதரிக்கும் நபரே வெற்றிக்கு களம் காண வேண்டும் என்ற கட்டளையா?
இந்த கலகத்தால் ,கழகத்துக்கு மந்திரி பதவி உண்டு எனபது தெளிவாகிவிட்டது....
சதுரங்கம் துவங்கிவிட்டது வெற்றிக்கு உரியவர் யார் பார்க்கலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக