7 ஜூன், 2012

காடை வளர்க்கவும், கொல்லவும் தடை :




காடை வளர்க்கவும், கொல்லவும் தடை : 
மீறினால் 25 ஆயிரம் அபராதம்




உணவுக்காக அதிகளவில் காடைகள் கொல்லப்பட்டு வருவதால், அரிய வகை உயிரினங்கள் அட்டவணைக்குட்பட்ட பட்டியலில் நான்காவதாக மத்திய சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சகம் சேர்த்து, அவற்றை வளர்க்கவும், உணவுக்காக கொல்லவும் தடைவிதிக்கப் பட்டுள்ளது. 


இந்தியாவில் ஜப்பானிஸ் காடையை, வனத்துறை அனுமதியுடன் வீட்டில் சிலர், செல்லப் பிராணியாக வளர்த்தும்; ஒரு சிலர் உணவுக்காக வேட்டையாடியும் வருகின்றனர். சில நோய்களுக்கு மருந்து என்றும், சாப்பிடுவதால் உடம்பிற்கு அதிகசக்தி வரும் என்ற கருத்தால், தற்போது இவை பெரும்பாலான ஓட்டல்களில் விருப்ப உணவாகவும் உள்ளது. 


இந்த நிலையில், தற்போது உணவுக்காக காடை அதிக ளவில் கொல்லப்பட்டு வருவதால், அரிய வகை உயிரி னமாக மாறி வருகிறது. 


இதனால், வன உயரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, அரிய வகை உயிரினங்கள் அட்டவணைக்கு உட்பட்ட (ஒன்று முதல் நான்காவது) பட்டியலில், தற்போது காடை (நான்காவதாக) சேர்க்கப்பட்டு உள்ளது. 


இதை தொடர்ந்து , மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம், காடைகளை வீட்டில் வளர்க் கவோ, அவற்றை கொல்லவோ தடை விதித்துள்ளது.


இது குறித்து, வனத் துறை அதிகாரி டேவிட் ராஜ்,      ‘’ அரிய வகை உயிரின பட்டியலில் காடை சேர்க்கப்பட்டுள்ளதால், ஓட்டல்களில் காடை உணவு வகைகளை பயன்படுத்த தடை செய்யப்பட்டு உள்ளது. தடையை மீறினால், அவர்கள் மீது வனத்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும். வன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972ன் படி, அட்டவணைக்குட்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள காடையை வளர்த்தாலோ, கொன்றாலோ, 25 ஆயிரத்துக்கு மேல் அபராதமாக வசூலிக்கப்படும’’என்று கூறினார்.

1 கருத்து: